பிப் 16, 2024 நாளை ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நாடு தழுவிய அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில் பங்கேற்போம்! வெற்றி பெறச் செய்வோம்!

15 Feb 2024

டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேல் போராடிய விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வைக் குறைக்க வேண்டும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் ஓய்வூதியம், உ.பி விவசாயிகள் போராட்டத்திற்குள் வண்டியை விட்டு விவசாயிகளைப் படுகொலை செய்த கொலைகாரனுக்குத் தண்டனை வழங்க வேண்டும், விவசாயிகள் உற்பத்திப் பொருளுக்கு ஆதார விலை வழங்க, போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது, பொதுதத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக, அமைப்புசாராத் தொழிலாளர்கள் நலன் உள்ளிட்ட கோரிக்கைககளை முன்னிறுத்தி பிப் 16 விவசாயிகள் – தொழிலாளர்கள் அனைத்திந்திய வேலை நிறுத்தத்தை ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) – அனைத்துத் தொழிற்சங்கங்கள் இணைந்த அறைகூவல் பாசிச பாசக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய கதவடைப்பை நடத்த எழுச்சியூட்டியுள்ளது.

டெல்லியில் முற்றுகையிடும் விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசும், முள் கம்பிகளை நட்டு வைக்கும், தடுப்புகளை உருவாக்கும் ஒன்றிய பாசக அரசின் கொடுஞ்செயலுக்கு வன்மையான கண்னங்களைத் தெரிவிப்பதுடன், போராடும் உழவர்களுக்குத் துணை நிற்போம்!

அனைத்திந்திய வேலை நிறுத்தத்தில், மறியலில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி – தமிழ்நாடு உழவர் சங்கத் தோழர்கள் பங்கேற்போம்!
நாடு தழுவிய விவசாயிகள் – தொழிலாளர்கள் கதவடைப்பை, வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம்! இணைந்து நிற்போம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW