லெனின் புகைப்படம், ‘தோழர், செவ்வணக்கம்’ என்ற சொற்களும் இனி ஊபா UAPA சட்டத்தில் கைது செய்ய போதுமானது – பாசிச அரசின் ‘ஜனநாயக’ நெறிமுறை !
அசாம் விவசாய சங்க தலைவர் அகில் கோகாய் 2019 டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்த CAA சட்டத்திற்க்கு எதிராக அசாமில் போராடியதற்காக தேசியபு லானய்வு அமைப்பால் (NIA) ஊபா சட்டத்தில் (UAPA சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) கைது செய்ததை தொடர்ந்து அவரின் நண்பர்கள் இருவர் அதே ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர் அதில் பிட்டு சோனோவால் மீது முதல் தகவல் அறிக்கையை தேசிய புலானய்வு அமைப்பு மே 29 அன்று நிதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் அவர் கம்யூனிஸ்ட் தலைவர் லெனின் படம் முகநூலில் வைத்திருந்தாகவும், லெனின் அவர்களின் புகழ்பெற்ற வாசகம் ”முதலாளிகள் விற்கும் கயிற்றில் அவர்களையே தூக்கிலிடுவோம் ” பதிந்திருந்தாகவும், அவர் முகநூலில் நன்பர்களை ‘COMRADE – தோழர்’, ‘LAAL SALAAM- செவ்வணக்கம்’ என்று அழைத்துள்ளார் என்று குற்றம்சாட்டபட்டுள்ளார்.
. அகில் கோகாய் மீதும் அவர் ‘சோசலிச அறிமுகம்’, ‘கம்யூனிஸ்ட்டு கட்சி அறிக்கை’ ஆகிய நூல்கள் வைத்திருந்தார் என்று சொல்லி தான் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டார், அவரை நிதிமன்றம் பினை கொடுத்தும் பல்வேறு வழக்குகளை பதிந்து இன்னமும் சிறையில் அடைத்திருக்கிறது மோடி அரசு. ஒரு பாசிச தன்மையுள்ள அரசு என்னவெள்ளாம் செய்யும் எனபதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு இது.
‘கிரசாக் முக்தி சங்காரம் சமிதி’ என்னும் விவசாயசங்கத்தின் தலைவர் பாஸ்கோ ‘அவுட்லுக்’ பத்திரிக்கைக்கு கொடுத்துள்ள பேட்டியில் கூறியதாவது ‘எங்கள் அமைப்பை மாவோயிச அமைப்பாக சித்தரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு முயல்கிறது அதனால் தான் அதன் அலோசகரான அகில்கோகாமீதும், பீட்டு சோனாவால் மீதும் ஊபாவில் கைது செய்து இருக்கிறது. அவர்கள் தாக்கல் செய்த 40 பக்க அறிக்கையில் எந்தவித ஆதாரமும் அளிக்கவில்லை. குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக போராடியதற்காகவும் அதை வழிநடத்தியதற்காகவும் கைது செய்து மிரட்டுகிறது மத்திய பாஜாக அரசு’. உண்மையில்.
நூற்றாண்டுகளுக்கு முன் மக்களூக்காக சமரசமில்லாமல் போராடிய புரட்சிகர தலைவர் லெனின் சிந்தனையும், மாவோவின் சிந்தனையை கண்டு முதலாளித்துவ அரசுகள் அஞ்சி நடுங்குகின்றன என்றால் இப்போதெல்லாம அவர்களின் படங்களூம் கூட அவரகளை துரத்த அரம்பித்துவிட்டது என்ற கருதத்தோனுகிறது.
‘செவ்வணக்கம் தோழர்’ அகில் கோகாய்!
‘செவ்வணக்கம் தோழர்’ பிட்டு சோனாவால்!
புரட்சி ஓங்குக!
- ராஜா