தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் மீது காவல்துறை தாக்குதல்!

23 Jan 2019

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் இன்று நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர் மறியலில் தனது துணைவியாருடன் கலந்து கொண்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தமிழ்மாந்தன் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் ஆசிரியர்களுடன் இருந்தார்.

அங்கு வந்த விளாத்திகுளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சங்கர் தமிழ்மாந்தனைப் பிடித்து இழுக்க ஆசிரியர்கள் தடுத்துள்ளனர். அங்கு வந்த ஆய்வாளர் விலக்கி தமிழ்மாந்தனைக் காவல்நிலையத்தில் விட்டுச் சென்றுள்ளார். காவல்நிலையம் வந்த சார்பு ஆய்வாளர் சங்கர் தமிழ்மாந்தனை நோக்கி
” வீதியிலே நின்னு ஸ்டெர்லைட்டுக்கு எதிரா கோசம் போடுவியாலே ” எனக் கூறிச் சரமாரியாகத் தாக்கியுள்ளார். பின்னர் காவ.நிலையம் வந்த ஆய்வாளர் தோழர் தமிழ்மாந்தனிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

ஆசிரியர் பணியிலிருக்கும் தனது துணைவியாருடன் துணையாகப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தோழர் தமிழ்மாந்தனைத் தாக்கிய விளாத்திகுளம் காவல்துறை சார்பு ஆய்வாளர் சங்கரின் அத்துமீறிய ரௌடித்தனத்தை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.

#தூத்துக்குடி_மாவட்டக்_காவல்துறையே!ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத் தலைவர் தோழர் தமிழ்மாந்தனைத் தாக்கிய விளாத்திகுளம் சார்பு ஆய்வாளர் சங்கர் மீது நடவடிக்கை எடு!

மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW