தமிழர்கள் பாசகவுக்கு ஏன் வாக்களிக்கக் கூடாது?

19 Mar 2024

எல்லாக் கட்சிகளைப் போல பாசகவும் ஒரு கட்சி. அதை மட்டும் ஏன்
இவ்வளவு எதிர்க்கிறீர்கள் என்று சிலர் கேட்கக் கூடும். ஆனால், இந்தியாவில்
உள்ள வேறு எந்தக் கட்சியைவிடவும் பாசக மிகவும் ஆபத்தான கட்சி. அதன்
கருத்தியல் மிகவும் பிற்போக்கானது. மற்ற எல்லாக் கட்சிகளில் இருந்தும்
மாறுபட்டு எந்த அளவுக்கு மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது? குறிப்பாக
தமிழ், தமிழர் தமிழ்நாட்டுக்கு எதிரானதாக பாசக இருக்கிறது என்பதை இந்த
பட்டியல் விளக்கும்.

 1. ஈகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி, உயிரைக்
  கொடுத்து நிலைநாட்டிய ’தமிழ்நாடு என்ற பெயரை அடியோடு
  வெறுக்கும் ஒரே கட்சி பாசக.
 2. ’மொழிவழி மாநிலங்களே கூடாது’ என்பதையும் இந்தியாவை வெறும்
  நிர்வாக அலகுகளாக மாற்ற வேண்டும் என்பதையும் கொள்கையாக
  கொண்ட ஒரே கட்சி பாசக.
 3. ஒன்றுபட்ட தமிழ்நாட்டை மூன்றாக உடைக்க வேண்டும் என
  சதித்திட்டம் தீட்டும் ஒரே கட்சி பாசக.
 4. கோவையின் வருவாய் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கு போகிறது
  என்று பொய் சொல்லி தமிழர்களுக்கு இடையே வெறுப்பை வளர்க்கத்
  துடிக்கும் ஒரே கட்சி பாசக.
 5. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை தமிழ்நாட்டில் இருந்து
  பிரித்து ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்ற நினைக்கும் ஒரே கட்சி பாசக
 6. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலத்தை ( ஜம்மு
  காஷ்மீர்) உடைத்து ஒன்றிய ஆட்சிப்புலமாக மாற்றிய ஒரே கட்சி
  பாசக.
 7. கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்று முழக்கம் வைத்து மாநிலக்
  கட்சிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று வெளிப்படையாகப் பேசும்
  ஒரே கட்சி பாசக.
 8. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைப் புகுத்தி மாநிலங்களை
  செல்லாக்காசாக்க நினைக்கும் ஒரே கட்சி பாசக.
 9. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து தமிழ்நாடு
  உள்ளிட்ட தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து வட
  இந்தியர்களின் ஆதிக்கத்தைப் பெருக்கத் திட்டமிடும் ஒரே கட்சி பாஜக.
 10. திருவள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் காவிச் சாயம் பூசத் துடிக்கும்
  ஒரே கட்சி பாசக
 11. உதட்டில் தமிழ் என்னும் தேன் தடவிக் கொண்டு உள்ளத்தில்
  சமற்கிருதத்தைப் போற்றி நாடகமாடும் ஒரே கட்சி பாசக
 12. தமிழ் மொழி சமஸ்கிருதத்தைவிட தொன்மையான மொழி என்பதை
  மறுக்கும் ஒரே கட்சி பாசக.
 13. தமிழ்நாட்டு கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதையும்
  குடமுழுக்கு செய்வதையும் எதிர்க்கும் ஒரே கட்சி பாசக.
 14. தமிழக சட்டப்பேரவையில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படுவதை
  விரும்பாத ஒரே கட்சி பாசக
 15.  தமிழ்நாட்டின் மீது காழ்ப்புணர்வுக் கொண்டு தமிழ்நாட்டுக்கு வரும்
  முதலீடுகளைத்  தடுத்து குஜராத்துக்கும் உத்தர பிரதேசத்திற்கும்
  மடைமாற்றி தமிழ்நாட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போடும் ஒரே
  கட்சி பாசக.
 16. கோவையில் மதக் கலவரத்தை ஏற்படுத்தி அதன் வளர்ச்சியை 20
  ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிய ஒரே கட்சி பாசக.
 17. தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களை தாக்கிறார்கள் என்று பொய்யான பரப்புரை செய்து தமிழர்களை வன்முறையாளர்களாக சித்திரிக்கவும் தமிழர்களுக்கு எதிராக இந்தி பேசும் மாநிலங்களில் வெறுப்பை வளர்க்கவும் முயலும் ஒரே கட்சி பாசக.
 18. தமிழ்நாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து கர்நாடகாவில் குண்டு வைக்கிறார்கள் என்று தேர்தல் அரசியலுக்காக தமிழர் – கன்னடர் பகை வளர்க்கப் பார்க்கும் ஒரே கட்சி பாசக.
 19. கோவை, திருப்பூரில் உள்ள சிறுகுறு தொழில்களை அழித்து அவற்றை
  குஜராத் போன்ற வட மாநிலங்களுக்கு திருப்பிவிடும் ஒரே கட்சி பாசக
 20. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கூடாது என
  சொல்லும் ஒரே கட்சி பாசக.
 21. போராடியவர்களைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சரியே என்றும்
  ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்றும்
  சொல்லும் ஒரே கட்சி பாசக.
 22. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை எதிர்க்கும்
  ஒரே கட்சி பாசக
 23. பார்ப்பனர் என்ற் ஒரு சாதியை மட்டுமே தலைமையாக கொண்ட்
  ஆர்.எஸ்.எஸ். ஆல் வழிநடத்தப்படும் ஒரே கட்சி பாசக
 24. நூறாண்டு கால போராட்டத்தின் வாயிலாக பிற்படுத்தப்பட்ட ,
  தாழ்த்தப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வ ந்துள்ள சமூக நீதி
  இயக்கத்தை எதிர்த்து நின்று பார்ப்பன மேலாதிக்கத்தை வளர்க்க
  துடிக்கும் ஒரே கட்சி பாசக.
 25. ”விஸ்வகர்மா யோஜ்னா” என்ற பெயரில் 21 ஆம் நூற்றாண்டிலும் குலக்கல்வி முறையைத் திணிக்கும் திட்டத்தை அறிமுகம்செய்து செயல்படுத்திவரும் ஒரே கட்சி பாஜக.
 26. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை எதிர்க்கும் ஒரே கட்சி பாசக
 27. அறநிலையத் துறையைக் கலைத்து கோயில்களை பார்ப்பனர்களின்
  கொள்ளை மடமாக மாற்றத் துடிக்கும் ஒரே கட்சி பாசக
 28. தமிழர்களின் சொத்தான சிதம்பரம் கோயிலை தீட்சிதப் பார்ப்பனர்களின்
  கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சொல்லும் ஒரே கட்சி பாசக
 29. தமிழர்களை மதத்தின் பெயரால் இந்து, கிறித்தவ, இசுலாமியர் எனப்
  பிளவுபடுத்தி அரசியல் செய்யும் ஒரே கட்சி பாசக
 30. இசுலாமியர்களை வேட்பாளராக நிறுத்தாத, இசுலாமியர்களின்
  பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து திருட்டுத்தனமாக நீக்குகிற,
  இசுலாமியர் வாக்குகளே வேண்டாம் என்று கருதும் ஒரே கட்சி பாசக.
 31. மாட்டிறைச்சியின் பெயரால் மனிதனை அடித்துக் கொல்லும்
  கொடூரத்தை ஊக்குவிக்கும் ஒரே கட்சி பாசக.
 32. இஸ்லாமியர், கிறித்தவப் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்புணர்வு
  செய்வதை ஊக்குவிக்கும் குற்றவாளிகளைக் பாதுகாக்கும் ஒரே கட்சி
  பாசக
 33. ஆர்.எஸ்.எஸ். போன்ற இரகசிய, அரை இராணுவ பயங்கரவாத
  அமைப்பால் வழிநடத்தப்படும் ஒரே கட்சி பாசக
 34. காந்தியார் தொடங்கி கல்புர்கி, தபோல்கர், பன்சாரே, கெளரி லங்கேஷ்
  வரையான மதச்சார்பின்மை கொள்கை உடையவர்களைக் கொல்வதை
  கொள்கையாக கொண்ட ஒரே கட்சி பாசக.
 35. இசுலாமியர்களுக்கு எதிராக கலவரங்களைச் செய்வதற்கு பயிற்சி
  அளிக்கப்பட்ட குழுக்களை வைத்திருக்கும் ஒரே கட்சி பாசக
 36. மசூதிகளிலும் இரயிலிலும் வெடிகுண்டு வைத்து நூற்றுக்கணக்கான
  இசுலாமியர்களைப் படுகொலை செய்யவும் குற்றவாளிகள் தப்பிக்கவும்
  துணைபோன ஒரே கட்சி பாசக
 37. சுதந்திர இந்தியாவில் மக்களவைக்குள் இருந்துகொண்டு ’ஜெய்ஸ்ரீராம்’
  என்று முழக்கம் போட்டு மதச்சார்பின்மையைக் காலில் போட்டு
  மிதிக்கும் ஒரே கட்சி பாசக
 38. பல்வேறு சமய நம்பிக்கைகள் கொண்ட நாட்டில் எல்லோரையும் ‘ஜெய்
  ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லி ஒற்றை நம்பிக்கையைத் திணிக்கும்
  ஒரே கட்சி பாசக
 39. வேலைக்குப் போகும் பெண்களை இழிவுபடுத்தும் சங்கராச்சாரியாரின்
  கொள்கையை ஏற்றுக்கொண்ட ஒரே கட்சி பாசக
 40. தேர்தல் பத்திரமுறை என்ற பெயரில் இரகசியமாக கார்ப்பரேட்களிடம்
  இலஞ்சம் வாங்குவதையும் அமலாக்கத் துறையைப் பயன்படுத்தி பணம்
  பறிப்பதையும் ஆதரிக்கும் ஒரே கட்சி பாசக.
 41. அதானி, அம்பானி போன்றோர் வளங்களை உருவாக்குபவர்கள் என்று
  வெளிப்படையாக சொல்லும் ஒரே கட்சி பாசக
 42. பங்குசந்தையில் வரலாறு காணாத வகையில் முறைகேடுகளைச்
  செய்த அதானியை விசாரிப்பதற்கு சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க
  மறுக்கும் ஒரே கட்சி பாசக
 43. மக்களின் வரிப் பணத்தில் இருந்து மக்களுக்கு கொடுக்கப்படும்
  நலத்திட்டங்களை, நிவாரணத் தொகையைப் ‘பிச்சை’ என்று
  கொச்சைப்படுத்தும் ஒரே கட்சி பாசக
 44. எதிர்க்கட்சிகளே இல்லாத நாடாளுமன்றம் என்பதைக் கொள்கையாக
  கொண்ட ஒரே கட்சி பாசக.
 45. அரசமைப்புச் சட்டத்தை அழிக்கத் துடிக்கும் ஒரே கட்சி பாசக.
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW