கஜா பேரிடர் – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’- ஒன்றுகூடல் – செய்தி அறிக்கை

16 Dec 2018

டிசம்பர் 16 – திருத்துறைப்பூண்டி

கஜா புயல் நவம்பர் 16 ஆம் தேதி கரை கடந்ததை தொடர்ந்து 15 நாட்கள் துருத்துறைப்பூண்டியில் முகாம் இட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள் துயர்மீட்பு பணியில் ஈடுபட்டுவந்தோம். அதிகம்  குடுசை வீடுகள் கொண்ட திருத்துறைப்பூண்டி தாலுகாவில் கடந்த 10 நாட்களுக்கு முன்னரே அணைத்து முகாம்களையும் மூடிவிட்டது அரசாங்கம், வீடு இழந்தவர்கள் மேலும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அணைத்து கிராமங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது. தார்பாய் உள்ளிட்ட 27 நிவாரண பொருட்கள் அரசு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது, ஆனால் இதுவரை திருத்துறைப்பூண்டியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு எந்த பொருட்களும் வந்து சேரவில்லை.

கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படாதநிலையில்  தற்போது சில குடும்பங்களுக்கு 4000 ரூபாய் வங்கி கணக்கில் அரசு நிவாரண நிதி செலுத்தியுள்ளது. குடுசை வீடு இழந்தவர்களுக்கும், ஒட்டு வீடு சேதமடைந்தவர்களுக்கும் ஒரே தொகையை கொடுத்துள்ளார்கள். இத்தொகை கொடுக்கும் அதே வேலையில் டாஸ்மாக் (TASMAC) கடைகளை திறந்துவிட்டு  கொடுத்த காசை திருப்ப வசூல் செய்கிறது தமிழக அரசு. இன்னொரு முக்கிய பிரச்சனை ; சுய-உதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள் (Micro -finance Company) தற்போது வட்டிவசூலில் தீவிரம் காட்டுகின்றது. பொதுவாகவே வட்டிவிகிதம் அதிகம் உள்ள சூழலில் தற்போது கந்துவட்டி நிறுவனங்களாகவே செயல்படுகின்றது.
——————————————
பேரிடர் நடந்து 30 நாள் ஆகிய சூழலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் டிசம்பர் 16 திருத்துறைப்பூண்டியில் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்து பாதிக்கப்பட்ட கிராமமக்கள் பங்கேற்புடன் கண்டன கூட்டமாகவே நடத்தினோம். கஜாப் புயல் பாதிப்புகளை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும், மாநில அரசு கேட்ட 14,910 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு கொடுக்க வேண்டும், டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும், வீடு இழந்தவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடுசெய்யவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றுகூடல் நடைபெற்றது.

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் அருண்சோரி  தலைமையில் நடந்த ஒன்றுகூடலில் தலைவர் மீ.த.பாண்டியன்,  தலைமை குழு உறுப்பினர்  சதீஷ் , நாகை மாவட்ட செயலாளர் இரணியன், ‘பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா’ திருவாரூர் மாவட்ட தலைவர் ராஜா முஹம்மத், தமிழ்நாடு மாணவர் இயக்கம் தலைவர் பிரபாகரன், வழக்கறிஞர் கென்னடி, வழக்கறிஞர் ராஜராஜன், இளந்தமிழகம் ஒருங்கிணைப்பாளர் செந்தில் மற்றும் பல்வேறு ஜனநாயக ஆற்றல்கள் பங்கெடுத்து கண்டன உரையாற்றினார்.

     

தலைமை உரை :  தோழர் சதீஷ், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் உரை

‘மக்களுக்காக பாடுறோம், மக்களுக்காக ஆடுறோம்’ பாடல் –  தோழர் பிரபாகரன், தமிழ்நாடு மாணவர் இயக்கம்

உரிமை முழக்கம்..


‘கஜா புயல் வந்ததால, ஊரெல்லாம் அழிஞ்சுச்சு, மரமெல்லாம் விழுந்துச்சு….’ – பாடல் – பள்ளி மாணவரி வனிதா எழுதி பாடியது

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW