பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு! தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையான கண்டனம்!

29 Jun 2023

உத்திரபிரதேசத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காட்டாட்சி அளிக்கும் காவி உற்சாகத்தில் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் மீது கொடுமையான தாக்குதல் நடைபெற்று வருகிறது. வீடுகள் ஜேசிபி வைத்து தகர்க்கப்பட்டு வருகிறது. தலித் மக்கள் மீது தொடர் தாக்குதல் அச்சமூட்டி வருகிறது. நரேந்திரதபோல்கர், கல்புர்க்கி, கௌரிலங்கேஷ் துப்பாக்கிச் சூடு படுகொலைகளின் தொடர்ச்சியாக பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் மீதான துப்பாக்கிச் சூட்டைப் பார்க்க வேண்டியுள்ளது. அடிவயிற்றில் குண்டு பாய்ந்து உயிர் தப்பித்துள்ளார். தலித் பட்டியல், பகுஜன் தலைவர் மீதான இந்தத் துப்பாக்கிச் சூடு உபி பாசக அரசின் பின்னணியில் நடைபெற்றுள்ளது. இதற்குப் பொறுப்பேற்று உபி யோகி அரசு பதவி விலக வேண்டும். தொடர் படுகொலைகளுக்கு கொலையாளிகளிடமே நீதி கேட்ட வேண்டிய அவல நிலை தலைவிரித்தாடுகிறது. அச்சமூட்டும் சூழலில் ஜிக்னேஷ் மேவானி போன்ற தலைவர்கள் கடும் நெருக்கடியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். காவி பாசக அரசியலுக்கு விலை போகாத தலைவர்கள் ஒன்று சிறையில் அல்லது இது போன்ற துப்பாக்கிச் சூட்டில் எனும் நிலை நீடிக்கிறது அவலமான நிலை.வடமாநிலங்களில் தொடங்கிய காவிக் குண்டர்களின் இந்த வகையான துப்பாக்கிச் சூடுகள் தெற்கே கர்நாடகத்திலும் நிகழ்ந்துள்ளது. இது போன்ற ஆர்.எஸ்.எஸ். காவி பயங்கரவாதச் செயல் மக்களுக்கான பொது வாழ்க்கையில் இயங்குபவர்களை அச்சமூட்டும் செயலாகும். தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களுக்கான திட்டங்களை முறியடிக்க வேண்டிய கடமை பாசிச எதிர்ப்பு போராடும் சக்திகள் முன்னாள் சவாலாக உள்ளது. மணிப்பூர் பற்றி எரியும் சூழலில், பாபர் மசூதி இடிப்பு தொடங்கி பயங்கரவாதச் செயல்கள் தலைவிரித்தாடும் நிலை தொடர்கிறது. பாசக யோகி அரசு பதவி விலக வலியுறுத்துவோம்!போராடும் மக்கள் தலைவர்களைப் பாதுகாக்க பொறியமைவை உருவாக்குவோம்…தோழமையுடன்மீ.த.பாண்டியன்தலைவர்,தமிழ்த்தேச மக்கள் முன்னணிபேச: 94431 84051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW