முதலாளித்துவத்தின் பிளேக் பற்றிய கொடுங்கனவு

02 May 2020

14ஆம் நூற்றாண்டில் பிளேக் கிற்கு பின் நடைபெற்ற விவசாயப் புரட்சி நிலப்புரத்துவத்தை நீக்கியது. COVID-19 க்கு பின்னால் முதலாளித்துவத்திற்கும் அது திரும்புமா?

யெர்சினியா பெஸ்டிஸ்’ எனும் பாக்டிரியாவின் காரணமாக உருவான பிளேக் பெருந்தொற்று கி.பி 1340 களில் மங்கோலியாவில் இருந்து மேற்கு ஐரோப்பா வரை பரவியது. இந்த பெருந்தொற்று ஆசியாவில் ஆரம்பமாகி ,ஐரோப்பிய தலைநகர்களின் வழியே படர்ந்து மூன்றில் ஒரு  பங்கு மனித இனத்தை அழிக்கிறது.

அது முடிந்தபின் ஒரு கிளர்ச்சி தொடங்குகிறது. புகழ்பெற்ற நிறுவனங்கள் வீழ்கின்றன மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார அமைப்பு மறுவடிவம் பெறுகிறது. இது ஒரு ‘கருப்பு மரணத்தின்’ குறுங்கதையாகும்.

ஏனென்றால் அதுவரை பொருளாதாரம் என்பது உள்ளூர் விவசாயம் மற்றும்  கைவினப்பொருட்கள்  சார்ந்து இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவிலேயே மாறியது. ஆனால் தொழிலாளர் எண்ணிக்கையில் அதிகளவு குறைந்ததால், பிழைத்திருந்தவர்களின் பேரம்பசும் சக்தி அதிகரித்தது, அது விரைவிலேயே மத்திய தர வர்க்கங்களின் மக்களுக்கு சுதந்திரத்தை பற்றிய ஒரு கருத்துகளாக மாறியது.

அது நிலப்பிரபுத்துவத்தின் முடிவிற்கான ஒரு பொருளாதார மாற்றத்தின் தொடக்கமாக அமைந்தது. மேலும் சிலர் சொல்வது போல் அது முதலாளித்துவத்தின் வளர்ச்சியை தூண்டியது

முதலாளித்துவத்தின் பிளேக் பற்றிய கொடுங்கனவு

இன்று, முதலாளித்துவம் தன்னுடைய சொந்த ‘பிளெக் கொடுங்கனவை எதிர்கொள்கிறது. COVID-19 வைரஸ்  பரவும் மக்களில், ஒன்று முதல் நான்கு சதவீதம் மக்களை கொன்றாலும், 1340களில் வந்த நெருக்கடியை விட இது பெரும் சிக்கலான பொருளாதாரத்தில் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இன்று பலவீனமான ஒரு புவிசார் அரசியலின் ஒழுங்கு மாற்றமானது, ஏற்கனவே சமூகம் சந்தித்து வரும் ‘காலநிலை மாற்றம்’ எனும் தீமையை ஏற்கனவே பற்றி இருக்கிறது.

ஏற்கனவே இந்த பெருந்தொற்று ஏற்படுத்திய மாற்றங்களை கருத்தில் கொள்வோம்

முதலில், சீனா, ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியாவில் பரவலாக ஊரடங்கு காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு, இந்த பேரழிவின் தீவிரத்தை மறுத்து, செயலற்ற தன்மையை   வெளிப்படுத்திய அரசு மற்றும் அரசியல் பெரும்புள்ளிகளின் மீதான மக்களின் அவநம்பிக்கை.

மூன்று, அனைத்து முக்கிய நாடுகளில் உடனடியாக குறைந்த நுகர்வோர் செலவினங்கள், அது நிச்சயமாக சமகாலத்தில் ஒரு ஆழமான பொருளாதார தேக்கத்தை நோக்கித் தள்ளியது. நிற்வனங்கலின் பங்குகள் மதிப்பு ஏற்கனவே சீர்குலைந்த்துள்ளது. நடுத்தர வர்க்க மக்களின் குடும்பங்களின் ஓய்வூதியத் தொகையை  (பென்சன்) பங்குகளில் முதலீடு செய்தது மக்களை மேலும் பாதித்தது. தனியார் விமான நிறுவனங்கள் ,விமான நிலையங்கள் மற்றும் பல இடங்களில் சங்கிலி  தொடர் (chain ) விடுதிகளின் நிதி நிலைமைகளும் தற்போது சந்தேகத்துடன் தான் உள்ளன.

பதிலாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பா அரசுகள் மிகப்பெரிய அளவில் பொருளாதார மீட்பு நிவாரண தொகையை தொடங்கியுள்ளன. இது பெரும்பாலான மக்களின் மீது இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அமெரிக்க அரசு 2 டிரில்லியன் டாலர்  பணத்தை தன்னுடைய பொருளாதாரத்திற்கு நேரடையாக மக்களுக்கும், தொழிற்நிறுவனங்களுக்கு கடனாகவும் செலுத்துகிறது. இந்த தொகையானது அமெரிக்கா ஒரு ஆண்டில் பாதிக்கும் மேல் வசூலிக்கும் வரியாகும்.

 

அரசியல்வாதிகள் பரபரப்பாக தங்கள் வாக்காளர்களுக்கு இது ஒரு ‘V’ வடிவ மந்த நிலை என்று மீண்டும் உறுதியளிக்கின்றனர். அதன்படி பொருளாதாரம் அதளபாதாள நிலைக்கு சென்று மீண்டும் அது மேல் எழுந்து வரும் ஏனென்றால் உண்மையான பொருளாதாரம் என்பது உறுதியாக உள்ளது என்கிறார்கள்.

 

சரிந்துவிழும் அடிகட்டுமானங்கள்.

இவை மிகை நம்பிக்கையின் விளைவு என்பதை புரிந்துகொள்ள நாம் ஒரு கட்டிடத்தை உருவகமாக எடுத்து கொள்ளலாம்.

2008ல் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு மேற்கூரையை போன்று இருந்தது. நிதி அமைப்பு முக்கிய கட்டுமானத்தின் மேல் சரிந்து விழுந்த்தாலும்,அது சேதமடைந்தாலும் நாம் மேற்கூரையை மட்டும் திருப்பி கட்டி கொள்ளலாம்.

மாறாக, இந்தமுறை அடித்தளமே சேதமடைந்துள்ளது. ஏனெனில் முதலாளித்துவத்தின் பொருளாதார வாழ்க்கையில் முதலாளிகள் மக்களை நிர்பந்தமாக வேலைக்கு அனுப்பி அதன்மூலம் அவர்களின் ஊதியத்தை செலவு செய்யவைத்தனர்.

ஆனால் தற்போது நாம் நிர்பந்தமாக அவர்களை வேலையிலிருந்து விலகியிருக்க சொல்கிறோம். மேலும் ஏற்கனவே அவர்கள் பாடுபட்டு சம்பாதித்த பனத்தை செல்வு செய்த இடங்களில் இருந்தும் அவர்களை விலகியிருக்க சொல்கிறோம். எத்தனை காலம் இந்த கட்டிடம் இருக்கும் என்பதில்லை. உண்மையில் கட்டிடம் வலுவாக இல்லை. 2008 கடும் நிதி நெருக்கடிக்குப் பின் 12 வருடங்களில் நாம் பெற்ற வளர்ச்சி என்பது மத்திய வங்கிகள் அச்சடித்து கொட்டிய பணம், திவால் நிலையிலிருந்த வங்கிகளை அரசே மீட்டெடுத்தது மற்றும் கடன் போன்றவை ஆகும். கடனை திருப்பி செலுத்துவதற்குப் பதில் உலகளவில் 72 டிரில்லியன் டாலர் அளவு அதிகமாக குவித்துள்ளோம்.

பெரும் கொள்ளை நோயான பிளேக்கின் போது இல்லாமல், இந்த 21ஆம் நூற்றாண்டு வர்த்தகம் மற்றும் நிதி அமைப்பு முறை என்பது மிகவும் சிக்கலானது. 2008ல் நாம் கற்று கொண்டது போல் மிகவும் எளிதில் நொறுங்கிவிடும் தன்மையாக உள்ளது.

இந்த நிதி அமைப்பு முறையில் இருக்கும் நிதி கடன்கள், 2008ல் நெருக்கடி வரை இருந்த நிலைபோலவே, வங்கிகள் வெளியிடும் முறை சாரா கடன்கள் (IOU), காப்பீட்டு குழுமங்கள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் சிக்கலான தொகுப்பு ஆகும். அவர்களின் மதிப்பு என்பது வைத்திருப்பவரின் வருங்கால வருமானத்திற்கு வழி கோருவதற்கு தரப்படுகிறது.

மாணவர் கல்வி கடன்கள், வாடகைகள், இந்த வருட கார் தவணைகள் அடுத்த வருடம் மற்றும் அதற்கு பின் வரும் தவணைகள் எல்லாமும் பணம் கொடுக்கப்பட்டது என கருதப்படுகிறது. இதனால் நிதி அமைப்பு முறையில் இருப்பவர்கள் சொகுசாக அடிக்கடி தங்களுக்குள் பந்தயம் நடத்தி தாங்கள் எவ்வளவு பணம் படைத்தவர்கள் என சொல்கிறார்கள்.

ஆனால் நாம் புது கார் வாங்கவில்லை என்றால் ? சில முறைசாரா கடன்கள் (IOU) பயனற்றதாகிவிடும் மற்றும் நிதி அமைப்பு முறையினை அரசு மீட்டெடுக்கும் சூழ்நிலை வரும்.

சாதாரண மனிதர்கள் இந்த அபாயத்தை பற்றி புரிதல் இல்லாமல் இருந்தாலும் கூட அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும். இதனால் தான் மத்திய வங்கிகளுக்கு இந்த பத்திர சந்தையை தேசியமயமாக்கச் சொல்லி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் அர்த்தம் என்னவெனில், அரசுகள் கடன் கொடுத்து அந்த மக்களையும், நிறுவனங்களையும் திவால் ஆகாமல் தடுக்க முயல்கின்றனர். டிரம்பின் 2 டிரில்லியன் டாலர் அறிவிப்பு என்பது அரசின் மற்றொரு பகுதியான மத்திய வங்கிகள் மூலம் இந்த கடன்கள் சுவிகரிக்கப்படுகிறது.

இடதுசாரி பொருளாதார நிபுணர்கள், நான் உட்பட, எச்சரித்துகொண்டே இருக்கிறோம். நீண்ட காலத்தில், தேக்க நிலையிலான வளர்ச்சி மற்றும் அதிக கடன் பொன்றவை மூன்று முக்கிய  முடிவுகளை நோக்கி நகர்த்தும் ; இயந்திரமயமாக்கல் எவ்வாறு அதிகபட்ச கூலியை, சம ஊதிய உயர்வு போன்றவற்றை நிலையற்றதாகவும், பற்றாக்குறையாகவும் ஆகுவதால் அரசுகள் குடிமக்களுக்கு அனைவருக்க்குமான வருமானத்தை கொடுக்க வேண்டியிருக்கும் ; மத்திய வங்கிகள் அரசுகளுக்கே நெரிடையாக கடன் கொடுப்பதால் அவற்றை எப்பொதும் ஒரு மிதக்கும் நிலையிலேயே வைத்திருப்பது ; மிகப்பெரும் அளவிலான அரசு மயமாக்கப்பட்ட பெருநிறுவனங்கள் முக்கிய சேவைகளை லாபம் பாராமல் நடத்துவது போன்றவையாகும்

மிக அரிதான நிகழ்வுகளில் கடந்த காலங்களில், இது போன்ற ஆலோசனைகள், முதலீட்டாளர்களிடம் வைக்கும் போது அவர்களின் பதில் என்பது மெதுவாக தலை அசைப்பது அல்லது சோவியத் கம்யூனிஸம் நிலைகுலைந்ததின் சாட்சிகளாக இருப்பவர்களிடம் வரும் சீற்றம் போல இருக்கும். இது முதலாளித்துவத்தை கொன்றுவிடும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் இப்போது நினைக்க முடியாத அனைத்துமே இங்கிருக்கிறது: அனைவருக்குமான வருமானத்தை உறுதிபடுத்துதல்,அரசு பிணை எடுப்பு (BAIL OUT) அரசின் கடன்களுக்கு மத்திய வங்கிகள் மூலம் தரப்படும் நிதி. போன்ற அனைத்தும் … வேகமாக நடப்பதால் எப்போதும் இதற்கு சாதகமாக பேசுபவர்களையும் இது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கேள்வி என்னவென்றால், நாம் இதை உற்சாகத்துடன் செய்ய போகிறோமா மேலும் ஒரு மிகத்தெளிவான நோக்கத்துடன் இந்த சமூகத்தை அடுத்த பக்கத்திற்கு எழுவதற்காக அல்லது தயக்கத்துடன் தற்போது உடைத்து போன இந்த அமைப்பு முறையை மீண்டெழ வைக்கப்போகிறோமா?

ஏன் பொருளாதார வல்லுனர்கள், இந்த நெருக்கடி நிலையை மீட்பதற்கு எடுக்கும் நடவடிக்கைகளை முன் விரோதமாக பார்க்கின்றனர் என்பதை புரிந்துகொள்வோம்.

அனைவருக்குமான வருமான உறுதிபடுத்துதல் என்பது, பிரச்சனை என்னவென்றால், ”இது மக்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்காது” என பிரிட்டிஷ் கன்சர்வேட்டிவ் கட்சி அரசியல்வாதி ஜன் டங்கன் ஸ்மித் கூறுகிறார்

நிறுவனங்களை அரசு சொந்தமாக்கி கொள்ளும் போது மற்றும் உற்பத்தியை தொடங்க முயற்சிக்கும் போது (உதாரணமாக வெண்டிலேட்டர்கள்), தடையற்ற சந்தை பொருளாதார நிபுணர்கள் நம்புவது போல்  சந்தைவழியில் மக்களை கட்டுபடுத்தும் முயற்சிகள் என்பது அவர்கள் கருத்துப்படி புத்திசாலித்தனமான ஒரு இயந்திரம்  செய்வதுபோல ஒரு திட்ட நிறுவனமாகவோ அல்லது அரசு எப்பொதும் செய்யும் என்ற ஒழுங்கை உலகிற்கு கொண்டு வரும்.

 

அரசின் கடன்களுக்கு மத்திய வங்கிகள் நிதி அளிப்பது என்பது முதலாளித்துவத்தின் ஒரு மானசீகமான தோல்வியாகும்.தொழில் முனைவோர்களும், போட்டியும் தான் வளர்ச்சியை வழிநடத்திச் செல்லும். இங்கிலாந்து வங்கியோ அல்லது பணத்தை அச்சடித்து அவர்களீன் கரூவூலத்திற்கு கடனாக  கொடுக்கும் பெடரல் வங்கியாகவோ இருக்காது. ஆகையால் முதலாளித்துவம் நிரந்தரமாக நம்பியிருக்கும் இந்த முறைகள் என்பது பெரும்பாலான பாரம்பரிய பொருளாதாரத்தில் நினைத்து பார்க்கமுடியாத ஒன்று.

சுருங்க கூறுவதெனில்.

covid-19 என்பது அனைத்தையும் ஒரு குறுகிய பொருளுக்குள் கொண்டு வந்துள்ளது. 2015 இல் இருந்து, நான் சொல்லிகொண்டு வருகிறேன் நாம் ஒரு புதிதான, ஒரு வேறுபட்ட ஒரு முதலாளித்துவ மாதிரியை எடுத்து கொள்ளவேண்டும், பொருளாதார ரீதியாக வயதான மக்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும், காலநிலை நெருக்கடி என்று மிரட்டியாவது செய்யலாம்.

ஆனால்,

இந்த  2020 ஆண்டு முடிவிற்கு முன்னர் பல மாற்றங்களை நாம் காணப்போகிறோம். பல பில்லியன் டாலர்கள் அடிப்படை வருமான பணவழங்கீடுக்கு கொடுக்கப்படும். அது தேசியமயமாக்கப்பட விமானநிறுவனங்களிலும், சங்கிலி தொடர் விடுதிகளிலும் கண் கூடாகத் தெரியும்; மற்றும் வளர்ந்த பொருளாதார நாடுகளிலுள்ள அரசின் கடன்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போது தோராயமாக 103 சதவீதம் ஆகும். இது அதிகரிக்கும். எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பது நமக்கு தெரியாது ஏனெனில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்தளவுக்கு வீழும் என்று நமக்கு தெரியாது.

நாம் உண்மையாகவே துரதிஷ்டசாலியாக இருந்தால், தொடர்ச்சியான கடன் திருப்பி செலுத்தாதவர்கள் மற்றும் சில பலவீனமான நிலையிலுள்ள அரசுகளிடையே காணப்படும் ஒற்றுமையின்மை காரணமாக இது பலதரப்பட்ட சர்வதேச ஒழுங்கை சீர்குலைக்ககூடியதாக அமைகிறது. வெனிசுலா, வடகொரியா அல்லது உக்ரைன் போன்ற நாடுகள் ஒருவேளை சீர்குலைந்தால் அருகாமையில் உள்ள அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற பெரிய நாடுகள் அவர்களின் இராணுவத்தினரை அனுப்பி அந்நாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும்.

1930இல் தீவிர எதிர் உலகமயமாக்கலை பார்த்துள்ளோம். அது வங்கி சீர்குலைவிலிருந்து, சர்வதேச நாணய முறை உடைந்தது நோக்கி செல்கிறது. மேலும் நாடுகளுக்கிடையில் ஏற்படும் ஒப்பந்தங்களை நிராகரிப்பது மற்றும் கட்டாயப்படுத்தி இணைத்தலோடு முடிகிறது.

தற்போதைய நெருக்கடி மிகப்பெரிய, வலிமையான நிறுவனங்களிலிருந்து ஆரம்பமான போதிலும் – சர்வதேச நிதி ஆணையம் IMF, சர்வதேச சுகாதார அமைப்பு WHO, ஐக்கிய நாடுகள் சபை UN போன்றவை அவற்றில் சில. எந்த ஒரு வலிமையான  நாடும் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு தலைமைதாங்க முன்வரவில்லை, பொருளாதார கடன் வழங்குபவராகவும்  இல்லாதிருப்பது போன்ற இதே அடிப்படை பிரச்சனையை நாம் 1930களில் சந்திதோம்,

நாம் ஒரு வேளை மரபுவழி பொருளாதார நடவடிக்கைகளை தொடர்ந்தோமானால், 2008க்கு பின்னர், இந்த நெருக்கடி முடிந்தபின்னர், அரசியல்வாதிகள் மேன்மேலும் சிக்கன நடவடிக்கைகளை எடுக்க தொடங்குவர்- சுகாதார நிதி ஒதுக்கீடு ரத்து, ஊதிய ரத்து மற்றும் சாதாரன மக்களின் வரி உயர்வு, அரசின் செலவினங்களை ரத்து செய்தல் மற்றும் அரசின் கடன் குவியலை அரித்து எடுத்தல் போன்றவை நடக்கும்

அது தான் ‘தடையற்ற சந்தை பொருளாதார’த்திற்கான ஒரு அடிப்படை ஆனால் சில மனிதர்கள் அதை ஒரு பைத்தியகாரத்தனமான செயல் என பார்க்கக்கூடும்

14ஆம் நூற்றாண்டில், பல லட்சம் மக்களை பலிகொண்ட பிளேக் முடிந்தபின், நிலப்புரத்துவாதிகள் இதை தான் செய்ய முயற்சித்தார்கள். தங்களின் பழைய சலுகைகள், பண்பாடு மற்றும் பொருளாதார கருத்துகளை மக்களின் மீது மீண்டும் திணிக்க முற்பட்டனர்.

அதன் பின்னர், உடனடியான ரத்தப்புரட்சிகளை அது வழிநடத்தியது- இங்கிலாந்தில் நடந்த விவசாயிகளின் புரட்சி, பிரான்சில் ஜாக்ரி (Jacquerie)  என அழைக்கப்ப்டும் புரட்சி கைவினை கலைஞர்கள், பிரான்ஸில் பூர்ஷ்வாக்கள் என்ப்படும் குடிமக்களால் வழிநடத்தபட்டு கலகங்களை தொடர்ந்து பல  நகரங்கள் கைப்பற்றப்பட்டன.

 

பிளேக்கு பின்னர் நடைபெற்ற கிளர்ச்சி தோல்வியுற்றாலும், நிரந்தர மாற்றத்திற்கான ஒரு மனநிலையை மக்கள் மனதில் ஏற்படுத்தியது. ”அவநம்பிக்கை மற்றும் பயத்தில் இருந்து ஒரு புதிய நம்பிக்கையை நோக்கி….. சாமானிய மக்களால் இவ்வுலகத்தை மாற்றமுடியும் என்ற நம்பிக்கை பெற்றனர். மேலும் பூர்ஷ்வாக்களின் புரட்சியானது முதலாளித்துவத்துவத்தின் பாதயை திறந்துவிட்டது.

முதலாளித்துவத்த்ற்கு பிந்தைய கற்பனையை

இன்று நாம் என்ன செய்ய வேண்டுமென புரிந்துகொள்ளவேண்டுமெனில் ,ஏற்கனவே உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளின் மனநிலையை விட, நமக்கு ஒரு பரந்துபட்ட பார்வை தேவை.

நிலக்கரிஎரிநட்சத்திரக்கல் இந்த புவியை தாக்கவருவது போல், வெளியிலிருந்து வரும் அதிர்வுகளுக்கு ஒரு தற்காலிகமான தீர்வு தேவை. உண்மையில் இவை, ”முதலாளித்துவத்தால் ஏற்படுத்தப்படும் ஒரு வகை அதிர்ச்சிகள் என்று அவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

தொழில்துறை முதலாளித்துவம் நிலக்கரி (CARBON) இல்லாமல் எப்படி இருக்குமென்று நமக்கு தெரியாது, ஏனென்றால் நம்முடைய நிறுவனங்கள், பழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் அனைத்தும் புதைபடிவ எரிபொருளை அடிப்படையாக கொண்டவை.

அதுபோல, குடிசைகளில் வாழாத கோடிக்கணக்கான மக்கள், அழிக்கப்படாத காடுகள், பெருந்தொற்று இல்லாத மனித சமூகம் எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. ஏனென்றால் இவைகள் எல்லாம் முதலாளித்துவத்துவம் இருப்பதற்கான ஒரு அடிப்படை காரணிகளாக உண்மையிலேயே உள்ளன.

அதனால் தான் நான் வாதிடுகிறேன் நீண்ட காலத்திற்கு முதலாளித்துவம் பிழைத்திருப்பதற்கு சாத்தியமில்லை. குறுகிய காலத்திற்கு அது பிழைத்திருக்க வேண்டுமெனில் அது ”முதலாளித்துவத்திற்கு பிந்தைய” (post capitalism) காரணிகளை சுவிகரித்துகொண்டு தான் இருக்கமுடியும்.

கோரானா வைரஸ் தாக்காத வரை, காட்டுக்குள் இருந்து அழுவது போல் இருக்கும். ஒப்பீட்டளவில் சிறிய திட்டங்களுக்கு  கூட அரசின் தலையீடு வேண்டும் என்று வாதாடுபவர்களில், இங்கிலாந்தில் லேபர் கட்சியை சேர்ந்த ஜெரிமி கோர்பைன் அல்லது அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் ஆகியோர் தேர்தலில் வாக்காளர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

மக்கொயர் வெல்த்  எனும் ஆஸ்திரேலியா முதலீட்டாளர் குழுமம்(AIG) சேர்ந்த ஒரு ஆய்வாளரை பார்த்த போது நான் அதிர்ச்சியடைந்தேன், உலகத்தின் பெரும் முதலீட்டார்களின் நிறுவனம் AIG சொல்கிறது ’வழக்கமான முதலாளித்துவம் என்பது மரணிக்கிறது அல்லது கம்யூனிசத்திற்கு நெருக்கமான முறையில் அது மாற்றமடைகிறது 

திடீரென்று அரசின் தலையீடு தேவை என்பதனால் இதை நாங்கள் சொல்லவில்லை என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம் என மெக்கொயர் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் சாமான்ய மக்களின் முக்கியத்துவம் என்பது சந்தையின் தேர்வுகளிலிருந்து ‘நியாயமான மற்றும் நன்மை தரக்கூடிய’’ என்ற கருத்துகளை நோக்கி வந்தடைந்துள்ளது.

14ஆம் நூற்றாண்டின் மாபெரும் பிளெக், நிலப்பிரத்துவத்திற்கு பிந்தைய கற்பனையை தூண்டியது என்றால், கோவிட் 19 முதலாளித்துவத்த்ற்கு பிந்தைய கற்பனையை விரைவில் தூண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

-பால் மேசன்

தமிழில்: கார்த்திக்

 

https://www.aljazeera.com/indepth/opinion/coronavirus-signal-capitalism-200330092216678.html

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW