காவி – கார்ப்பரேட் அரசை நெருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் வர்க்க போராட்டம் – சமூக பொருளாதார காரணிகள் என்ன ?
’வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறை வரலாற்றில் திருப்புமுனை தருணம்” என பிரதமரால் மொழியப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியத் தலைநகரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மூழ்கியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...