தமிழகஅரசே! பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே!
சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறைத் தலைவர் வேல் யாத்திரை அரசியல் நடவடிக்கையே!
என அறுதியிட்ட பின்னும் தினசரி ஒரு ஊரில் கூட அனுமதிப்பது சட்ட விரோதமே!
திருத்தணி தொடங்கி தினசரி ஒரு ஊரில் நூற்றுக் கணக்கில் கூட அனுமதிப்பதும், மேடை, ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள அனுமதிப்பதும், கொரோனா விதிமுறைகளை மீறிப் பயணிப்பதும்,
தடுப்பது போல் கைது செய்வதும், மறுநாள் மற்றொரு ஊரில் கூடுவதும் சட்டம் ஒழுங்கை கேலிக் கூத்தாக்குகிறது தமிழக அரசு.
கையில் வேல், வாயிலிருந்து வரும் வார்த்தைகள் ஸ்டாலின், திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளை வசைபாடலாகத் தொடர்கிறது. இது பக்திப் பயணமல்ல. உயர்நீதிமன்ற எச்சரிக்கை, காவல்துறை வாக்குமூலத்திற்குப் பின்னும் அரோகரா முழக்கத்துடன் தினசரி பாசகவின் அரசியல் நிகழ்ச்சிகளை
எடப்பாடி அரசு அனுமதிப்பது கூட்டணி அரசியலே!
தமிழ்நாடு நாள் நிகழ்ச்சிகளைத் தடுத்துக் கைது செய்த, 123 A வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்கும் அளவிற்குச் சென்ற தமிழகக் காவல்துறையின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளதா? யார் கட்டளை?
மதத்தை, பக்தியைப் பயன்படுத்தும் பாசகவிற்கு ஒரு நீதி, தமிழர் உரிமைக்குப் போராடும் அமைப்புகளுக்கு ஒரு நீதியா?
வடக்கின் இராமர், தமிழ்நாட்டில் செல்லுபடியாகாததால், தமிழர்களை ஏமாற்ற முருகனும், வேலும். வடக்கே இந்திய அமைச்சர்களுக்கு கொரோனா எனச் செய்தி வரும் சூழலில், கொரோனாவிலிருந்து மீண்டுள்ள அமைச்சர் அமித்சா தமிழ்நாடு வருவது சிக்கல் இல்லையா?
- தமிழக அரசு, பாசகவுடன் இணைந்து நடத்தும் வேல்யாத்திரை நாடகத்தை உடனே நிறுத்து!
- சட்டம் ஒழுங்கை சீர்கெடுப்பதை வேடிக்கை பார்க்க முடியாது.
- ஒருபுறம் கொரோனா பரவுகிறது எனப் பள்ளி, கல்லூரி திறப்பதையே தள்ளிப் போடுவதும், மறுபுறம் கொரோனாப் பரவலை உருவாக்கும் பாசகவின் வேல்யாத்திரையை அனுமதிக்காதே!
- அனைத்து அரசியல் அமைப்புகளுக்கும் ஒரே அளவுகோலை, ஒரே அணுகுமுறையைக் கடைப்பிடி!
-மீ.த.பாண்டியன்,
தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி