அண்ணல் அம்பேத்கரைக் காவிமயமாக்கும் சங்கிகளின் முயற்சிக்கு கண்டனம் தமிழ்நாடு அரசே, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத்தை கைது செய்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அறிக்கை
திசம்பர் 6 – அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் அன்று இந்து மக்கள் கட்சி சார்பாக கும்பகோணம் பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், அம்பேத்கர் காவிச் சட்டை, நெற்றிப் பட்டை , குங்குமப் பொட்டு அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தைப் போட்டிருந்தனர். தான்...