ராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA’வில் கைது செய்ததை வன்மையாக கண்டிப்போம் !
ராமலிங்கம் படுகொலையில் இந்து மத வெறியர்களை திருப்தி படுத்துவதற்காக அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை UAPA வில் (சட்டவிரோத தடுப்பு நடவடிக்கை சட்டம்) கைது செய்ததை கண்டித்து. ஜனநாயக இயக்கங்கள் இஸ்லாமிய இயக்கங்கள். தமிழ்தேச மக்கள் முன்னணி இணைந்து தஞ்சை நகரத்தில் ஏப்பாடு் செய்து இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததோடு ஆர்ப்பாட்ட இடத்திற்கு கூட விடாமல் தமிழ்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி நகர செயலாளர் ஆலம்கான் தமிழ்நாடு இளைஞர் இயக்க மாவட்ட பொறுப்பாளர் தோழர் ஜான் உள்ளிட்ட 100 ற்றுக் கணக்கான தோழர்களை ஆத்துப்பாலம் மசூதி அருகில் தடுத்து காவலில் வைத்துள்ளதை வன்மையாக கண்டிக்கின்றோம்
ஜனநாயக வழியிலான போராட்டங்களுக்கு கூட அனுமதி மறுத்து காவி பயங்கரவாதத்திற்கு துணைப்போகும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம். நாளை 12/02/2019 அன்று மயிலாடுதுறை இல் கடையடைப்பு நடத்த வேண்டும் என வணிகர்களை எச்சரித்து இருக்கும் காவி பயங்கரவாதிகளின் செயலுக்கு துணைப்போகும் தமிழக அரசையும் காவல் துறையையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழக அரசே !
1)அப்பாவிகள் மீதான UAPA சட்டத்தினை ரத்துசெய்.
2)உண்மை குற்றவாளிகளை கண்டுபிடி.
3)அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்
4)மத துவேசம் செய்து நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் இந்து மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடு
பாலன்
பொது செயலாளர்
#தமிழ்தேச_மக்கள்_முன்னணி