கொரோனா வைரஸ்:அடித்து நொறுக்குதலும் ஆடிக் கறத்தலும் (Corono Virus:The Hammer and the Dance)

26 Mar 2020

(இந்தக் கட்டுரையானது “கொரோனா வைரசுக்கு எதிராக நாம் ஏன் செயாலாற்ற வேண்டும்” என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக தாமஸ் பியுயோ எழுதியுள்ளார். இவரது முந்தைய கட்டுரையை சுமார் நான்கு கோடி மக்கள் படித்துள்ளார்கள்,சுமார் 30 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.இந்தக் கட்டுரையை சென்ற வாரம் வரையிலும் சுமார் நாற்பது லட்சம் மக்கள் படித்துள்ளனர்)

கட்டுரையின் சாராம்சம்:கொரோனா வைரஸ் பரவலின் கடுமையைத் தணிக்க உலக நாடுகள் சில வாரங்களாகவே தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.லட்சக்கணக்கான உயிர்களை காப்பற்றுவதன் பொருட்டு ஒட்டுமொத்த சமுதாயமும்  பெரும் விலை கொடுக்கின்றனர்.ஒருவேலை இந்த கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ளவில்லைஎன்றால் பல லட்சக்கணக்கான மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும்.சுகாதார அமைப்புகளிடம் குறைவான எண்ணிக்கையிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள்  உள்ளதால்,சுகாதார கட்டமைப்பு நிலைகுலைவிற்குள்ளாகி பல ஆயிரம் பேர் உயிரழப்பார்கள்.

கொரோனா வைரசால் என்ன நேரப் போகிறது? இது ஒரு பெரிய பிரச்சனையல்ல எனப் பேசிய நாடுகள், அடுத்த ஒரு வாரத்திலேயே தங்களது நாட்டில் எமெர்ஜென்சி நிலையை அறிவிக்கின்ற நிலைக்கு போய்விட்டன. ஆனால் இன்னும் சில நாடுகள் தீவிரமான நடவடிக்கைகள் எடுக்காமல் உள்ளன. இது ஏன்?

நாம் எப்படி இந்த பிரச்சனைக்கு  வினையாற்றுவது என்ற  ஒரே கேள்வியைத்தான் அனைத்து நாடுகளும் கேட்கின்றன.இக்கேள்விக்கான விடையோ அவர்களுக்கு கண்கூடாக தெரியவில்லை!

பிரான்ஸ்,பிலிபைன்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகள்,தங்களது நாடுகளில் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துகின்றது..ஆனால் அமெரிக்கா,இங்கிலாந்து மற்றும் நெதர்லேந்து போன்ற நாடுகள் பெரும் தயக்கக்கதுடனேயே சமுதாய விலக்கு போன்ற நடவடிக்கையை மேற்கொள்கிறது.

நிறைய புள்ளி விவரங்கள், பட விளக்கக் குறிப்புகளைக் கொண்டு கீழ்வரும் விஷயங்களை பற்றித்தான் நாம் இக்கட்டுரையில் தற்போது பேசப் போகிறோம்.

  1. சமகால நிலைமை (கொரோனா தொற்று குறித்த)  என்ன?
  2. என்னென்ன வாய்ப்புள் நம்முன்னே உள்ளன?
  3. நேரம்:அனைத்து நடவடிக்கைக்கும் முன் நிபந்தனையாக உள்ளது.
  4. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஏற்ற சரியான செயலுக்திகள் என்னவாக இருக்கலாம்?
  5. கொரோனா வைரசின் சமூகப் பொருளாதார விளைவுகள் குறித்து நாம் என்ன கருதுகின்றோம்?

நீங்கள் இந்த கட்டுரையை படித்து முடித்தப் பிறகு, கீழ்வரும் முடிவுக்கு வருவீர்கள்:

  • நமது சுகாதாரக் கட்டமைப்பு ஏற்கனவே நிலைகுலையத் தொடங்கிவிட்டது.
  • தற்போது அனைத்து நாடுகளிடமும் இரு வாய்ப்புகள் உள்ளன.ஒன்று கொரோனா வைரசுக்கு எதிராக கடுமையாக போராடுவது அல்லது மாபெரும் கொள்ளை நோயால் இன்னல்படுவது.
  • போராடாமல் இருந்தால் இந்த மாபெரும் கொள்ளை நோய்க்கு நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மனித உயிர்கள் இரையாகும்.சில நாடுகளில் லட்சம் பேர் கூட மரணமடையலாம்.மேலும்,அடுத்த கட்ட தொற்று அலையைக் கூட தவிர்க்க முடியாது!
  • நாம் கடுமையாக போராடினால்,உயிரழப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.
  • நமது சுகாதார கட்டமைப்பு, நிலைகுலைவிற்கு உள்ளாவதை தடுத்திட முடியும்
  • இன்னும் நம்மை நன்றாக தயார்படுத்திக் கொள்ளமுடியும்.
  • நாம் கற்றுக் கொள்ளமுடியும்.
  • இந்த உலகம் எதுகுறித்தும் விரைவாக அறிந்துகொள்ளாது.ஆனால் நாம் விரைவாக அறிந்துகொள்ள வேண்டும்.ஏனெனில் இந்த வைரஸ் பற்றி சிறிதளவே நாம் அறிவோம்.
  • இதன் மூலமாக சிக்கலான ஒரு பிரச்சனைக்கு எதிராக ஏதேனும் நாம் சாதிக்க முடியும்.

நாம் போராடுவதற்கு தேர்ந்துகொண்டால்,உடனடியாக போராட்டத்தை தொடங்க வேண்டும்.பின்னர் நிதானமாக படிப்படியாக தொடரவேண்டும்.

நாம் சில வாரங்களுக்கு தனிமைப்பட்டிருக்கலாம்,சில மாதங்கள் கூட இது நீடிக்கலாம்.

ஆனால்,பின்னாளில் மேலதிக சுதந்திரம் நமக்கு மீண்டும் கிடைக்கப்பெறும்.

இயல்புநிலை உடனடியாக திரும்பிடாது. கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாக இயல்பு நிலைமைக்கு நாம் திரும்புவோம். இவையாவற்றையும் நாம் செய்யலாம், நமது பொருளாதாரத்தையும் இவ்வாறு சரி செய்யலாம்.

  1. தற்போதைய நிலைமை என்ன?

கடந்த வாரத்தில் கீழ்வரும் படத்தை பகிர்ந்திருந்தேன்

சீனாவிற்கு வெளியே கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நாடுகளின் நிலைமையை இப்படம் காட்டியது. அதில் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நிலைமையை  பார்த்தோம். தற்போது வலது ஓரத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளின் நிலைமையை பார்ப்போம்.

நாம் நினைத்தது போல,சுமார் ஒரு டசன் நாடுகளில் கொரோனா தொற்று புதிதாக பரவியுள்ளது. தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்த நாடுகளில் மட்டுமே தற்போது கவனத்தை குவித்துள்ளேன்.

  • இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் அதிகளவில் தொற்று பரவியுள்ளது. இந்நாடுகள் தற்போது ஊரடங்கை அறிவித்துள்ளது.
  • இவை போக சுமார் 16 நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை சீனாவின் ஹூபே மாகாண எண்ணிக்கையை தாண்டி விட்டது. இந்நாடுகளில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான், மலேசியா, கனடா, போர்சுகல், ஆஸ்ட்ரேலியா, பிரேசில், செசியா போன்ற நாடுகள் ஹூபே எண்ணிக்கையை கடந்து விட்டன ஆனால் ஆயிரத்திற்கு குறைவாக உள்ளன. சுவிட்சர்லாந்து, ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரியா, பெல்ஜியம் நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளில் தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

மேற்கூறிய நாடுகளின் பட்டியலில் சில குறிப்பிடத்தக்க அம்சம் தென்படுகிறதா? சீனா மற்றும்  ஈரானுக்கு வெளியே பெரும் கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் பெரும்பாலும் வளமான நாடுகளாகவே உள்ளனவே? இதனால் இந்த வைரஸ் பணக்கார நாடுகளை மட்டுமே தாக்கும் எனக் கருதமுடியுமா? அல்லது பணக்கார நாடுகளால் மட்டுமே இந்த தொற்றை கண்டுபிடிக்க முடிந்தது எனக் கருத முடியுமா? இல்லை

விஷயமென்னவென்றால் ஏழை  நாடுகளை இதுவரை இந்த வைரஸ் தாக்கவில்லை. வெப்ப சீதோஷன நிலைமையால் கூட  தாமதமாக தாக்கக் கூடும். ஆனால் தொற்றில் இருந்து தப்புவது கடினம். தட்பவெப்பம் சீதோஷணம் தொற்றிலிருந்து காத்துவிடும் எனக் கருதினோம் என்றால் சிங்கபூர், மலேசியா மற்றும் பிரசில் போன்ற நாடுகள் கூட பாதித்திருக்காது அல்லவா?

பல நாடுகளில் கொரோனா தொற்று தாமதமாக தொடங்குவதற்கு சில காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று பாதிக்கப்பட்ட நாடுகளுடன் குறைவான போக்குவரத்து உறவைப் பரமாரித்திருக்கலாம். குறைவான பிணைப்பு தாமதத்திற்கு காராணமாக இருக்கலாம். சில நாடுகளில் பாதிப்பு, முன்னரே தொடங்கியிருக்கலாம். குறைவான பரிசோதனை நடவடிக்கையால் தொற்று இன்னும் கண்டறியப்படாமல் கூட இருக்கலாம்.

இதில் எதுவேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் பெரும்பாலான நாடுகள்  கொரோனா தொற்றில் இருந்து தப்பவே முடியாது. இவை யாவுமே காலத்தை பொறுத்தது.பெரும் பாதிப்பு வெடிப்பதற்கு முன்னர் பாதுகாப்பு நடவடிக்கையை தொடங்கிட வேண்டும்.

வெவ்வேறு நாடுகள் என்னன்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளன?அடுத்து பார்ப்போம்

  1. நம்முன்னே உள்ள வாய்ப்புகள் என்ன?

எனது முந்தைய கட்டுரையின் போதிருந்த நிலைமை இப்போதில்லை. சென்ற வாரத்திற்கு பிறகு நிலைமை நிறைய மாறிவுள்ளது.சில நாடுகள் நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கிவிட்டன.உதாரணமாக சிலவற்றை பார்ப்போம்.

ஸ்பெயின் மற்றும் பிரான்சின் நடவடிக்கைகள்

கொரோன வைரசின் பாதிப்பு குறித்து ஸ்பெயின் அதிகாரிவர்க்கம் குறை மதிப்பிட்டுள்ளது என்ற வாதத்தை ஸ்பெயின் ஜனாதிபதி 12/3 அன்று மறுத்தார். அதற்கடுத்த நாளான வெள்ளியன்று  ஸ்பெயின் அரசு எமெர்ஜென்சி நிலைமையை அறிவித்தது.

  • வேலை, மருந்து வாங்க செல்வது, மருத்துவமனைக்கு செல்வது மற்றும் வங்கி அல்லது காப்பீட்டு நிறுவனங்களுக்கு செல்வது என்பதைத் தவிர வேறெந்த காரணங்களுக்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது.
  • குறிப்பாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே நடப்பதோ அல்லது நண்பர்களைக் காண கூட்டிச் செல்வது தடைசெய்யப்பட்டது.
  • மதுபானக் கடைகள் மற்றும் உணவங்களை மூட உத்தரவிடப்பட்டது.உணவை வீட்டிற்கு பொட்டலம் கட்டி எடுத்துச் சென்றே உண்ணவேண்டும்.
  • விளையாட்டு,சினிமா,கண்காட்சியகம் உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு மையங்களும் மூடப்பட்டன.
  • குறைவான விருந்தினர்களுடன் திருமண நடத்த அனுமதிக்கப்பட்டன..இறப்பு நிகழ்வுகளையும் குறைவான நபர்களை கொண்டு நடத்தவேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
  • பெருவிரைவு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
  • திங்களன்று நாட்டின் எல்லைகள் மூடப்பட்டன.

சிலர் மேற்கூறியவற்றை ஆயத்த நடவடிக்கைகளின் பட்டியலாக பார்த்தனர். சிலர் நம்பிக்கையின்மையில் ஓலமிட்டனர்.இந்த முரண்களுக்கான தீர்வைக் இக்கட்டுரையில்  காண முயற்சிக்கின்றேன்.

பிரான்சு நாட்டின் நடவடிக்கையும் கிட்டத்தட்ட ஸ்பெயின் மேற்கொண்ட நடவடிக்கைகளையே ஒத்திருந்தன.ஆனால் இந்த நடவடிக்கைகளை தாமதமாக மேற்கொண்டன. ஆனால் தற்போது  தீவிரமாக நடைமுறைப்படுத்துகின்றன.உதாரணமாக சிறு நிறுவனங்களுக்கான வரி , வாடகை போன்ற கட்டணங்களுக்கு விலக்கு அளித்துள்ளன.

அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் மேற்கொள்ளப்படுகிற நடவடிக்கைகள்:

அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை வேண்டா வெறுப்பாகவே மேற்கொள்ளத் தொடங்கின.அமெரிக்கா மேற்கொண்ட காலவரிசைப் படியான நடவடிக்கைகள் வருமாறு

  • 11-03-2020 புதனன்று பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
  • வெள்ளியன்று நாட்டில் எமெர்ஜென்சி நிலைமை அறிவிக்கப்பட்டது. சமுதாய விலக்கு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
  • திங்களுன்று உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகள் போன்ற பொது இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறப்பட்டது.பொது நிகழ்சிகளில் பத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடுவதை தவிர்க்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறான சமுதாய விலக்கு அறிவுறுத்தல்கள்  உத்தரவாக அறிவிக்கப்படாமல் பரிந்துரைகளாக கூறப்பட்டது.

சில மாகானங்களும் நகரங்களும் தாமாகவே சில கட்டுப்பாடு   முன்முயற்சிகளை மேற்கொண்டன.

இங்கிலாந்தும் இதேபோல நடவடிக்கைகளை மேற்கொண்டன.நிறைய பரிந்துரைகளும் குறைவான உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த இரு தொகையான நாடுகளும்(ஸ்பெயின்,பிரான்சு ஒரு பக்கம்,அமெரிக்கா இங்கிலாந்து இன்னொரு பக்கம்) முற்றிலும் வெவ்வேறான முறைகளில்  கொரோனா வைரசை அணுகின.அம்முறைகளை நோயாற்றுதல்(MITIGATION) மற்றும் அடக்குதல் (SUPPRESION) எனலாம்.

வாய்ப்பு 1:எதுவும் செய்யாதிருத்தல்

இந்த முறைகளை ஆராய்வதற்கு முன்பாக.எதுவுமே செய்யாதிருந்தால் அமெரிக்கா போன்ற நாடுகளில் என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம்.

எதுவுமே செய்யாதிருந்தால்,அமெரிக்காவில் நிகழும் தொற்று மற்றும் மரணம்

எதுவுமே செய்யாதிருந்தால்,நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு  தொற்று ஏற்படும்.நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் நிலைகுலைவு ஏற்படும்,இறப்பு வீதம் அதிகரிக்கும்.சுமார் ஒரு கோடி மக்கள் உயிரழப்பார்கள்.அதாவது நாட்டு மக்கள் தொகையில் சுமார் 75 விழுக்காட்டு மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால்,சுமார் 4 விழுக்காட்டு மக்கள் உயிரழப்பார்கள்.அதாவது ஒரு கோடி பேர்.இந்த எண்ணிக்கையானது இரண்டாம் உலகப் போரில் உயிரழந்த அமெரிக்கர்களைக் காட்டிலும் 25 மடங்கு அதிகமாகும்.

நீங்கள் ஆச்சரியமடையலாம்.இந்த தொகை மிகையாக உள்ளது.இதைவிட குறைவாக இருக்குமென நான் எங்கோ படித்தனே எனலாம்.எண்ணிக்கையை பொறுத்தவரை,ஒருவர் எளிதாக குழப்பமடையாலம்.மக்களுக்கு தொற்று ஏற்படும் வீதமும்  மரண வீதமும் எந்தளவிற்கு ஏற்ற இறக்கமாக உள்ளதோ அந்தளவிற்கு  எண்ணிக்கையும் மாறிக் கொண்டிருக்கும்.எண்ணிக்கையை பொறுத்தவரை,25 விழுக்காட்டு மக்களுக்கு தொற்று ஏற்பட்டால் மரண வீதம் 4 விழுக்காட்டிற்கு மாறாக 0.6 விழுக்காடாக இருக்கும்.அவ்வாறானால் அமெரிக்காவில் சுமார் ஐந்து லட்சம் பேர் மரணமடைவார்கள்.

நாம் எதுவமே செய்யவில்லை என்றால் இறப்பு வீதம் மேற்கூறிய இரு எண்ணிக்கைக்கும் இடைப்பட்ட  ஒன்றாக இருக்கலாம்.ஆக இறப்பு வீதத்தை பொறுத்தே அனைத்து இழப்புகளையும் ஊக்கிக்க முடியும்.இறப்பு வீதத்தை எவ்வாறு புரிந்துகொள்வது.

இறப்பு  வீதம் குறித்து நாம் என்ன கருதவேண்டும்?

மேற்கூறிய அதே பட மாதிரியை  எடுத்துக் கொள்வோம்.ஆனால்,இங்கு .நோய்த்தொற்று மற்றும் மரண எண்ணிக்கைக்கு மாறாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை மட்டுமே கவனத்தில்கொள்வோம்.

வெளிர் நீளமுடைய பகுதியானது,கொரோனா பாதிப்பால் மருத்துவமனைக்கு செல்லவேண்டிய தேவையுள்ள மக்கள் ஆவர்.அடர் நீளமுடைய பகுதியானது,அவசர சிகிச்சை தேவைப் படுகிற மக்களின் எண்ணிக்கையாகும்.இந்த எண்ணிக்கை சுமார் முப்பது லட்சத்தைத் தொடுவதை பார்க்கின்றோம்.

தற்போது இந்த எண்ணிக்கையை அமெரிக்காவில்  எவ்வளவு அவசர சிகிச்சை பிரிவு உள்ளது என்ற எண்ணிக்கையோடு ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும்.தற்போது அமெரிக்காவில்  ஐம்பதாயிரம் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது.சிவப்புக் கோட்டில் இது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அதாவது அவசர சிகிச்சை படுக்கையின் எண்ணிக்கையை காட்டுகிறது.அப்படியானால்,இந்த சிவப்பு கோட்டை தாண்டிய எண்ணிக்கை வந்தால்,அம்மக்கள் பிரிவினருக்கு அவசர சிகிச்சை உதவி கிடைக்காது  என அர்த்தமாகும்.அவர்கள் மரணமைடையவேண்டியதுதான்.  அதேபோல அமெரிக்காவில் அவசர கால செயற்கை சுயாவசக் கருவிகளும்  ஒரு லட்சம் மட்டுமே உள்ளது.

மேற்கூறிய காரணத்தாலேயே சீனாவின் ஹூபெயிலும் இத்தாலியிலும் ஈரானிலும் பலர் மரணமடைந்தனர்.அதேநேரம்,ஹூபெயில் ஒரு இரவில் இரண்டு மருத்துவமனைகளை சீன அரசு கட்டியதால்,அங்கு மரண வீதம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தோற்று ஏற்பட்டவர்களில் 5 விழுக்காட்டு மக்களுக்கு அவசரகால சிகிச்சை அளிக்க இயலவில்லை என்றால் அங்கு மரண வீதம் அதிகரிக்கும்.

புள்ளி விவரங்களைப் பார்த்தால்,சீனாவை விட, அமெரிக்காவில் அதிக ஆபத்து ஏற்படும் எனத்தெரிகிறது.

மாபெரும் சேதம் :

மேற்கூறிய எண்ணிக்கைகள்,கொரோனா வைரசால் மட்டும் ஏற்படக் கூடியது.அத்நேரம் இதர நோயால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை எவ்வாறு காப்பது?ஒருவருக்கு தற்போது மாரடைப்பு வந்தால்,கொரோனா முன்னுரிமையால், ஆம்புலன்ஸ் வருவதற்கு ஐம்பது நிமிடங்கள் தாமதமாகலாம்.அவர் என்ன செய்வார்?அவருக்கு அவசர சிகிச்சை படுக்கை வேண்டும்.மருத்துவர் வேண்டும்.

அமெரிக்காவில் ஓராண்டில் மட்டும் சுமார் நாற்பது லட்சம் மக்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகிறார்கள்.அதில் ஐந்து லட்சம் மக்கள் மரணமடைகிறார்கள்(13 விழுக்காடு).தற்போது  அவசர சிகிச்சைப் வசதி  கிடைக்கப்பெறாமல்  போனால் மரண வீதம் 80விழுக்காடு அதிகரித்துவிடும்.50 விழுகாட்டு மக்கள் மரணமடைந்தாலும் அந்த எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும்.இது மாபெரும் சேதமாகும்.

அமெரிக்காவில் இந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தவிறனால்,அமெரிக்க சுகாதார அமைப்பே நிலைகுலைவை சந்திக்க நேரிடும்.மரண வீதம் பத்து மில்லியனைக் கூட நெருங்கலாம்.

மேற்கூறிய நிலைமை உலகில் தொற்று பரவியுள்ள அனைத்து நாடுகளுக்குமே பொருந்தும்..அவசர சிகிச்சை பிரிவு படுக்கைகள்,மருத்துவர்கள் ,செவிலியர்கள் போன்ற வசதிகள் கிட்டதட்ட அமெரிக்காவின் எண்ணிக்கையையே பிற நாடுகளும் ஒத்துள்ளன.சில நாடுகளில் இன்னும் மோசமாக உள்ளன.கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படாமல் போனால்,பொது சுகாதார அமைப்பு நிலைகுலைவிற்கு உள்ளாகும்.பெரும் மரணங்கள் ஏற்படும்.

ஆகவே,இந்த தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என தற்போதாவது நாம் உணர்ந்திருப்போம் என நம்புகிறேன்.அப்படி கட்டுப்படுத்துகிற முயற்சியில் இரு முறைகளை/வாய்ப்புகளை(முன்னர் குறிப்பிட்டது) நாடுகள் தேர்ந்துகொள்கின்றன.ஒன்று நோயாற்றுதல் மற்றொன்று அடக்குதல்.இதை அடுத்தப் பார்ப்போம்.

-அருண் நெடுஞ்சழியன்

ஆதாரக் கட்டுரை: Coronavirus: The Hammer and the Dance- Tomas Pueyo

(What the Next 18 Months Can Look Like, if Leaders Buy Us Time_

https://medium.com/@tomaspueyo/coronavirus-the-hammer-and-the-dance-be9337092b56

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW