பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு சமூக அநீதியே ! 

25 Jul 2019
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கிளார்க் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. சமூகப்பிரிவு வாரியாக கட்ஆஃப் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
General பொது பிரிவு – 61.25,
OBC – இதர பிற்படுத்தப்ட்ட பிரிவினர் – 61. 25,
SC – பட்டியலின சாதிகள் 61.25,
ST – பட்டியலின மலைவாழ் பிரிவு 53.75,
EWS – பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மட்டும் 28.5 என்னடா இது அநியாயம்?
ஏற்கெனவே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இந்திய அரசின் வங்கி, அஞ்சல், இரயில்வே, விமானம், தொலைத் தொடர்புத் துறை, உள்ளிட்ட பொதுத்துறை  நிறுவனங்களை ஆக்கிரமித்திருக்கும் பார்ப்பன, மேல்சாதியினருக்கு மீண்டும் கதவைத் திறந்து வைக்கிறது பொருளாதார அடிப்படையிலான 10% இட ஒதுக்கீடு.
கல்வி, அரசு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்களுக்கு வாய்ப்பளிக்க உருவாக்கப்பட்டதே இடஒதுக்கீட்டு ஏற்பாடு. கல்வி ரீதியாக, சமூக ரீதியாக பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உருவாக்கப்பட்ட இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அடிப்படையைத் தகர்க்கும் வகையில், அவ்வப்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு எனக் குறுக்குசால் ஒட்டப்படுவதுண்டு. இச்செயல் இதுவரை முறியடிக்கப்பட்டு வந்தது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு வங்கிக்காக பா.ச.க. மோடி அரசு அவசர அவசரமாகக் கொண்டு வந்ததே முன்னேறிய சாதிகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீடு.
தேர்தலுக்குப் பிறகு தனது சேட்டையைத் தொடங்கியுள்ளது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா.
பரம்பரையாகப் படித்து, அரசு, வங்கி அதிகாரிகளாக வளர்ந்துள்ள சாதிப்பிரிவுகளுக்கு 28.5 அதுவும் படிப்பறிவை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ள பட்டியலின மலைவாழ் மக்களு 53.75 என கட் ஆஃப் எப்படித் தீர்மானித்தீர்கள் எனக் கேட்டால் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் குறைத்தோம் என்கின்றனர்.
கடந்த காலங்களில் போதுமான, தகுதியான ஆட்கள் இல்லையென தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இடங்களை பொதுப் போட்டியில் நிரப்பிய அதிகார வர்க்கம் முன்னேறிய சாதிப் பிரிவினருக்கு 28 .5 எனச் சலுகை காட்டுகிறது.
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிர்வாகம் நடைபெற்ற தேர்வை இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் பெரும்பான்மை 95% மக்களுக்குக் கேடு விளைவிக்கும் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது என தமிழ்த்தேச மக்கள் முன்னணி எச்சரிக்கிறது. தனியார் நிறுவனங்களில் 30 + 20 + 18 + 1 ஆக 69% இட ஒதுக்கீடு அமலாக்கப்பட வேண்டும். பெரும்பான்மை உழைக்கும் மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமை காக்க ஓரணியில் அணிதிரள அறைகூவல் விடுக்கிறேம்.
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச : 94431 84051
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW