‘கொரோனா கொள்ளைநோய் விரைவில் முடிவடையும்’ சீனாவில் நோய்த் தாக்கத்தின் போக்கை முன்னறிவித்த நோபல் பரிசு பெற்ற அறிஞர் மைக்கல் லெவிட்

26 Mar 2020

2013 ஆம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க உயிர் இயற்பியலாளர் (biophysicist) மைக்கல் லெவிட், கொரோனா குறித்து அமெரிக்க பத்திரிகை (Los Angeles Times) பின்வருமாறு கூறியிருக்கின்றார்,  “கொரோனா கொள்ளைநோய்யின் மோசமான கட்டத்தை உலகம்  ஏற்கனவே கடந்துவிட்டது. கொரோனா குறித்த உண்மையான நிலை உலக நாடுகள் பரப்புரை செய்யும் அளவுக்கு பயங்கரமானதல்ல

 

ஜனவரி முதல் சீனாவின் கொரோனா குறித்த தரவுகளை ஆராய்ந்த பின்னர், பல சுகாதார வல்லுநர்கள் கணிப்பதற்கு முன்பே சீனா மோசமான நிலையை அடையும் என கணக்கிட்டு அறிவித்திருந்தார். சீனாவில் கொரோனா தாக்கத்தின் போக்கை சரியாக கணித்ததால் லெவிட்டின் தற்போதைய கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

 

பிப்ரவரி முதல் வாரத்தில் சீனாவில் பதிவாகிவந்த புது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துவருவத்தைக்கொண்டு, அடுத்துவரும் சில வாரங்களில்  கொரோனா தொற்றுக்கு பலியாகுவோரின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்று அறிவித்திருந்தார். அதுபோல அடுத்துவந்த வாரங்களில் படிப்படியாக பலியானோரின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. உலக நாடுகள் எதிர்பார்த்ததிற்கு முன்பே சீனா இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துவிட்டது. இரண்டு மாத ஊரடங்குக்குப்  பின்னர் அதிகம் பாதிப்புக்குள்ளான ஹூபே மாகாணம் இயங்க ஆரபிபித்திருக்கிறது.

 

கூடுதலாக, பிற ஆய்வாளர்கள் பலியாவோரின் எண்ணிக்கையை இலட்சங்களில் கணித்தபோது சீனாவில் அவர் தொற்றுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சுமார் 80,000 என்றும், பலியாவோர் 3,250 என்றும் கணித்த்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை (24.03.2020) நிலவரப்படி, சீனாவில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,171, பலியானோர்  3,277 என்பதாக இருந்தது. இப்போது அவர் உலகின் பிற பகுதிகளிலும் கொரோனா வைரஸின் தாக்கம் இதையொத்தே இருக்கும் என்கிறார்.

 

தினமும் 50 க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்குள்ளானோரின் 78 நாடுகளின் தரவைப் பகுப்பாய்வு செய்த பின்னர், அவற்றில் பலநாடுகள் தொற்றிலிருந்து மீண்டுவரும் அறிகுறிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாக லெவிட் குறிப்பிடுகிறார்.  மிகப்பெரிய சேதங்களை விளைவிப்பதாக கணிக்கும் தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆய்வுகளை லெவிட் நிராகரிக்கிறார். குறிப்பாக பெருமளவில் சமூக-விலக்குகளை மேற்கொண்டுவரும் நாடுகளுக்கு இது பொருந்தாது என்று நம்பிக்கையளிக்கிறார்.

 

நோய்த்தொற்றுத் தரவுகள் தெளிவாக இல்லாத போதிலும் வளர்ச்சியின் மெதுவான அறிகுறிகள் இருப்பதாக கூறுகிறார். அதே நேரத்தில் பிற மருத்துவ விஞ்ஞானிகள் இவரது புள்ளிவிவரங்கள் குழப்பமானவை என்றும் உலகின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு சோதனைகள் குறைவாகவும்/கவனக்குறைவாக இருப்பதும் காரணமாக கூறுகின்றனர்.

 

அவரது கணிப்பு உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கணக்கான மக்களுக்கு நம்பிக்கை தருகிறது என்றாலும், நாடுகளின் நோய்ப்பரவலைக்  கட்டுப்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை லெவிட் வலியுறுத்துகிறார். சமூக-விலக்கம் (social-distancing) சார்ந்த ஆணைகள் முக்கியமானவை. குறிப்பாக பெரிய கூட்டங்களுக்கு தடை, ஏனெனில் வைரஸ் மிகவும் புதியது. மனிதர்கள் கொரோனா வைரசுக்கு எதிர்ப்பு சக்தி அற்றவர்கள், மேலும் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான சாத்தியங்கள் நமக்கு மிக அருகாமையில் இல்லை. “இது உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்ல வேண்டிய நேரம் அல்ல” என்றும் “சோதனை மூலம் மட்டுமல்லாமல், சீனா செயல்படுத்தும் உடல் வெப்பநிலை கண்காணிப்பு மற்றும் உடனடி சமூக தனிமைப்படுத்தலுடன் பாதிக்கப்பட்டுள்ளோரை முன்கூட்டியே கண்டறிய வேண்டும்” என்றும் அவர் எச்சரிக்கிறார்.

 

கூடுதலாக, இத்தாலியின் தடுப்பூசி எதிர்ப்பு மனப்பான்மை இத்தாலியில் வைரஸ் மிக வேகமாக பரவுவதற்கு ஒரு வலுவான காரணமாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் சாதாரண காய்ச்சலும் வேகமாக பரவினால் மருத்துவமனைகள் நிரம்பிவழியவும், கொரோனா தொற்று மேலும் பரவவே வாய்ப்புள்ளதாகவும் கருதுகிறார்.

 

லெவிட்டின் அவதானிப்புகள் இத்தகைய சிக்கலான காலங்களில் ஒரு குளிர் காற்று. முக்கியமானது, பீதியைக் கட்டுப்படுத்துவதாகும். “இந்த அபாயத்தை கடந்து நாம் நலமுடன் இருப்போம்” என்று அவர் கூறுகிறார்.

 

அவரைப் பொறுத்தவரை, கவனிக்கப்படவேண்டியது கொரோனா கொள்ளைநோயால் ஏற்படும் பொருளாதார பின்னடைவே  ஆகும். உலகெங்கிலும் உள்ள நாடுகள் உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளன, பலரும் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளன. COVID-19 வைரஸால் தூண்டப்பட்ட பொருளாதார மந்தநிலையை உலகம் பார்க்கும்போது, தொழிலாளர்கள் மற்றும் அன்றாட ஊதியத்தை நம்பியிருப்பவர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா துறை மிகவும் பாதிக்கப்படும் என்று கருதுகிறார்..

 

தமிழில்; ராதா

https://www.theweek.in/news/world/2020/03/24/covid-19-pandemic-will-end-soon-says-nobel-laureate-who-predicted-chinas-trajectory.html?fbclid=IwAR3RvKq0ZhW-dmgYg_rs05S4bHdrxr1QAftPgRcRFoZ73DrfAMmZeR_Ts-w

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW