சென்னை மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு !

18 Dec 2019
இன்று தரமணி சிபிடி கல்வி வளாகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக நின்ற இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்
மாணவர்கள் போராட்டத்தைக் கண்டு அஞ்சுகிற அரசு, போராடும் மாணவர்களைக் கைது செய்தும், சனநாயக சக்திகளிடமிருந்து மாணவர்களை அந்நியப்படுத்தியும் போராட்டங்களை ஒடுக்க நினைக்கிறது.
மாணவர்கள் போராட்டத்திற்குத் தார்மீக ஆதரவளித்த தோழர் செந்திலைக் கைது செய்து,
சிறையில் அடைப்பதன் மூலம், சனநாயக சக்திகளை ஒடுக்கும் இந்த அரசு, யாருக்கான அரசு?
ஒட்டுமொத்த இந்தியத் துணைக்கண்டமும் CAA எதிராக நிற்கிறது. பல மாநிலங்கள் எதிர்க்கின்றன. ஆனால் அதிமுக அரசு இந்தச் சட்டம் நிறைவேற முழு ஆதரவு தந்து, தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மாறாக நடப்பது மட்டுமல்லாமல், மத, மொழிச் சிறுபான்மை, தேசிய உரிமைகளை நசுக்கும் பாஜக வுக்கு அடிமைச் சேவகம் செய்கிறது.
தொப்புள்கொடி உறவுகளான ஈழ ஏதிலிகளுக்கு வரலாற்றுத் துரோகம் இழைத்திருக்கிறது இந்த எடப்பாடி அரசு.
அதிமுக அரசின் துரோக, நயவஞ்சக, சுயநல அரசியல் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் எழுதப்படும்.
அடிமை அரசே…
  • தோழர் செந்திலை உடனடியாக விடுவி!
  • மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்காதே!
  • ஈழ ஏதிலிகளுக்குத் துரோகத்தைத் தொடராதே!
மத்திய பாஜக அரசே….
  • CAA, NPR, NRC’ வைத் திரும்பப் பெறு!
  • மாணவர்கள் மீதான ஒடுக்குமுறையை நிறுத்து!
  • தேசிய அரசியலை நசுக்காதே!
  • மத ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தாதே!
  • நாட்டின் பொருளாதாரச் சிக்கலை, மதவாதத்தால் மூடி மறைக்க நினைக்காதே!

இளந்தமிழகம்  இயக்கம்

ஜார்ஜ் – 9500186661

ரபீக் ராஜா – 8122184841

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW