நாம் தமிழர் கட்சியினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் பாசிச பாசக அரசுக்கு கண்டனம்!
ஒன்றிய அரசே! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! ஊபாவை திரும்பப் பெறு!

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

10 Feb 2024

கடந்த பிப்ரவரி 2 வெள்ளிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. புகுந்தது; சோதனை நடத்தியது; வழக்கம் போலவே ஆவணங்களை எடுத்துக் கொண்டு சென்றனராம்! விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தனராம்! ஆயுதம் கடந்த முய்னறனராம்!. இது என்.ஐ.ஏ. வின் கூற்று. நீண்ட நாள் கண்காணித்துவிட்டு தான் களம் இறங்கியதாம் என்.ஐ.ஏ. இது ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகனின் கூற்று. மக்களவை தேர்தலுக்குப் பிறகு நாம் தமிழ்ர் கட்சி என்ற ஒன்றே இருக்காது என்பது பாஜகவின் தமிழ் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கூற்று. நாதகவினர் திமுக எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்து வருவதால் அண்ணாமலை அவரைப் போட்டியாக கருதி நாதகவை  முடக்கும் நோக்கில் என்.ஐ.ஏ. வை அனுப்பியிருக்கலாம். தேர்தல் நெருங்கி விட்டது என்பதால் நாதகவை நசுக்கி  செயல்பட விடாமல் தடுத்தால், தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை பங்குபோடும் கட்சி ஒன்றை போட்டியில் இருந்து வெளியேற்றுவதாகும். இன்னொருபுறம் மக்களின்மனங்களைக் கவர்ந்து தமிழ்நாட்டில் வளர முயலாமல், என்.ஐ.ஏ. வின் தோளில் ஏறி வளர்ந்துவிட முடியும் என்று அண்ணாமலை கருதுகிறார் போலும். 

 ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்போரில் 100 க்கு 95 விழுக்காட்டினர் விடுதலைப் புலிகளின் ஆதரவாலர்கள்தாம்.  அப்படிப் பார்த்தால், நாம் தமிழர் கட்சிக்கு எதிராக சொல்லப்படும் காரணத்தை யாருக்கு எதிராக வேண்டுமானாலும் சொல்லலாம்.

இந்து தேசியத்தை எதிர்த்த இஸ்லாமியர்களின் அமைப்புச் செயற்பாட்டை முடக்கும் நோக்கில்தான் க்டந்த காலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பும் அதன் கிளை அமைப்புகள் என்று சொல்லி மாணவர், பெண்கள் , மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட  9 அமைப்புகள் தடைசெய்யப்பட்டன. தமிழ்நாட்டில் அன்றாடம் சோதனை, அடுத்து அடுத்து கைதுகள் என இஸ்லாமியர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது என்.ஐ.ஏ.

 இஸ்லாமியர்களை என்.ஐ.ஏ. குதறிக் கொண்டிருப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோர்கூட நாதகவினருக்கு எதிரான என்.ஐ.ஏ. வின் சோதனை நடவடிக்கைகளைக் கண்டிக்க முன்வந்திருப்பது நல்ல விசயம். 

நாதகவினர் மீது என்.ஐ.ஏ. வை ஏவிவிட்டிருக்கும் மோடி – அமித் ஷா கும்பலை வன்மையாக கண்டிப்பதோடு அரசமைப்பு சட்டத்திற்கு எதிரான என்.ஐ.ஏ. வை கலைக்கவும் ஊபாவைத் திரும்பப் பெறவும் கோருவதற்கு அனைத்து ஜனநாயக ஆற்றல்களும் முன் வர வேண்டும் என்று தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW