தமிழக அரசே! 1 கோடியே 7 லட்சம் ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை தர மறுக்கும் ஜேப்பியார் தொழிற்நுட்ப கல்லூரியின் மீது நடவடிக்கை எடு!
ஆர்ப்பாட்டம்
04.09.21, சனிக்கிழமை காலை 10 மணி,
திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், காஞ்சிபுரம்
உலகம் முழுவதும் கொரோனா ஒவ்வொரு தனிநபர்கள் தொடங்கி சிறுத்தொழிலகள் வரை பெரும்பாதிப்பைஉருவாக்கியுள்ளது. இருந்தபோதும் ஒப்பிட்டளவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் கற்ப்பித்தல் முறையை (Online) க்கு மாற்றி வழக்கம் போல் லாபகரமாக நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் கட்டாயபடுத்தி, கட்டணம் வசூலிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆசிரியர்கள், அலுவல் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காமல் இருப்பது அல்லது பாதி சம்பளம், வேலை செய்த நாட்களுக்கு மட்டும் என தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கின்றனர்.
குறிப்பாக தமிழ்நாட்டில் புகழ்பெற்று விளங்குகின்ற கல்லூரி குழுமங்களில் ஒன்று ஜேப்பியார் குழுமம். அதில் 2010 ஆண்டு முதல் ஜேப்பியார் தொழிற் நுட்ப கல்லூரி சுங்குவார் சத்திரத்தில்செயல்பட்டு வருகிறது. புதியதாக தொடங்கப்பட்டது என்பதால் அவர்களது குழுமத்தைச் சேர்ந்த சத்திய பாமா பல்கலைகழகத்திலிருந்து தேர்ந்த, அனுபவம் வாய்ந்து 100 மேற்பட்ட தொழிலாளர்களை கல்லூரியின் வளர்ச்சிக்காக பணியிடமாற்றம் செய்தனர். கொரோனா ஊரடங்கு தொடங்கிய உடன் மார்ச் 20லிருந்து தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்திவிட்டனர். குறிப்பாக கல்லூரி பேருந்து ஒட்டுநர்கள், கல்லூரி விடுதியில் பணியாற்றும் Masters, supplier’s, Canteen workers & plumbers என 38 ஊழியர்களுக்கு 17 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.
அவர்களில் பெரும்பாலனோர் 15 ஆயிரத்திற்கும் குறைவான சம்பளம் வாங்குபவர்கள் என்பதும், சராசரியாக 8 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது. கல்லூரி விடுதியில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதால் கூட்டாக சென்று 6 முறை கல்லூரி நிர்வாகத்தை அணுகினர். சம்பளம் பற்றியோ அல்லது பணிக்கு அழைப்பதை பற்றியோ உத்தரவாதம் அளிக்கவில்லை. மேலும் அவர்களின் பணிக்கு மாற்றாக புதிய ஆட்களை, பிற மாநில தொழிலாளர்களை கல்லூரி நிர்வாகம் எடுத்துச் செயல்படுத்த தொடங்கிவிட்டது.
பணிக்கு அழைக்காமல் விட்டதும் அல்லாமல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு பணி பலன்களை வழங்கி , பணியிலிருந்து முறையாக விடுவிப்பதற்கும் நிர்வாகம் முன்வரவில்லை. தொழிலாளர்களிடம் கடைசி வாய்ப்பாக உள்ள தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டனர். கடந்த 6 மாதங்களாக அதிகாரியின் முன் 6 முறை சமரச பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யப்பட்டது. ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அதிகாரியின் முன் வந்து ஆஜர் ஆனார்கள். ஆனால் நிர்வாகத்தின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வராமல் இருப்பது, அல்லது முடிவுசெய்யும் அதிகாரம் இல்லாத நபர்களை அனுப்புவது என நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொண்டது.
இதற்கிடையில் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட்டதால் தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்கில் வங்கி கணக்கை கல்லூரி நிர்வாகம், வாங்கி மேலாளரின் உதவியுடன் முடக்கியது. அவர்களின் சொந்த பணத்தை எடுக்க முடியாதவாறு செய்தனார். சமீபத்தில் ஒரு தொழிலாளியின் தந்தை மரணமடைந்த போது கூட பணம் இருந்தும் எடுக்க முடியாது தவிர்த்த கொடுமையும் நடந்தது.
மேலும் ஒட்டுநர்களின் ஒட்டுநர் உரிமத்தை கல்லூரி நிர்வாக தரமால் முடிக்கியுள்ளது. இதனால் பிற தொழிலுக்கும் செல்லமுடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்
தொழிலாளர்களின் பெயரில் வங்கியில் நிர்வாகம் கடன் வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் 10 ஆண்டுகளுக்கு முன் நிர்வாகம் வரிகட்டாமல், வரி ஏய்ப்பு செய்ததும், வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கது.
இந்த குழுமத்தில் அங்கம் வகிக்கும் சத்திய பாமா பல்கலைகழகம், ஜோசப் பொறியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியல் கல்லூரி, ஜேப்பியார், தொழிற் நுட்ப கல்லூரி என பல்வேறு பெயர்களில் சென்னையை மையமிட்டு பரவி செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும் ஜேப்பியார் ரிப்பாய் கல்வி அறக்கட்டளை, ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை என பல்வேறு பெயர்களில் அறக்கட்டளை பதிவு செய்து அரசு வழங்குகின்ற வருமான வரி சலுகைகளை அனைத்து சலுகைகளையும் பெற்று அனுபவித்து வருகிறது.
கல்வியை சேவையாக செய்வதாகவும், எந்த லாப நோக்கம் இல்லாமல் செய்வதாக அரசையும், சமூகத்தையும் ஏமாற்றுவது மட்டும் அல்லது மற்றொரு பக்கம் தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடுவதும் ,கல்வி என்ற பெயரில் கட்டணக் கொள்ளையும் ஈடுபடுகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 90% பேர் திருமண ஆனவர்கள், 40 வயதை கடந்தவர்கள், பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கல்லூரியில் பணிபுரிவதற்காக குடும்பத்துடன் இடம்பெயர்ந்து கல்லூரிக்கு அருகில் தங்கி பணியாற்றியவர்கள். கல்லூரி நிர்வாகத்தின் லாப வெறி இவர்களின் மொத்த குடும்பம் இப்போது வருமானமின்றி, வாடகை கொடுக்க முடியாமலும், புதிய வேலைக்கும் போக முடியாமலும் தடுமாறி வருகின்றனர். சம்பளம் வழங்காமல் இருப்பது, வங்கி கணக்கை முடக்குவது, சமரச பேச்சுவார்த்தைக்கு முன்வராமல் இழுத்தடிப்பது , என நிர்வாகம் தரம் தாழ்ந்து நடந்துக் கொள்கிறது.
தமிழக அரசு !
1. 17 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள 1 கோடியே 7 லட்சம் ரூபாய் தொழிலாளர்களின் ஊதிய பாக்கியை முழுவதுமாக பெற்று தர நடவடிக்கை எடு!
2. கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி முறையற்று, விதி மீறலீல் ஈடுபடும் நிர்வாகத்தை விசாரிப்பதற்கும் துறைசார்ந்த விசாரணை குழுவை தமிழக அரசு உடனடியாக அமைத்திடு. அதன் மூலம் மாணவர்களின் கட்டணம், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மற்றும் தொழிலாளர்களின் ஊதியம், வரவு, செலவு கணக்குகளை ஆய்வு செய்வது மற்றும் கல்லூரி தரம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
3. தற்காலிகமாக நடப்பு ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை நிறுத்திட்டு!
பெற்றோர்களே! மாணவர்களே!
கல்வி, தங்கும் விடுதி, உணவு என அனைத்தையும் தரமாக பெற வேண்டுமெனில் கல்லுரியில் பணியாற்றும் ஆசிரியர்கள், தொழிலாளர்களின் ஊதியும், அவர்களின் பணி பாதுக்காப்பு மிக அவசியமானது. எனவே சம்பளமின்றி தவிக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தாரீ! துணை நிற்பீர்!
ஜேப்பியார் தொழிற்நுட்ப கல்லூரி தொழிலாளர் சங்கம்
இணைப்பு : சோசலிச தொழிலாளர் மையம் (SWC)
9940963131, 9790729536, 9080508683, 9042625001