அமேரிக்கா – ‘காவல்துறைக்கு நிதியை நிறுத்து Defund Police’ என்ற முழக்கம் எழ காரணம் என்ன ?
உலகமே கொரோனா பெருந்தொற்றின் பயத்தில் ஊரடங்கை கடைபிடிக்கும் நேரத்தில் அமெரிக்க வீதியெங்கும் லட்சக்கணக்கான மக்கள் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலைக்கு நீதிக் கேட்டு தொடர் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றனர் அதுவும் அமெரிக்காதான் லட்சக்கணக்கான மக்களை கொரோனாவுக்கு காவு கொடுத்து முதல் இடத்தில் உள்ள நாடு. அமெரிக்கா முழுவதும் வெள்ளை ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாரி உள்ள அதே சமயம் டொனாலட் டிரம்போ போரட்டத்தை அதிகரிக்கும் வண்ணம் தன்னோட இனவெறியை கக்குகிறார். அதற்கும் மக்கள் செரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்கள் வெள்ளை மாளீகையின் முன் நடந்த போரட்டத்தை கட்டு படுத்த முடியாமல் தவித்த காவல்துறை பாதுகாப்புக்காக டொனால்ட் டிரம்ப் பதுங்குழியில இருக்க சொல்லியது. கொரேனாவையும் இப்படி தான் கையாண்டார் அதன் விளைவு லட்சத்திற்க்கும் அதிகமானோர் இறப்பு.
அமெரிக்க காவல்துறையின் வெள்ளை மேலாதிக்கத்திற்க்கு பலியான முதல் கருபினரும் அல்ல ஜார்ஜ் ஃபிலாய்ட் கடைசி நபரும் அல்ல. இது ஃபிலாய்ட் மரணத்திற்க்கு நீதி கேட்டு நடக்கும் போராட்டமாக தொடங்கி வெள்ளை ஆதிக்கத்திற்க்கு எதிரான போராட்டமாக வளர்ச்சியாடைந்து. அடுத்தக் கட்டமாக கருப்பின மக்கள் டிஃபண்டு தி போலிஸ் DEFUND POLICE (காவல்துறைக்கு நிதியை நிறுத்து) என்று போராட்டம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இது ஒன்றும் புது கோரிக்கையல்ல நீண்ட காலமாக உள்ள கோரிக்கை தான் இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளூம், கருப்பின மக்கள் மத்தியில் மட்டும் இருந்த கோரிக்கை இப்போது வெள்ளையின மக்களிடமும், ஆதரவு பெற்று பெரும் போராட்டமாக வளர்ந்துள்ளது, அரசியல் கட்சி தலைவர்களூம், அரசு அதிகாரிகளூம் ஒரு சில செனேட் உறுப்பினரிடமும் இந்த கோரிக்கையின் நியாயத்தை உணர்ந்து ஆதரிக்கின்றனர் ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அரசும் இன்னமும் அசைந்து கொடுக்கவில்லை. அவரை எதிர்த்து நிற்க்கும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடென் மதில் மேல் பூனை போல் இந்த கோரிக்கைக்கு ஆதரவிக்கவும் இல்லை அதே சமயம் எதிர்க்கவும் இல்லை. ஆனால் நீதித்துறை ஏன் காவல்துறைக்கு நிதி ஒதுக்குவதை குறைக்ககூடாது என்று கேள்விக்கேட்டு உள்ளது. சில மாகாண அரசுகள் நிதி குறைப்பதையும், நிதியை அதிகப்படுத்துவதை தள்ளி வைத்துள்ளது. லாஸ் ஏஞ்சல் மாகான மேயர் நிதி குறைப்பு செய்யப்போவாதாக கூறியுள்ளார். லாஸ் ஏஞ்சல் மாகனாத்தில் 1.8பில்லியன் டாலர் (13,500 கோடி ரூபாய்) நிதி ஒதுக்கபடுவதாகவும், சம்பள உயர்வும், போனஸ் கொடுக்க இன்னமும் 7% உயர்த்துவதற்க்கு 2 வாரங்களுக்கு முன்னர் வரை கோரிக்கை வைத்த மேயர் தற்போது போராட்டத்தின் ஏதிரொலியாக நிதி குறைப்பு செய்யப்படும் என்று கூறியுள்ளார். .இதே போல் ஒரு சில மாகாணங்கள் இது குறித்து விவாதங்களை தொடங்கி உள்ளன.
கழுதை தேய்ந்து கட்ட எரும்பு ஆன கதையாக சீர்திருத்தவாத கொள்கையில் இருந்து மெல்ல விலகி முதலாளித்துவ சேவையில் முழதாக சந்திரமுகி ஆகியிருக்கும் அமெரிக்க அரசாங்கத்தின் பின் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள். அதுவும், அமெரிக்காவில் கருப்பின மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். முதலாளித்துவும் இனவெறியை வளர்க்குமே ஒழிய அழிக்காது. என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு தான் கருப்பின மக்கள் அதிகமானோர் உயிரிழந்தற்க்கு சாட்சி. கொரானாக்கு இனம், நிறம், மொழி இல்லை என்று கூறினார் ஆனால் வர்க்க பேதம் உண்டு.
.
‘டிஃபண்டு தி போலிஸ் (காவல்துறைக்கு நிதியை நிறுத்து), காவல்துறைக்கு நிதியைக் குறை, காவல்துறையை இழுத்துமுடு என்றும் கோரிக்கை எழுகிறது. ஒரு புறம் மிகையாக கூட தோன்றலாம். காவல்துறை இல்லாமல் எப்படி அரசு நடத்த முடியும் என்று ஜனநாயாகசக்த்திகளிடம் கேள்வி எழலாம். மக்கள் கோபத்தில் நியாயம் உள்ளது முதலாவது அமெரிக்க பட்ஜெட்டில் ராணுவத்திற்கு 15 %, காவல்துறை 6% மொத்தம் 21% ஆகா உள்ளது. காவல்துறைக்கு மட்டும் எல்லாம் சேர்த்து 194பில்லியன் டாலராகும் (14 லட்சம் கோடி ரூபாய்).
மாகாண அளவில் பார்த்தோமானால் ஒக்லாண்ட பட்ஜெட்டில் 41 சதவீத நிதியை காவல்துறைக்கும்,36 சதவீதம் நிதியை மினியாபோலிஸ்ஸும்,35 சதவீதம் அஹொஸ்டனிலும் என்றளவில் உள்ளது. இதுப்போல் உணவு பாதுகாப்பு, வளர்சித்திட்டங்கள், மானியங்கள், கல்விக்கு மருத்துவத்திற்க்கு செய்திருந்தால் கொரானா பாத்திப்பில் இருந்து தப்பித்து இருக்கலாம்., கல்வியின் வாயிலாக அவர்கள் வேலைவாயுப்புகள் அதிகரிப்பு அதன் விளைவாக வாழவாதரம் மேம்பட்டு குற்றசெயல் குறைத்திற்கலாம், மருத்தவ கட்டமைப்பு மேம்படுத்தியிருந்தாலும் கொரேனாவிலிருந்து தப்பித்து இருக்கலாம், கொராணவிலிருந்தும் தப்பவில்லை அதிகரிக்கும் குற்றசெயலில்லிருந்தும் தப்பவில்லை அதற்கான விலையை அமெரிக்க மக்கள் கொடுக்கிறார்கள் அதுவும் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் நிலை இன்னும் மோசம்.
சரி காவல்துரைக்கு நிதி ஒதுக்குவதால் குற்றம் குறைந்திருக்கிறதா என்றால் அதுவும் குறையவில்லை. குற்றசெயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை. ஒரு பக்கம் தூப்பாக்கி பரவலாக மக்களிடம் உள்ளது குறிப்பாக சிரார்களிடம் தூப்பாக்கி பயன்படுத்தும் பழக்கம் வெகுவாக அதிகரித்து உள்ளது, திவிரவாதத்தால் கொல்லப்படுவர்களை காட்டிலும் இவ்வாறு சிரார்களால் கொள்ளப்படுவது தான் அதிகம் என்று ஆய்வுகள் சொல்கிறது. பிறகு ஏன் அரசு இவ்வளவு நிதி ஒதுக்குகிறது ? ஒன்று அதன் கொள்கை முடிவு காவல்துறையை தனியார்மயம் ஆக்கப்பட்டுள்ளது சமுகத்தை காக்கும் சேவை நிலையிலிருந்து லாபம் தரும் தொழிலாளாக மாரிப்போன பின் குற்றசெயல் அதிகரிக்குமே ஒழிய குறையாது. காவல்துறை வேண்டாம் என்பதற்கு மற்றும்ஒரு காரணம், அதிக அபராத தொகை வசுலிக்கபடுவது. முதலாளித்துவம் இருக்கும் இடத்தில் லாபம் இருக்கும் மக்கள் நலன் இருக்காது என்பதற்க்கு இது ஒரு உதாரணம்.
கார்ப்ரேட் ஏகபோகங்களின் ஆதிக்கத்தை உலக அளவில் நிலைநிறுத்த முயலும் அமெரிக்க அரசு, உள்நாட்டில் மக்கள் நல திட்டங்களை புறக்கணித்து ராணுவம், ஆயுத உற்பத்தி, காவல் துறையில் கட்டற்ற முதலீடுகளை செய்து சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து வருகிறது. தற்போதைய போராட்டம் அதன் பரந்த அர்த்தத்தில் நூற்றாண்டுகளாக கறுப்பின மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் வெள்ளை நிறவெறியை ஊக்குவிக்கும் டிரம்ப் தலைமைக்கும் வறுமையை திணிக்கும் நவதாராள பொருளியல் கொள்கைக்கும் எதிரான ஒரு கலகமாகவே தொடங்கியுள்ளது.
-ராஜா
https://www.theguardian.com/us-news/2020/jun/04/defund-the-police-us-george-floyd-budgets
https://www.theatlantic.com/ideas/archive/2020/06/defund-police/612682/
https://en.wikipedia.org/wiki/Military_budget_of_the_United_States#:~:text=With%20a%20total%20federal%20budget,well%20as%20the%20State%20Department.
.