7 தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே!

07 Dec 2018

பொதுக்கூட்டம், 9/12/18, மாலை 5  மணி, தஞ்சை

சட்டமன்றம், அமைச்சரவை, நீதிமன்றம் என அனைத்தும் விடுதலை செய்யலாம் என்று சொன்ன பிறகும்,7 தமிழர் விடுதலைக்கு குறுக்கே அமர்ந்து கொண்டிருக்கிறார் ஆளுநர்!

ஆட்டுக்கு தாடி எதற்கு என்று கேட்ட நாட்டில் அதிகார மமதையோடு வானரம் போல் வலம் வந்து கொண்டிருக்கிறது ஆபாச கிழம், இது ஆளுநரின் உலா அல்ல, தமிழ்நாட்டின் சுயமரியாதையை சீண்டி பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்’சின் உலா, இந்திய தேசியத்தோடு கரைய மறுக்கும், காவி கும்பலின் நுழைவை மறுக்கும் தமிழ்நாட்டை அடிபணிய வைப்பதற்கான அதிகார ஆட்டம்.

ஆட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள அடிமைகளோ வாலை குழைத்து அண்டி பிழைக்க தமிழ்நாட்டின் சுயமரியாதையை குடைசாய்த்து கொண்டிருக்கிறார்கள். எனவேதான் நாம் சொல்கிறோம் “எங்கள் நாடு தமிழ்நாடு, இங்கு ஏதடா இந்து நாடு“ ஆர்.எஸ்.எஸ் கும்பலே வெளியேறு! காவி சர்வாதிகார கும்பலே வெளியேறு! என்கிறோம்.

காவி கும்பலின் வன்மம் தமிழனை இந்துவாக மாற்றுவதில் மட்டுமல்ல, அதானி – அம்பானி – வேதாந்தா பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து தமிழர்களின் நிலத்தை அழிப்பதிலும் முனைப்போடு நிற்கிறது,  மதம்கொண்ட யானை விளைந்த நிலத்தில் நுழைந்ததை போல பெயருக்கேற்ப கஜா (யானை) புயல் காவிரி படுகையை சீரழித்திருக்கிறது, மருதமும் நெய்தலும் முயங்கி திளைக்கும் மணம் கொண்ட, வளம் கொழிக்கும் நம் பொன்னியின் செல்வத்தை, பெருஞ்சேற்றுப்பானையை இயற்கை அழித்தது போதாது என கார்பரேட் கும்பலோடு சேர்ந்து காவி கும்பல் அழிக்க துடிக்கிறது.

தஞ்சை டெல்டா’ வை “பாதுகாக்கபட்ட வேளான் மண்டலமாக அறிவிக்க கோரி ஐந்து வருடமாக போராடினால் ‘எண்ணெய் எரிவாயு மண்டலமாக’ அறிவிக்கிறது காவி கும்பல்.  எண்ணெய் எரிவாயு எடுக்காதே ஒ.என்.ஜி.சி’யை வெளியேற கோரினால் தூத்துகுடியை பாழ்படுத்தி 14 பேரை சுட்டுக்கொன்ற, ‘ஸ்டெர்லைட் – வேதாந்தா’விற்கு எண்ணெய் எடுக்க காவிரி படுகையில் அனுமதி கொடுக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து, பின் நீதிமன்ற உத்தரவால் அமைத்த பிறகும், அதன் அதிகாரத்தை மீறி மேகேதாட்டு அனைகட்ட ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. கர்நாடகத்தவன் தடுத்ததையும் மீறி மேற்கு மலை தாயின் கருனையால் பொய்க்காத காவிரியை தமிழரின் வரலாற்றிலிருந்து அறுக்க துடிக்கிறது நெடும்பகை மோடிக்கூட்டம்.

காவிரி நிலத்தை காய போட வேண்டும், கார்பரேட்டுகள் அள்ளி சூரையாட வேண்டும், நீருக்கும் சோற்றுக்கும் அவன் போடும் பிச்சைக்கு கையேந்தி நிற்க வேண்டும், கஜா பேரிடரில் காவி கூட்டமும், ஸ்டெர்லைட்டும் ஒ.என்.ஜி.சி’யும் ஆட்டுக்கு ஒநாய் அழுத கதையாக களத்தில் இறங்கியிருக்கின்றன, நாம் கேட்பதோ பிச்சையும் கருனையுமல்ல,எம் நிலத்தை விட்டு காவி-கார்ப்ரேட் ஒநாய் கும்பல் வெளியேற வேண்டும் என்பதுதான்.

காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்!

7 தமிழர் விடுதலையையும், தமிழர் நிலததையும் மீட்டெடுப்போம்.

 

பாலன்

பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

Vasan08@rediffmail.com, 7010084440

 

 

      

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW