ஸ்டெர்லைட்; என்னடா இது நியாயம் ? – பாடல் கானா பாலா

24 Dec 2018

என்னடா இது நியாயம்
உங்கள சும்மா விடாது எங்களோட சாபம்
அட என்னடா இது நியாயம்
உங்கள சும்மாவிடாது எங்களோட சாபம்

 

தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய
மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம்
100 நாள் அமைதியாய் நடந்தது அந்த ஆர்ப்பாட்டம்
அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்திமுடிச்சிட்டான்
அப்பாவி மக்களத்தான் சிட்டுக்குருவிப்போல் சுட்டுக்கொன்னுட்டான்

அட என்னடா இது நியாயம்
உங்கள சும்மா விடாது நியாயம் எங்களோட சாபம்
அட என்னடா இது நியாயம்
உங்கள சும்மா விடாது எங்களோட சாபம்

காடு வயல் கழனியெல்லாம் பட்டுப்போச்சிங்க
காத்துநீரும் மாசுப்பட்டு கெட்டுப்போச்சுங்க
பலமுறை மனுகொடுத்தும் யாரும் மதிக்கல
இதுவர யாரும் வந்து எட்டிப்பாக்கல
பேச்சுவார்த்தை நடத்துறேன்னு ஆச காட்டினான்..
இங்கு ஆட்சி நடத்தும் எல்லாருக்கும் காச வீசுனான்..
கோர்ட் கொடுத்த தீர்ப்புத்தான தூக்கிவீசினான்..
காவல்துறைய ஏவிவிட்டு எங்கள விரட்டுனான்…
தனி மனுச ஒருத்தனுக்கு அடிபணியிது அரசு
நம்ம தமிழ்நாட்ட பலிகொடுக்கிற ஸ்டெர்லைட்டு எதுக்கு

என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம்
அட என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம்

ஊருக்கு ஆபத்துன்னு ஒன்னு சேர்ந்திங்க
உரிமைய மீட்கத்தான உயிர விட்டிங்க
நியாயத்த தான நீங்க தட்டிக்கேட்டிங்க
அநியாயமாக உங்களத்தான் கொன்னுட்டானுங்க
வாழும் வயதில் மறைஞ்சிட்டிங்க இந்த மண்ணில
உண்மையில வீரர்களோ நீங்கதான தமிழ்நாட்டில
மறைந்தபின்னும் வாழுறிங்க எங்க மனசுல
நாங்க சாகும்வரைக்கும் மறக்க மாட்டோம் உங்க தியாகத்த
இந்த ஊரும் உலகம் இருக்கும்வரைக்கும் உங்க பேரு நிலைக்கும்
உயிர் தியாகம் செஞ்ச எங்கள் வீரவணக்கம்
இந்த ஊரும் உலகம் இருக்கும் வரைக்கும் உங்க பேரு நிலைக்கும்
உயிர் தியாகம் செஞ்ச உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்

“போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள்”

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW