ஜே.என்.யு மாணவி 10 நாட்களில் மூன்று முறை கைது – எதிர்ப்பு குரல்களை நசுக்க முயலும் மோடியின் சர்வாதிகார ஆட்சி
கொரோனா காலத்தில் மக்களை காக்க திட்டமிடாத அரசு, அரசை நோக்கி கேள்வி கேட்போரையும் உரிமைக்காக அரவழியில் போராடும் மக்கள்மீதும், போராளிகள் மீதுமே தாக்குதல் நடத்துகிறது. எந்த சட்டத்தையும் மதிக்காத அரசு அந்த சட்டதின் பெயரால் எதிர்ப்பு குரல்களை நசுக்க பார்க்கிறது. அப்படி ஒரு குரல் தான் கலிட்டா. ஜேஎன்யு முதுகலை மானவியுமான தேவன்கானா கலிட்டாவும், சக தோழருமான நார்வாலையும் கடந்த பத்து நாட்களில் முன்று முறை கைது செய்து இருக்கிறது காவி கார்ப்பரேட்டு அரசாங்கம் அவர்கள் செய்த குற்றம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியதுதான்.
ஜாஃப்ராபாத்தில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திறகு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்திற்காக மே 23 அன்று கைது செய்யப்டுகின்றனர், அடுத்த நாள் நிதிமன்றத்தால் பினையும் வழங்கபடுகிறது, பிறகு டெல்லி காவல்த்துறை 28 மே அன்று மற்றொரு வழக்கில் மீண்டும் இருவரையும் கருப்பு சட்டமான ஊபா UAPA வழக்கில் கைது செய்படுகிறார்கள். அவர்கள் இருவர் மீதும் கொலைமுயற்சி, கலவரம் செய்தல், குற்றவியல் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியது டெல்லி காவல்துறை.
முதல் வழக்கை விசாரித்த நிதிபதி CAA எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக அவர்கள் மீது பதிந்துள்ள குற்ற பிரிவுகள் பொருந்தாது என்று தீர்ப்பளித்தார். விசாரனை தொடர்பாக காவல் துறையுடன் ஒத்துழைக்க தயாரக உள்ளனர் என்று கூறினார். 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரியதை மறுத்து 2 நாள் மட்டும் காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார். 2 நாள் காவல் முடியும் போது 3வாதாக ஒரு புதுவழக்கு டாரியகஞ் என்னுமிடத்தில் சட்டவிரோதமாக கூடியதும், கலவரமசெய்தார் என்று மீண்டும் கைது செய்து இருக்கிறது பாசிச மோடி அரசு.
அரசுக்கு எதிராக போராடுபவர்களை கைதுகள் மூலம் ஒடுக்குவதின் வாயிலாக ஜனநாயக குரல்களை முறித்துவிடலாம் என்று முயற்சிக்கிறது மோடி அரசாங்கம். உலகை மிரட்டிய ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் எல்லாம் மக்கள் போரட்டத்தினால் மன்னோடு மன்னாகி போன வரலாறு உண்டு. அது தரும் நம்பிக்கையோடு, மக்களினின் அறப்போராட்டத்தின் அதிகாரத்தின் உச்சியிலிருந்து ஆட்டம் போடும் மோடிக்கெள்ளாம் கலிட்டாகளால் வீழ்த்தபடுவது உறுதி
மார்ச்22-23 அன்று கலவரத்தை தூண்டிய பாஜாக தலைவர் கபில் மிஸ்ரா பேச்சுதான் கலவரத்திற்க்கு காரணம் என்பது உலகறிந்த உண்மை. இதே ஜாஃப்ராபாத் காவல் நிலையம் அவரை கைதுசெய்ய வில்லை. தாக்குதலுக்கு உள்ளாகியவர்களை வழக்கு பதிவதும் கைதுசெய்வதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது, தங்கள் எஜாமன் விசுவாசத்தை வெளிப்படுத்துகிறது தில்லி காவல் துறை. ஜனநாயக சக்திகளின் மிதான அடக்குமுறை கண்டிப்பதுடன், கலிட்டா’வை உடனே விடுதலை செய்ய குரல் கொடுப்போம்.
தொகுப்பு: ராஜா
https://thewire.in/rights/anti-caa-pinjra-tod-devangana-kalita-arrest