இந்திய ஒன்றிய அரசின் காவி கார்ப்பரேட் சனாதன அரசியலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

30 Nov 2022

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி மற்றும் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிய லெலினிய மாவோ சிந்தனை சார்பில் இந்திய அரசின் சனாதன காவி-கார்ப்ரேட் அரசியலை  எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கரம்பக்குடி ஒன்றிய அமைப்பாளர் தோழர் கவியரசு தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் தோழர் வை.சி. கலைச்செல்வன் தொடக்க உரையாற்றினார், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ.த. பாண்டியன் நிறைவுரையாற்றினார். தமிழ்நாடு இளைஞர் இயக்கத்தின் அமைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழ்நாடு பெண்கள் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் தோழர் ஆரோக்கியமேரி, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கந்தர்வகோட்டை ஒன்றிய அமைப்பாளர் தோழர் க. அம்பிகாபதி, ஆலங்குடி ஒன்றிய அமைப்பாளர் தோழர் PSM. உதயகுமார், புதுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் தொடர் A கோவிந்தராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் தோழர் இரா. தாமரைச்செல்வன், ந. திருப்பதி, தோழர் ரா. கிருஷ்ணவேணி, தோழர் பெ. நல்லையன், தோழர் த. சுஜாதா, தோழர் க. தமிழ்மாறன் ஆகியோர் கண்டன உரையாற்றினார் நிகழ்வில் பெருந்திரளான தோழர்களும் மக்களும் திரண்டு இருந்தனர்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW