கீழ்வெண்மணி ஈகியர்க்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் அஞ்சலி

பழைய தஞ்சை மாவட்டம் தற்போது நாகபட்டினம் மாவட்டம் கீழ்வெண்மணியில் பண்ணை ஆதிக்கத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டு போராடியதற்காக இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு தலைமையில் பல பண்ணைகள் இணைந்து குழந்தைகள் பெண்கள் உட்பட 44 பேரை ஒரு குடிசையில் வைத்து உயிருடன் கொளுத்திய கொடுஞ்ச சம்பவம் நடைபெற்ற நாளில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்தும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியிலிருந்தும் திரளாக இருசக்கர வாகனங்களில் முழக்கமிட்டபடி பேரணியாக சென்று வீரவணக்கம் செலுத்தினர். இந்நிகழ்விற்கு தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய வெளிய லெனினிய மாவோ சிந்தனை மையக்குழு உறுப்பினர் தோழர் சதீஷ் தலைமை தாங்கினார் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் அருண் சோரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கத்தின் மையக்குழு உறுப்பினர் தோழர் ராஜேஸ்வரி, தமிழ்த்தேச மக்கள் முன்னணியில் தோழர்கள் பிரபாகரன், எழிலன், அரவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் பங்கெடுத்து வீரவணக்கம் செலுத்தினர்.