சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!
ஊடகச் செய்தி
ஆளுநர் மாளிகை முற்றுகை
நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி
இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை
வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’ என்ற முழக்கத்துடன் தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன் தலைமையேற்றார்.
போராட்டத்தில் பங்குபெற்றோர் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் ஒன்றுகூடினர். ”சட்டமன்றத்திற்கே அதிகாரம் ! ஆளுநர் இரவியே வெளியேறு! ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக செயல்படும் ஆளுநர் இரவியே வெளியேறு!“ போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 200 பேர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்வரும் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளும் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மா-லெ-மா) வின் பொதுச்செயலாளர் பாலன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வாலாசா வல்லவன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க. குணசேகரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் தபசிக் குமரன், மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர் வெற்றிவேல்செழியன், தலித் விடுத்லை இயக்கத்தின் தலைவர் ச. கருப்பையா, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர், முகமது உசேன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் தலைவர் தங்க. குமரவேல், இகக (மா-லெ) செந்தாரகையின் திருவள்ளூர் மாவட்ட அமைப்பாளர் எமன், ஐந்திணை மக்கள் கட்சியின் இணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ், இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாவல், மக்கள் தமிழகம் கட்சியின் தலைவர் நிலவழகன், தமிழ்த்தேச குடியரசு இயக்கத்தின் தலைவர் சிவ. காளிதாசன், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நிர்வாகிகளான செந்தில், பரிமளா, கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தொழிலாளர் சீரமைப்பு இயக்கத்தின் செயலாளர் ம.சுப்ரமணியன், பொருளாளர் கோகுலகிருட்டிணன், தோழர் சேகர், தமிழ்த்தேச இறையாண்மையைச் சேர்ந்த தோழர் மாரியப்பன், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் சென்னை மாவட்ட பொறுப்பாளர் சிறீதர், திராவிட ஒன்றிய சமத்துவக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தகடூர் சம்பத் உள்ளிட்ட தோழமை அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் முற்றுகைப் போராட்டத்தில் கலந்துகொண்டர்.
பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டோர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் புறப்பட்ட போது காவல்துறையினரால் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இப்போராட்டச் செய்தியை தங்கள் ஊடகத்தில் பதிவு செய்து மக்களிடம் கொண்டு சேர்க்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
செந்தில்,
செயலாளர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
99419 31499