குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தில் இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் கைது, சிறையில் அடைப்பு – தமிழ்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!
சட்டத்திருத்த மசோதாவிற்கு மாநிலங்களவையில் வாக்களித்து நிறைவேறுவதற்கு ஏவல் புரிந்த எடுபிடி எடப்பாடி பழனிச்சாமி அரசு, மத்திய இந்து பயங்கரவாத தேசிய அரசாங்கத்திற்கு குண்டர் படையாக செயல்பட்டு குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது.
நேற்றைய தினம் சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தை நூற்றுக்கணக்கான காவல்துறையை குவித்து அச்சுறுத்தி இரண்டு மாணவர்களை கடத்திச் சென்று பின்னர் மாணவர் போராட்டத்தின் நிர்பந்தம் காரணமாக நள்ளிரவில் விடுவித்தது. அதேபோல இன்று சென்னை தரமணி அருகில் இருக்கின்ற சென்ட்ரல் பாலிடெக்னிக் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு கல்வி வளாகங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது, அதில் மூன்று மாணவர்கள் உள்பட இளந்தமிழகம் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தி.செந்தில் அவர்களையும் கைது செய்து இரவு வரை கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் வைத்திருந்து, நள்ளிரவில் மூன்று மாணவர்களை மட்டும் விடுவித்துவிட்டு, செந்தில் அவர்களை பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்துள்ளது.
ஜனநாயக பூர்வமான எதிர்ப்புப் போராட்டங்களை சட்ட வழியில் எதிர்கொள்ளாமல் கைது, பொய் வழக்கு என அச்சுறுத்த முயல்கிறது. தமிழகம் முழுவதும் மாணவர் போராட்டங்கள் தொடங்கியிருக்கின்ற நிலையில் ,சென்னை பல்கலைக்கழகத்திற்கு நீண்ட விடுமுறை அளித்து மாணவர் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வழக்கமான தந்திரத்தையும் கையாள முயற்சிக்கிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா செல்வாக்கில் ஆட்சியை பிடித்த எடுபுடி அமைச்சரவை தனது பிழைப்பை நடத்திக் கொள்வதற்காக காவி கும்பலுக்கு கொத்தடிமை ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொடுத்து ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்து வருவதோடு மட்டுமல்லாமல் சிறுபான்மையர் இடம் வாக்கை பெற்றுக்கொண்டு இன்று அவர்களுக்கு பச்சைத் துரோகம் செய்து வருகிறது. தமிழகத்திலே ஆட்சி நடத்திக் கொண்டு சட்டத்திருத்த மசோதாவுக்கு வாக்களித்ததன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு மீண்டுமொருமுறை துரோகம் இழைத்துள்ளது.
இந்த எடுபுடி முதலமைச்சர், அமைச்சரவை, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் துரோகத்தை வன்மையாக கண்டிப்பதோடு எடுபுடி படையின் ஒடுக்குமுறையை தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் இந்த துரோக கும்பலின் ஒடுக்குமுறையை முறியடித்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப மக்கள் பெருந்திரள் போராட்டங்களில் களம் இறங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
- குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் !
- இந்து தேசிய பயங்கரவாத மோடி – அமித் ஷா கும்பல் அரசாங்கத்தின் பிளவுவாத வன்முறை அரசியலை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!
- தமிழகத்தின் பெயரால் காவி கும்பலுக்கு எடுபிடி வேலை செய்யும் அடிமை எடப்பாடி அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்!
பாலன்
பொதுச்செயலாளர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி 7010084440