தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அருண்சோரி மற்றும் பல்வேறு அமைப்புத் தோழர்கள் மீதும் தொடர்ந்து வழக்குப் பதிவு. தமிழக அரசின் பேச்சுரிமை, கருத்துரிமை மறுப்புக்கு கண்டனம்
அண்மையில் நடந்த அரங்கக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழக அரசின் காவல்துறை பல்வேறு இயக்க ஆற்றல்கள் மீது வழக்குப்போட்டு வருவது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதில் பெரும்பாலானவைக் காவல்துறையில் அனுமதி பெற்று நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும். கடந்த ஆகஸ்ட் 28 இல்...