சேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்!
இன்று சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழுத் தோழர் கோ.சீனிவாசன் (எ) கோ.சீ இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Cr. 14/2020, IPC 188, 120b, 121, 121A (read with Unlawful Activities Prevention act), UAPA section10, 13, 15 & 18
சேலத்தில் கடந்த 2019 நவம்பர் மாதம் மாவோயிஸ்ட் தோழர் மணிவாசகம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வழக்குப் பதியப்பட்டது. சிபிஐ தொடங்கி சிபிஐ (மாவோயிஸ்ட்) வரை மக்களுக்காக இயங்கும் இடதுசாரி, புரட்சிகர இடதுசாரி அமைப்புகளோடு மாறுபாடுகளிருந்தாலும் தோழமையாகக் கருதுகிறோம்.
தோழர்களின் சாவு, இறுதி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கெல்லாம் வழக்கா? முழக்கமிட்டதற்காக இதே போன்று இன்னொரு வழக்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைமைக்குழுத் தோழர்கள் சதீஷ், அருண்சோரி ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது. ஞாயிறு அதிகாலை கைது செய்து தோழர்கள் பாலன், கோ.சீ, அனுப்பூர் செல்வராஜ் மூவரையும் சிறை வைக்கிறது.
எடப்பாடி அரசுக் காவல்துறையின் அடாவடிச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தோழமையாகத் தோழர்களின் இறப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் மனிதாபிமானமற்ற செயலாகும். கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
“தமிழக விரோத பாசிச பாசக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்” எனும் எமது அமைப்பின் அறைகூவலின் அங்கமாக, “தமிழக மக்கள் விரோத பாசிச பாசகவைத் தோற்கடிப்போம்” எனும் எமது முன்னெடுப்பில் 70 அமைப்புகள் சனவரி 20 அன்று கலந்து கொண்ட சென்னைக் கூட்டம் ஆளும் கும்பலுக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளது. சேலம், ஈரோடு, தஞ்சை என அடுத்தடுத்து பாசிச பாசக எதிர்ப்பு சக்திகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவதைத் தடுக்கும், அச்சுறுத்தும் செயலாகவே இக்கைது நடவடிக்கையைச் சந்தேகிக்கிறோம். தமிழ்நாட்டில் போராடும் மக்கள் இயக்கங்களை பாசிச பாசகவுக்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியை தடுக்க முடியாது. நேற்றும், இன்றும், நாளையும் அச்சுறுத்தலாக ஒற்றை மையமாக வளரும் பாசிச அபாயத்தை எதிர்த்துக் களம் காணும் பணியைத் தொடர்ந்து முன்னெடுப்போம்!
நேற்று 06-02-2021சேலத்தில் பாசிச பாசக எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்தான் தோழர் பாலன் அதிகாலை கைது செய்யப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாசிச பாசக எதிர்ப்பில் முன் நிற்கும் அமைப்புகள், தலைர்களைக் கைது செய்யும் வேலை தொடங்கி விட்டனர். திட்டமிட்டு UAPA வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், தோழர் கோ.சீ உள்ளிட்ட தோழர்களை விடுதலை செய்! தோழர் மணிவாசகம் இறப்பில் போடப்பட்ட மூன்று (FIR) வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
மக்கள் இயக்கங்கள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் காவல்துறையின் அடாவடிச் செயல்களைக் கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்..
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
07-02-2021
9443184051