தோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்பப் பெறு!
தோழர்களை விடுதலை செய்!
ஊபா கருப்பு சட்டத்தை நீக்கு!
என்.ஐ.ஏ. வை கலைத்திடு!
பிப்ரவரி 7 அன்று ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்திப் பொய் வழக்கின்கீழ் கைது செய்திருப்பதைக் கண்டித்து பல்வேறு கட்சிகளும் மனித உரிமை அமைப்புகளும் குரல் எழுப்பியுள்ளன. கடந்த 9-2-2021 அன்று கைதைக் கண்டித்து சென்னைப் சேப்பாக்கம் நிருபர்கள் சங்கத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தினோம். அன்று மாலை சனநாயக சக்திகளின் பங்கேற்புடன் இணையவழிக் கூட்டம் ஒன்றையும் நடத்தினோம்.
இதை தொடர்ந்து பிப்ரவரி 13, சனிக்கிழமை சென்னை உள்ள வள்ளுவர் வள்ளுவர்கோட்டம், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருச்சி மரக்கடை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அணைத்து முற்போக்கு இயக்கங்கள் மற்றும் கட்சிகள் பங்குபெற்று கண்டன உரையாற்றினர்.
சென்னை – காலை 11 மணி முதல் மதியம் 2.45 வரை, வள்ளுவர்கோட்டம் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் செந்தில் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ரமணி முழக்கமிட, தலைமைக்குழு உறுப்பினர் தோழர் சதிஸ்குமார் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு பெண்கள் இயக்க சென்னை மாவட்ட பொறுப்பாளர் தோழர் பரிமளா கண்டன உரையாற்றினர்.
கண்டன உரையாற்றிய அமைப்புகள்:
தோழர் வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
தோழர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர், மனிதநேய மக்கள் கட்சி
தோழர் விடுதலை இராஜேந்திரன், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் து.வேணுகோபால், துணைப்பொதுச்செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
தோழர் அ.சா. உமர்பாரூக், மாநிலப் பொதுச்செயலாளர், எஸ்.டி.பி.ஐ.
தோழர் புவனேஸ்வரன், சென்னை மண்டலக் குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம்
தோழர் ஆவடி அந்திரிதாஸ், தேர்தல் குழு தலைவர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
தோழர் தடா.ஜெ. அப்துல்ரஹீம், தலைவர், இந்திய தேசிய லீக் கட்சி
தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தோழர் ஆவடி நாகராஜன், மாவட்டச் செயலாளர், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம்
தோழர் மணிமாறன், மாநிலச் செயற்குழு உறுப்பினர், வெல்பேர் கட்சி
தோழர் மஞ்சுளா, மாநில செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம், தமிழ்நாடு
பேராசிரியர் சங்கரலிங்கம், மாநில துணைத்தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்
வழக்கறிஞர் மனோகரன், அனைத்திந்திய பொதுச்செயலாளர், OPDR
தோழர் மகிழன், தலைமைக் குழு உறுப்பினர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்
தோழர் பழனி, பொதுச்செயலாளர், மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி
தோழர் அபூபக்கர்சாதிக், தென் சென்னை மாவட்டத் தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா
தோழர் மதிப்பறையனார், நிறுவனத் தலைவர், அம்பேத்கர் மக்கள் படை
தோழர் சங்கரசுப்பு, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
தோழர் சுந்தரமூர்த்தி, தலைவர், தமிழர் விடுதலைக் கழகம்
தோழர் மோகன், தலைமைக் குழு உறுப்பினர், கம்யூனிஸ்ட் கட்சி
தோழர் மா.சேகர், தொழிலாளர் சீரமைப்பு இயக்கம்
தோழர் பெலிக்ஸ், மாநிலப் பொறுப்பாளர், கிறித்தவ மக்கள் களம்
தோழர் மணி, பாட்டாளி வர்க்க சமரன் அணி
தோழர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், நிறுவனத் தலைவர், தமிழர் முன்னணி
தோழர் பரிமளா, தமிழ்நாடு பெண்கள் இயக்கம்
தோழர் அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த்தேசிய பேரியக்கம்
தோழர் தமிழ்நேயன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் கட்சி
தோழர் பாலகிருஷ்ணன், மாநில நிர்வாகி, சுயாட்சி இந்தியா
தோழர் செல்வி, துணைப் பொதுசெயலாளர், தமிழ்நாடு சுயாட்சிக் கட்சி
தோழர் இளஞ்செழியன், மாநிலப் பொறுப்பாளர், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம்
அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் எட்வின், சிபிஐ(எம்-எல்) விடுதலையைச் சேர்ந்த தோழர் அதியமான், மக்கள் வாழ்வுரிமைப் போராட்ட இயக்கத்தைச் சேர்ந்த தோழர் குழல், புரட்சிகர மக்கள் பாசறையைச் சேர்ந்த தோழர் காலன்துரை, இளந்தமிழகம் இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சதீஷ்குமார், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தைச் சேர்ந்த தோழர் பார்த்திபன், சிபிஐ(எம்-எல்) மக்கள் விடுதலைத் தோழர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மா-லெ) செந்தாரகையின் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் கார்கிவேலன் ஆகிய தோழர்கள் நேரம் போதாமை காரணமாக உரையாற்றாமல் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
மதுரை – காலை 10 மணி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை முன்பு
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் தொ. ஆரோக்கியமேரி, தெய்வம்மாள், இரா.பிரகாசம், மு.தங்கப்பாண்டி முழக்கமிட்டு போராட்டத்தை தொடங்கிவைத்தார்
கண்டன உரை:
தோழர் வாஞ்சிநாதன் – மக்கள் அதிகாரம்
தோழர் நிலவழகன் – தஒவிஇ
தோழர் பேரறிவாளன் – தமிழ்ப் புலிகள்
தோழர் இராசு – தமிழ்த்தேசியப் பேரியக்கம்
தோழர் திலீபன் செந்தில் – திவிக
தோழர் கிட்டுராசா – தபெதிக
தோழர் பரிதி – ததஇ
தோழர் குமரன் பு.இ.மு
தோழர் அபுதாகீர் – பி.எஃப்.ஐ
தோழர் அப்பாஸ் – த.மு.மு.க
வழக்கறிஞர் வின்சென்ட் – PUCL
வழக்கறிஞர் இராஜா – CPCL
வழக்கறிஞர் இராசேந்திரன் – சமநீதி வழக்ககறிஞர் சங்கம்
வழக்கறிஞர் எழிலரசு – உலகத் தமிழர் பாசறை
தோழர் அண்ணாதுரை – மக்கள் சட்ட உரிமை இயக்கம்
தோழர் மெய்யப்பன் – தமிழ்த்தேசக் குடியரசு இயக்கம்
தோழர் செல்வராஜ் – TVPமக்கள் கட்சி
தோழர் தங்கப்பாண்டியன் – தமிழ்நாடு சுயாட்சிக் கட்சி
தோழர் இஸ்மாயில் – தமஜக
தோழர் பிலால்ராஜா – மமக
தோழர் காமேஸ்வரி – தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு
தோழர் அமுதா – மக்கள் பாதை
திருச்சி – மாலை 5 மணி – ராமகிருஷ்ணா தியேட்டர் அருகில், மரக்கடை
தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் வழக்கறிஞர் கென்னடி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இளைஞர் இயக்கம் மாவட்ட பொறுப்பாளர் தோழர் ரகு முழக்கமிட்டு போராட்டத்தை தொடங்கிவைத்தார்.
மக்கள் அதிகாரம், தி.வி.க, த.பெ.தி.க, SDPI, PFI, தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய சனநாயகக் கட்சி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி, தமுமுக, WPI, மக்கள் சனநாயக இளைஞர் கழகம், பாட்டாளி வர்க்க சமரன் அணி, கிருத்துவ மக்கள் களம், மக்கள் உரிமை மீட்பு இயக்கம், சனநாயக சமூக நலக்கூட்டமைப்பு, மக்கள் உரிமை கூட்டியக்கம், சுல்தான் கட்சி, ரெட் பிளாக் கட்சி தலைவர்கள் பங்கேற்று கண்டன உரை ஆற்றினார்.