’சட்டவிரோத குடியேறிகள்’ என்னும் நிலை மாறுவது எப்போது? – செந்தில்
இன்றைய உலக ஒழுங்கு போரையும் உள்நாட்டுக் கலகங்களையும் போராட்டங்களையும் தவிரிக்க முடியாதபடி உருவாக்கிக் கொண்டே இருப்பது போல் ஏதிலிகள் என்ற வகையினத்தையும் இடையறாது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் உக்ரைன் மீதான வன்கவர் போரை...