அமெரிக்கா – இலக்கு மூலதனத்தை காப்பதுதான், மக்களை அல்ல
(கொரோனா கால அமெரிக்க அரசின் நடவடிக்கை குறித்த இந்த கட்டுரை இந்திய சூழலுக்கும் பொருந்தும்)
ஒரு லட்சத்திர்க்கு அதிகமான மக்களை காவு கொடுத்துரிக்கிறது அமெரிக்க அரசாங்கம்; அமெரிக்கா யாருக்கானது என்று அம்பலபடுத்தி காட்டியுள்ளது கொரோனா. அமெரிக்க மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ ஆனால் அமெரிக்க அரசு மக்களுக்கானது அல்ல மூலதனத்துக்கானது.
அரசு கொரோனா பேரிடர் காலத்தில் செய்து இருக்க வேண்டியவைகள் என்று கற்பனை செய்தோமானல்… முதலாவதாக எல்லோருக்கும் இலவச மருத்துவம், மருத்துவ உபகரனங்களும் தேவையின் பொருட்டு எல்லா மாகாணங்களுக்கு பகிர்ந்து கொடுத்துருக்க வேண்டும். பெருந்தொற்றின் காரணமாக உற்பத்தி முடக்கபட்டு பெரும் பொருளாதார நெருக்கடுயில் தவிக்கும் மக்கள் அனைவருக்கும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். நாடு முழுவதும் ஊதியத்தை மானியமாக வழங்கியிருக்க வேண்டும். அதனால் தொழிலாளர்கள் வேலையிழக்காமலும்,தொழில் நிறுவனங்கள் கொரோனாவுக்கு பிறகு மீள்வதற்கு இலகுவாக இருக்கும், ஒருசேர மக்களுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் வாடகை தள்ளுபடி செய்திருக்கவேண்டும்,பெருந்தொற்று காலம் முடியும் வரை அனைவருக்கும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிருக்கும்மானால் சிறு குறு தொழில்கள் திவாலாவதை தடுத்து இத்தொழிலை நம்பியிருக்கும் லட்சகனக்கான தொழிலாளர்கள் மிண்டும் வேலைக்கு திரும்புவதறக்கு எதுவாக இருக்கும்.
மக்களை காப்பதுதான் இலக்கு என்றால் மேலே குறிப்பிட்டவற்றை நிறைவேற்றி இருப்பார்கள் மாறாக மூலதனத்தை காப்பதே இலக்காகி போனபின் கார்ப்பரேட்டின் நிதிநிலையின் ஆரோக்கியம்தான் முக்கியமே தவிர மக்களின் உடல் ஆரோக்கியம் அல்ல, சுகாதாரத்துறை சேவையும் அதன் பயன்பாடு அதிகரிக்கும் வேலையில் தனியாரிடம் ஒப்படைப்பதும், ஒப்படைத்தவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பதும்தான் முதன்மையான கடமை; மக்களை பாதுகாப்பதல்ல. தேக்கமடைந்துள்ள நுகர்வை சரிசெய்ய வேலையில்லாதவர்க்கு சலுகைகளோ/பணமோ வழங்குவீர்கள் ஆனால் ஒருபோதும் அவர்களின் ஊதியத்தை பாதுகாப்பது வாயிலாக பொருளாதரத்தை பாதுகாக்கமாட்டீர்கள் ஏன்னெறால் முதலாளிகளுக்கு லாபம் குறையும் . இதன் விலைவாக வேலையில்லா திண்டாட்டம் உருவாகும், ஒரு பட்டாளமே வேலைக்காக காத்திருக்கும் அதன் விளைவு குரைந்த கூலிக்கு கார்ப்பரேட் முதலாளிக்கு ஆட்கள் கிடைக்கும். இந்த நெருக்கடியை பயண்படுத்தி கார்ப்பரேட்டுக்கு மேலும் வரி சலுகை வழங்குவிர்கள் , வட்டி யில்லா கடண் வழங்குவிர்கள், ஆனால் மறுபுறம் தனிநபர் கடண் சுமையை அதிகமாவதைப்பற்றியும், சிறு, குறு தொழில்கள் திவாலாகுவதுப்பற்றியும் எந்த கவலையும் உங்களுக்கு இருக்காது. பெருநிறுவனங்களின் லாபத்தை உயர்த்துவதும், அவர்களின் பங்கு சந்தை மதிப்பு விழ்ந்துவிடாமல் பாதுகாப்பதும்தான் உங்களின் தலையாய கடமை. நெருக்கடியை பயன்படுத்தி பெருமுதாலாளிகளின் முலதனத்தை குவிப்பிர்கள், அதன் விளைவாக சமுகத்தில் எழைக்கும் பணக்காரனுக்குமான இடைவெளியை அதிகரிக்கும் அதுதான் உண்மை.
போர் என்று அறிவித்துவிட்டு பணக்காரர்களிடம் அதிக வரி வசுலிக்காமல், வரி சலுகை செய்து சொந்த நாட்டு மக்கள் மீது உண்மையான போரை தொடுத்து இருக்கிறது முதலாளித்துவ அமெரிக்க அரசு.
அமெரிக்க மக்களுக்கு தெரியுமோ தெரியாதோ… அமெரிக்க அரசு மக்களை காவு கொடுத்தாவது மூலதனத்தை பாதுகாக்குமே தவிர மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலைப்படாது, ஒரு வேலை மூலதனத்தை காப்பதறக்கு மக்கள் தேவைப்பட்டால் காப்பாற்றும். முதலில் மூலதனம், இரண்டாவதுதான் மக்கள், மக்களிடமிருக்கும் சொற்ப வளங்களை பறித்து மூலதனத்தை பெருக்குமே ஒழிய ஊதிபெருகிருக்கும் மூலதனத்தை எடுத்து மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யாது. இது ஒன்றும் மிகைபடுத்திய கற்பனையல்ல, நிதர்சனமான உண்மை. ,இப்போதுக்கூட மூலதனம்தான் முக்கியம் என்றால் இன்னும் அதிகப்படியான் மக்களை பறிக்கொடுக்க நேரிடும். முலதனத்தை காக்க நாம் இறப்பதை நியாயபடுத்துவார்கள். தொழிலாளர்க்கு ஊதியம் வழங்கினால் முதலாளிக்கு நட்டம் எற்படும், அவர்கள் சங்கடப்படுவார்கள் ஆகையால் ஊதியம் கொடுப்பது கட்டாயம் இல்லை. தொழிற்சாலைகளையும், மருந்து உற்பத்தியையும் அரசுடமையாக்கினால் முதலாளிக்கு சாதகமாய் இருக்காது என்று அதையும் செய்யவில்லை. கைதிகளையாவது விடுதலை செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் செய்யவில்லை ஏனென்றால் இவைகளால் பங்குசந்தையிலோ மூலதனத்துக்கோ எந்த பயணும் இல்லை.
போரின் முன்னணி விரர்கள் என்று மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைபனியாளர், மளிகைபொருள் விற்பனையாளர்கள அரசியல்வாதிகளால் போற்றப்படுவர் ஏன் ராணுவ விமானத்தில் இருந்து பூவைத்துவுவார்கள், வன்ன ஒளிவிளக்கு ஒளிரசெய்வார்கள் மறுபக்கம் மருத்துவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வார்கள் ஏனென்றால் மருத்துவம் இக்காலகட்டத்தில் லாபம் தருபவை அல்ல,செவிலியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறக்கனேரிடும், அவர்களுக்கு தேவையான மருத்துவ பாதுக்காப்பு உபகரனங்களை சேகரித்து வைக்கவில்லை ஏன்னெறால் அவை அவரகளின் லாபத்தை குறைக்கும் செலவினங்கள், அதியாவசிய பொருட்களின் விற்பனையாளர்கள் சில டாலர் கூலியை பெருவதற்கு பெரும் போரட்டத்தை நடத்தவேண்டிவரும் வேலையிழக்க நேரிடும். அரசை பொருத்தவரையில் எந்த தனியார் நிருவனங்கள் விழ்ச்சியுறும் நிறுவனங்களை வாங்குகின்றனவோ, தனியார் நிதி நிறுவனங்கள் அதிக பணத்தை கடனாக கொடுக்கின்றனரோ, வீட்டு கடன் கட்டமுடியாத மக்களிடம் அடிமாட்டு விலைக்கு வாங்கும் முதாலாளிகள் தான் கதாநாயகன்கள்.இவர்கள் தான் நம் மீட்பர். இவர்கள் தான் மூலதனத்தை காப்பவார்கள், இந்த இக்கட்டான காலகட்டத்திலும் நம்மை வழிநடத்தி சொர்கத்தை அடையசெய்வர் என்று பசப்பும்.
முதலாளிய வர்க்கம் மூலதனத்தை பெருக்க, அல்லது காப்பாற்ற தேவையான வரி சலுகை, கடன் தள்ளுபடிகள் பெற்றபின்னும் ,லட்சகனக்கான வேலையிழந்த தொழிலாளர் இனி எங்கே சென்று வேலை பெறுவர் ?இனியும் முதலாளி வர்க்கம் சிறுமுயர்ச்சிசெய்து நம்மை காப்பாற்றுமானல் அதற்கு நம்மால் லாபம் இருக்கும் பொருட்டுதானே தவிர நம்மை காக்கும் பொருட்டல்ல.
- அமில்டன் நோலன்
தமிழில்: ராஜா
(இதே சுழலை நாம் இந்தியாவிற்கு பொருத்திப்பார்த்தால் மோடி அரசுக்கும் மூலதனத்தை காப்பதுதான் தலையாய கடமையே ஒழிய மக்களை காப்பது அல்ல என்ற எதார்த்தம் நம்மால் உணரமுடியும்)