ஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்! – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை!

22 Feb 2021

ஊடக செய்தி  –  கண்டன ஆர்ப்பாட்டம்

நாள்: 22-2-2021, திங்கட்கிழமை, காலை 10 மணி

இடம்: நாட்டாண்மை கழகக் கட்டிடம் முன்பு, சேலம்.

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ் , சித்தானந்தன்  உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்பப் பெறு! தோழர்களை விடுதலை செய்! ஊபா கருப்புச் சட்டத்தை உடனடியாக நீக்கிடு! என்.ஐ.ஏ. நிறுவனத்தைக் கலைத்திடு!

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ், ஆகிய மூவரும் கடந்த பிப்ரவரி 7 அன்று ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்து தோழர் சித்தானந்தன் அவர்களையும் நள்ளிரவில் கைது செய்து சேலம் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இன்றுவரை தமிழக காவல்துறையின் கைதுபடலங்கள் தொடர்கின்றன. தோழர்களின் மீதான ஊபா சட்ட பொய் வழக்கின்கீழ் கைது செய்திருப்பதைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. மக்கள் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் கேடுவிளைவிக்கும் “தமிழக விரோத பாசிச பாஜகவை தேர்தல் களத்தில் தோற்கடிப்போம்“ என்ற ஜனநாயகக் குரலை  பல்வேறு மக்கள் இயக்கங்கள் ஒன்றுசேர்ந்து எழுப்பினால் ஊபா சட்டத்தை ஏவுகிறது தமிழக அரசு. பாஜகவின் நடவடிக்கைக்குத் துணைபோகும் தமிழக அரசின் ஜனநாயக விரோதப்போக்கைக் கண்டித்தும், காவல்துறையின் கைது அடக்குமுறையைக் கண்டித்தும் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதை தொடர்ந்து இன்று பிப்ரவரி 22, திங்கட்கிழமை காலை 10 மணிக்கு  சேலம், நாட்டாண்மை கழகக் கட்டிடம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில்  பல்வேறு தோழமை இயக்கங்கள் கட்சிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

  1. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் அனுப்பூர் செல்வராஜ், சித்தானந்தன் உள்ளிட்ட தோழர்கள் மீது போடப்பட்டுள்ள 124A, ஊபா பிரிவுகளின் கீழான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
  2. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் அனைவரும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
  3. கருப்புச் சட்டமான ஊபாவை (UAPA) நிரந்தரமாக நீக்க வேண்டும்.
  4. மாநில உரிமையைப் பறிக்கும் தேசிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ NIA) கலைக்க வேண்டும்.

இவ்வார்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் மு. மாரியப்பன் தலைமை வகித்தார். ததேமமு’வின்  அரசியல் தலைமைக் குழு தோழர் க.விநாயகம் தொடக்க உரையாற்றினார். பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கண்டன உரை ஆற்றினர்.

கண்டன உரையாற்றிய அமைப்புகள்:

தோழர் தொல்.திருமாவளவன், எம்.பி, தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

தோழர் கொளத்தூர்மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தோழர் கோவை சையது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தோழர் கண.குறிஞ்சி, தலைவர் மக்கள் சிவில் உரிமைக்கழகம்

தோழர் புரைதா இஸ்மாயில், இந்திய தேசிய ஜவ்ஹித் ஜமாத்

தோழர் ஜாகீர் அகமது,

தோழர் எ.மோகன், மாவட்டச்செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் ஜே.பிரதாபன், பொதுச் செயலாளர், அருந்ததியர் மக்கள் இயக்கம்

தோழர் ஆ.ஆனந்தராஜ், மாவட்டச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

தோழர் சந்தியூர் பார்த்திபன், மாவட்டத் தலைவர் பகுசன்சமாஜ் கட்சி

தோழர் வழக்கறிஞர் தமயந்தி, ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர பெண்கள் விடியல் மையம்

தோழர் என். பைரோஸ்கான், மாவட்டத்தலைவர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

தோழர் கே. ஜானகிராமன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

தோழர் சி.சோமு, மாவட்ட அமைப்பாளர் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

தோழர் கே.டி.ராஜ், மாவட்ட செயலாளர், சிபிஎம்எல் ரெட் ஸ்டார்

தோழர் கு.தங்கராஜ், மாவட்டச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

தோழர் என்.சையதுஅலி, மாவட்டச்செயலாளர் சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா

தோழர். போ.ப.ராமசாமி, தமிழ் தேசிய மலைநாடு மக்கள் கட்சி

தோழர் பொன்.சரவணன், ஒருங்கிணைப்பாளர், தமிழ் கலாச்சார இயக்கம்

தோழர் தமிழன்,ஆ.யுவராஜ், மாவட்டச்செயலாளர்  தமிழக வாழ்வுரிமைக்கட்சி

தோழர் ம.ராம்ஜி, தலைவர், தாய் தமிழகம் மக்கள் கட்சி

தோழர் அ.வின்சென்ட், புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் மா.கிருஷ்ணகுமார், மாநிலச்செயலாளர், மக்கள் உரிமைக்கான லஞ்சஒழிப்பு இயக்கம்

தோழர் உதயபிரகாஷ், மாவட்டச்செயலாளர், தமிழ்ப்புலிகள் கட்சி

தோழர் த.கண்ணன், மாவட்டச்செயலாளர், மக்கள் சனநாயகக் குடியரசுக் கட்சி

தோழர் சக்தி, மாவட்டச்செயலாளர், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி

தோழர் செ.க.சுப்பிரமணி, மாவட்டச்செயலாளர், மக்கள் அரசு கட்சி

தோழர் கு.குமரேசன், மாவட்டச்செயலாளர், சிபிஎம்எல் மக்கள் விடுதலை

தோழர் பி.நாகராஜ், மாவட்டச்செயலாளர், புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

தோழர் வெங்கடேஷ், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்

தோழர் ஆ.குணா, அமைப்பாளர், சேலம் துப்பரவு தொழிலாளர் குழு

 

நன்றியுரை : கு.மூர்த்தி, சேலம் மாவட்டக்குழு, தமிழ்த்தேச மக்கள் முன்னணி

 

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

சேலம் மாவட்டம்

9994094700, 9994217822

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW