துப்புரவு தொழிலாளர்களையும் சுகாதாரப் பணியாளர்களைப் போல் நடத்து, குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 20,000 வழங்கு !

28 Apr 2020

அக்கறையுள்ள குடிமக்கள் குழு ஒன்று, எவ்வாறு கொவிட்-19 பெருந்தொற்று துப்புரவு தொழிலாளர்கள் நிலை குறித்து நம்மை மறுபரிசீலனை செய்ய உதவும் என்பது குறித்த திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்

அக்கறையுள்ள குடிமக்கள் – கல்வியாளர்கள், உரிமை ஆர்வலர்கள் மற்றும் பிறரை உள்ளடக்கிய குழு ஒன்று , மத்திய மாநில அரசுகள் மற்றும் பொதுச் சமூகத்துக்கும் சேர்த்து திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் துப்புரவு தொழிலாளர்கள் நிலையை விளக்கியும், அவர்களது நல்வாழ்வுக்கு செய்யப்பட வேண்டிய பணிகளை பட்டியலிட்டும் காட்டியுள்ளனர்.

துப்புரவுத் தொழில் மீதான சாதிய அடிப்படையும், இந்தியாவில் சீரழிந்த நிலையில் இத்தொழில் உள்ளதால், இந்த நாட்டை சுத்தமாக வைத்திருக்க உழைக்கும் தொழிலாளர்கள் இதுபோன்ற பெருந்தொற்று காலத்தில் கூட கண்ணியமும், உரிய பாதுகாப்பும் இன்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள் என கடிதம் எழுதியவர்கள் வாதிடுகிறார்கள். முதன்முறையாக, சமூகத்தின் சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் வேலையைச் செய்யும் மக்கள் கவனிக்கப்படும் அதே நேரத்தில் அவர்களது நிலைமை இவ்வாறு இருக்கிறது.

மருத்துவர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களது வேலை எவ்வாறு ஒன்றுக்கொன்று ஈடுசெய்வதாகவும், அவர்களுடைய நோக்கம் ஒன்றாகவும் உள்ளதோ, அதேபோல், சுகாதாரமும் நல்வாழ்வும் ஒன்றுக்கொன்று ஈடுசெய்பவை, உண்மையில் அவை ஒன்றையொன்று ஒத்தவை என்ற புரிதலை நாம் கட்டமைக்க வேண்டும்” எனவும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் புரிதல் ஒரே இரவில் கட்டமைக்கப்பட முடியாது என்ற போதிலும், சமூகமும் அரசும், சில சரியான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் துப்புரவுப் பணியாளர்கள் தங்களுக்கு உரியதைப் பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் சுகாதாரப் பணியாளர்களாக வகைப்படுத்தப்படுவதும், குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.20,000 அவர்களுக்கு வழங்கப்படுவதும் மற்றும் ஒப்பந்தமயமாதல் நீக்கப்படுவதும் இதில் அடங்கும்.

வாய்ப்புகள் பெற்ற குடிமக்கள் சுகாதாரத் தேவைகளில் ஊக்கமுடன் பங்கெடுக்க வேண்டும். தங்கள் குப்பைகளை பிரித்து வைப்பதும் உணவுக் குப்பைகளை உரமாக்குவதும் அவர்கள் செய்ய வேண்டும் என அக்கடிதம் அறிவுறுத்துகிறது.

முழுமையான அக்கடிதமும் அதில் கையொப்பமிட்டவர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அன்புள்ள மத்திய மாநில அமைச்சர்கள் மற்றும் இந்திய நாட்டு மக்களுக்கு,

இக்கடிதம் சமூகம் மற்றும் அரசின் அனைத்து உறுப்புகளுக்கும், எங்களது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக சாதி மற்றும் வர்க்கரீதியாக வாய்ப்புகள் உள்ளவர்களாகவும் இருப்பவர்களுக்கு எழுதப்படுகிறது. இக்கடிதம் கொரோனா பெருந்தொற்று என்ற மிகப்பெரிய தேசிய மற்றும் உலகளாவிய சிக்கலின் காலத்தில் எழுதப்பட்டுள்ளது. இப்பெருந்தொற்று பல அழிவுகளை நம்முன்னே கட்டவிழ்த்து விட்டாலும், அது, நாம் கவனிக்கத் தயாராக இருந்தால், நம் பொது மற்றும் சொந்த வாழ்வின் பல அம்சங்கள் குறித்து அறிவுறுத்தும் நல்ல ஆசிரியராக நமக்கு இருக்கிறது.

அவற்றில் ஒன்று, கண்டிப்பாக, சுகாதாரம், நீதி மற்றும் சுய நலன் ஆகியவற்றிற்கிடையே உள்ள நெருங்கிய உறவு. இக்கடிதத்தை எழுதத் தோண்டிய மேலோட்டமான காரணம் இதுதான் என்றாலும், இக்கூட்டு நெருக்கடிக் காலத்தில் துப்புரவுப் பணியாளர்கள் பாராட்டப்பட்டது குறித்து நாம் கேட்டறிந்த அறிக்கைகள் தான் உடனடிக் காரணம். இந்த பாராட்டுகள் பெரும்பாலும் சிறு அளவிலான பணமாகவும், உணவாகவும் வெளிப்பட்டன.

இப்பாராட்டு கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனபோதும் கூட, வாய்ப்புகள் பெற்ற மனிதர்கள், இத்தனை தலைமுறைகளாக மனித இனத்தின் கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர்கள் தம்மைப் போன்றே இரத்தமும் சதையுமான மனிதர்கள் என்பதை இப்போதுதான் திடீரென கண்டுபிடித்தார்கள் என்பது போல் உள்ளது. இருந்தாலும், எவ்வளவு சிறிதாக இருந்தாலும்கூட, “வராமலேயே இருப்பதற்கு, ஏதோ ஒன்று வருவது பரவாயில்லை” என்ற வழக்கில் உண்மை இல்லாமல் இல்லை. இந்தப் புதிய கண்டுபிடுப்பும் பாராட்டும் ஒரு புதிய துவக்கத்திற்கான விதைகளாக இருக்கலாம்.

இந்தப் புரிதலை நாம் உணர்ந்து கொள்ள, நாம் இப்போது கண்ட அடையாள அன்பளிப்புகளிலுருந்து வெகு தூரம் செல்ல வேண்டும். இங்கே கோரப்படுவது, நம்மை விழிப்படையச் செய்யவும், புரிதலை ஏற்படுத்தவும், அவற்றை சுகாதாரம் மற்றும் நீதியின் விழுமியங்கள் மீதான சரியான பார்வையுடன் இணைப்பதும், அவை ஒரு அறிவார்ந்த சுயநலத்தின் அடிப்படையில் எழும் எதார்த்தமான நடவடிக்கைகள் தான். இதனைக் கருத்தில் கொண்டு, முதல் படியாக, பின்வருபவை கண்டிப்பாக தேவை என நாங்கள் முன்வைக்கிறோம்.

  1. துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்களுடன் சேர்த்து சுகாதாரப் பணியாளர்களாக வகைப்படுத்தப்பட வேண்டும். இது முதலில் அவர்களது கண்ணியத்தைக் காப்பாற்றும்.
  2. அ) அனைத்து துப்புரவுப் பணிகளும் எந்திரமயமாக்கப்பட வேண்டும்
    ஆ) எந்த துப்புரவுப் பணியும் ஒப்பந்தப் பணியாக இருக்கக் கூடாது
    இ) குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 20,000 நிர்ணயிக்கப்பட வேண்டும். (சென்னை போன்ற பெருநகரங்களில், 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ரூ.20,000 என்பது சில அடிப்படைத் தேவைகளுக்காவது சரியாக இருக்கும்).
    ஈ) துப்புரவுப் பணியாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விர்வான மருத்துவக் காப்பீடு செய்யப்பட வேண்டும்.
    உ) ”ஆபத்தான பணி” என விவரிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
    ஊ) அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும்.
  3. காவலர்களைப் போலவே, துப்புரவுப் பணியாளர்களும் குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள பணியாற்றுவதால், அவர்களுக்கும் தங்கும் வீடுகள் வழங்கப்பட வேண்டும். பலர் இரவு நேரங்களில் வேலை செய்வதால், அவர்களது பணியிடங்களுக்குச் சென்றுவர பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
  4. காலப்போக்கில், துப்புரவுப் பணியாளர்கள் மேற்பார்வையாளர்களாக பணியாற்ற வேண்டும். அனைத்து குடிமக்களும் பொதுஇடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள பங்களிப்பார்கள், குப்பைகளை பிரித்து வைப்பார்கள், மக்கும் குப்பைகளை உரமாக தங்கள் வீடுகளிலேயே மாற்றுவார்கள். துப்புரவுப் பணியாளர்கள் குடிமக்களை தோட்டங்கள் அமைக்கவும் குப்பைகளிலிருந்து உருவான உரத்தின் மூலம் காய்கறிகளையும் பழங்களையும் விளைவிக்க உதவுவார்கள்.
  5. துப்புரவுப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

இவை ஒரு சமூக மற்றும் கலாச்சாரப் புரட்சி போல் தோன்றினாலும், விழுமியங்களை வலுப்படுத்தும் சுயநலனும், நீதி குறித்த விவேகமான பார்வையும் இருப்பதன் மூலம் சுகாதாரத்தின் கணக்கிட முடியாத பலன்கள் கிட்டும் என்ற புரிதலின் வினைபொருளே இவை. ஸ்வச் பாரத் மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் மேற்குறிபிட்ட முன்வைப்புகளிக்கு எளிதாக நிதியளிக்க முடியும். இவை நடைமுறைப்படுத்தப்பட நம்முடைய தீர்மானம் மட்டுமே தற்போது தேவை.

இந்தியாவிலுள்ள துப்புரவு தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள் , பல விடுதலை இயக்கங்கள் இங்கு இருந்துள்ளன. உதாரணத்திற்கு, கடந்த 2012 ஆம் ஆண்டு, சஃபாய் கரம்ச்சாரி அண்டோலன் அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட பீம் யாத்ரா, பல ஆயிரம் துப்புரவுத் தொழிலாளர்களை சமூகத்தால் அவர்கள் திணிக்கப்பட்ட அவமானகரமான மனித மலத்தை வெறும் கூடையும் துடைப்பமும் கொண்டு அள்ளும் பழக்கத்திலிருந்து விடுவித்தது. இது உண்மையாக இருந்தாலும் எமது கடிதம் முற்றிலும் வேறான சிக்கலை நோக்குகிறது. அது என்னவென்றால், ’உயர்’சாதிகளால் உருவாக்கப்பட்ட வலையிலிருந்து அவர்களையே மீட்பது.

கொரோனா வைரஸ் பரவல் மீதான பயத்தின் காரணமாக, நம் நாட்டை சுத்தமாகவும் கன்னியமாகவும் மாற்றுவது மட்டுமல்ல, துப்புரவுப் பணி அம்மாவிடமிருந்து மகளுக்கும், தந்தையிடமிருந்து மகனுக்கும் சாதிவழி கடத்தப்படுவதையும் தடுக்கவும் நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நம் முன், இந்நாட்டிலிருந்து சாதியையும் தீண்டாமையையும் முற்றிலும் ஒழிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. நம்மால் இதைச் சாதிக்க முடிந்தால், வைரஸ் எழுப்பிய சவாலுக்கு, ஆழத்திலிருந்து நம்மை உயரத்துக்குக் கொண்டு சென்ற பதில் நடவடிக்கையை நாம் எடுத்ததாக இருக்கும்.

ஆதலால், பொது அறிவும், மனசாட்சியும் கொண்ட மக்களை, நடைமுறை அறிவு, நேர்மை, தூய்மை ஆகியவற்றை கருத்தில் கொள்ளும் நமது தேசத்தின் மறுபிறப்பில் பங்கேற்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கையொப்பமிட்டவர்கள்:

ஜி. இஸ்ரேல், சிவ சங்கர், எஸ். சுப்ரமணியன், மாரி மார்ஸல் தேகேக்கரா, டத்தகட்டா சென்குப்தா, ஈ. ஆசைத்தம்பி, ஏ.இசைய்யா, அருள் கணேஷ், ரோமர் கொர்ரியா, நிது திவான், டி. ஜெயராஜ், காட்ஃப்ரே டீ’லிமா, திபாங்கர், அப்துல் மாட்டின், இராஜேஸ்வரி சுந்தர்ராஜன், அலோக் லத்தா, காந்தி ஸ்வரூப், அனுருத்தா, கீதா  இராமஸ்வாமி, தீரஜ் சிங், முத்துலக்ஷ்மி கே, கங்கா பார்வதி, கருப்பு சாமி, கமலாக்கர் துவ்வூர், புரந்தர் படூரி, பரம்ஜித் சிங், கே.வி. சுப்ரமண்யன், என். உஷா இராணி, ரோனக் சோனி, ரேவா யூனஸ், இராகுல் வர்மன், சுரேஷ் தேவசகாயம், ஹரி சங்கர், எஸ். ஆனந்த், பிரபா அப்பாசாமி, வ. கீதா, பத்மநாபன் இராமஸ்வாமி, சுப்ரதிக் சக்ரபொர்த்தி, சுபாஷ் கடடே, தேவிகா சிங், சித்தார்த் கே ஜே, டி. பார்த்தசாரதி, நீத்தி பாய், அனந்த் சங்கர், ப்ரமாதநாத் சாஸ்த்ரி, சீதாராம் அல்லடி, பிட்டு கே ஆர், சுவசிஷ் டீ, மைத்ரேயீஷ் கட்டக், நிலாஞ்சன் தட்டா, ஸ்வாதின் பட்டநாயக்,  அருள் சங்கர், பிந்துலக்ஷ்மி, விஜய் இரவிக்குமார், சுஷ்மிதா வேணுகோபாலன், மதுஸ்ரீ பாசு, கிஞ்சல் பாணர்ஜி, அர்னாப் ப்ரியா சாஹா, ஆர். பரமானந்தம், இசக்கிராஜ், போஜ இராஜன், பிரபு, சரவணன், மணிவண்ணன், கெளதமராஜன், அண்ணாதுரை, பூபதி, அரசி, வேல்முருகன், யாசிகா, உலகநாதன், கார்த்திகா, ஆதித்ய ஷர்மா, எஸ். அக்‌ஷய், ரோஹன் பூஜாரி, தயா சுப்ரமணியன், சதீஷ் தேஷ்பாண்டே, கெளஷிக் சுந்தர் இராஜன், அஷ்வினி தேஷ்பாண்டே, ஜயதி கோஷ், ஏ. மனு, பாபி எழுத்தச்சன், சாரதா நடராஜன், அனீஷ் பாலகிருஷ்ணன், சுதா நாராயணன், ஷிஷிர் ஜா, செளமியஜித் ப்ரமானிக், வெங்கடேஷ் ஆத்ரேயா, வம்சி வகுலபரனம், அனுஷ்கா குரியன், எப்ரதா சாரதி, கென்னடி ஜோசப்,  மதுசுதன் இராமன், என், இராமதாஸ், அபிஷேக் கஷ்யப், அக்‌ஷய் சவந்த், தெபாங்ஷு முகர்ஜி, ஸ்ரீவித்யா நடராஜன், நிகல் ஜோசப், அலக்கா பாசு, ஸ்ரீபத் மோதிராம், கனிஷ்கா சிங், தேவேஷ் கட்டர்கர், மானவ் கைரே, அதவைத்தி இராய், ப்ரதிக் இராய், கிரிஜா கோட்போலே, ப்ரஞ்சல் நாயக், சிவா த்ரிசூல், திஷா பானட், தீஸ்தா சேதல்வாத், ப்ரொபல் தாஸ்குப்தா, முரளி ஸ்ரீனிவாசன், சுரேகா பானட், ஓம் தமாணி, இரஞ்சித் இராய், ஜி. இரஞ்சினி, பிரசாந்த் கொச்செர்லகோட்டா , அருணா புர்ட்டே, நிஹரிகா பாணர்ஜி, சுமதி பீத்தி, எஸ். பாலகிருஷ்ணன், ஷ்ரதா சிக்கெரூர், ஜனனி கல்யாணராமன், பஞ்சமி ஜோஸ், இஷான் சந்த்ரா, அனிகெட் கவுர், எஸ். பாண்டிகுமார், ஏ. தங்கபெருமாள், சிவா. எஸ், கே. சுருளிராஜ், ஒய். ஸ்ரீனிவாசராவ், சயந்தி, தேஜேந்திர பிரதாப் கெளதம், ஸ்ரீனிவாஸ் வங்காரி, டீ. வடிவுக்கரசி, டீ. இராஜம்மாள், ஆர். மோகன்ராஜ், ஷ்யாம், ஆரதி, சமிக்‌ஷா, கிஷான் பாதக், அஞ்சலி ஜேம்ஸ், நிமேஷ் மாத்யூ, மானஸ் அரூண் சமந்த், ப்ரதீபா, நரேந்திரா, கேசு, நாகரத்னம், ஆகாஷ், முருகன், பாரதிதாசன், சித்ரா, செந்தில் பாபு, கோபிநாத் எஸ், ஆகாஷ் பட்டாச்சார்யா, ஆர். இராமானுஜம், அவிப்ஷா தாஸ், ஜெயஸ்ரீ சுப்பிரமணியன், வைபவ் வைஷ், ஸ்மரிகா லுல்ஸ், துள்சி ஸ்ரீனிவாசன், கிஷோர் தாரக், அனிந்தியா ஹஜ்ரா, ப்ரத்யாய் ஜெண்டர் ட்ரஸ்ட் – கல்கத்தா, தீபிகா ஜோஷி, தீபா வாசுதேவன், அருந்ததி துரு, சந்தீப் பாண்டே, ப்ரபீர் சாட்டர்ஜீ, ஸ்வரூபா சேகர், ரோசம்மா தாமஸ், சத்யேந்திர நாராயண் சிங் மற்றும் ஸுஸ்ருதா ஜாதவ்.

 

தமிழில்: பாலாஜி

 

https://thewire.in/labour/sanitation-workers-rights-covid-19

 

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW