சாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் ? – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
– சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம் –
கடந்த 29.11.2018 அன்று தருமபுரி காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சிக்க திம்மனள்ளி கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்திருக்கிறான். வகுப்பு ஆசிரியர் சுகுணா, விஜயகுமார் ஆகியோர் தொடர்ந்து அடிப்பதும் துன்புறுத்துவதுமாக, சாதிய பாகுபாட்டோடும் அவமானப்படுத்தி வந்துள்ளனர். ‘பரபசங்களுக்கு எல்லாம் படிப்பு வராது’ என திட்டி இருக்கிறார். அடுத்த நாள் சான்றிதழை வாங்கி கிளம்ப சொல்லி திட்டிஇருக்கிறார். இதனால் மனமுடைந்த கார்த்திக் வீட்டில் அம்மாவிடம் சொல்லுகிறான். மன உளைச்சலில் இருந்த மாணவன் இரவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். அப்பள்ளியில் உண்மையை சொல்ல யாரும் தயார் இல்லை. ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய சொல்லி வலியுறுத்தினால் மறுக்கிறது காவல்துறை. வேடிக்கை பார்க்கிறது தமிழக அரசு. காரணம் சுகுணா என்பவர், ஆதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி முனுசாமி உடைய உறவினர்.
அமைச்சர் கே.பி அன்பழகன் சொந்த ஊர் என்பதால் அசிங்கமாகுமாம். உடனடியாக அந்த குடும்பத்தை அழைத்து பணம் கொடுத்து போராட்டத்தை நீர்த்து போகசெய்துவிட்டனர். ஆக சாதி அதிகாரம் உள்ளூர் ஆதிக்கம் இணைந்து கார்த்திக்கான நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டது அதிமுக அரசு. அண்மை காலமாக ஆசிரியர்கள் மாணவர்களை துன்புறுத்துவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் பாமகவின் சாதிவெறி அரசியலால் அனைத்து இடங்களும் சாதி தான் தீர்மானகரமானதாக மாற்றப்படுகிற போக்கு மனித உறவுகளுக்கே ஆபத்தாக இருக்கிறது. சாதி அரசியல் மேலோங்கி பள்ளி ஆசிரியர் மாணவர்களிடம் சாதி ஆகிக்க விஷம் பரப்பப்பட்டுள்ளதை தான் கார்த்திக் மரணம் உணர்த்துகிறது. அண்மையில் நெல்லையில் 5 மாணவர்கள் இசக்கி சங்கர் என்ற பட்டதாரியை ஆணவ கொலை செய்த கொடுமை அதனை நிரூபிக்கிறது. சாதி- தீண்டாமை குற்றம் என சமத்துவத்தை வலுயுறுத்த வேண்டிய அரசு பள்ளிகளில் உயர்கல்வி நிறுவனங்களில் தான் சாதி பாகுபாடுகள் வேறுபாடுகள் தீவிரப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருக்கிறது. சகோதரத்துவத்தை போதிக்கவேண்டிய இடத்தில் சாவினை பரிசாக்கும் கொடுமையை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை- கல்வி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.
தமிழக அரசே!
- குற்றவாளிகள் சுகுணா மற்றும் விஜயகுமார் இருவரையும் பணிஇடைநீக்கம் செய் !
- வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய் !
அணைத்து ஆசிரியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் இதனை கண்டித்து தமிழக அரசும், கல்வி துறையையும் நடவடிக்கை எடுப்பதற்கு துணைநிற்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ரமணி,
பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு.
8508726919
veadika pakuraa aharasu naigalaa parungadaa ilayargal onnu searnthaa ipaa irukaa yeavanum aharsiyal panna mudiyathuu oru padathodaa poii prachanaa panna theariyuthulaaa ipaa enna pudikingittu irukingalaa ahantha chinna payyanuoda amma peasa mudiyamaa pathivu kodukurangaa ottu kkpingalaa searupalea ahadichuu thorathuron day parungaaa picha karaa naingalaa