பூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் !

28 Nov 2018

ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்போம் என்று சொல்லி ஆரம்பிக்க பட்டது தான் இந்த குடிசை மாற்று வாரியம் அனா குடிசை பகுதி மக்கள் ரத்த கண்ணிர் வடித்தாலும் அதை ஆனந்த கண்ணிர் வடிகுறாங்கன்னு பச்சையா புழுவுது அரசாங்கம். இன்று 28/11/2018 காலை சிந்தாதிரி பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் காலனி நகரில் கூவம் கரை ஒரம் தலைமுறை-தலைமுறையாக வசித்து வரும் சுமார் 800 குடிசை வாழ் குடும்பங்களை பெரும்பாக்கம் கொண்டு செல்வதற்க்காக குடிசை மாற்று வாரியம் அதிகாரிகள், 200க்கும் மேற்ப்பட்ட காவல்துறை படைசுழ புல்டோசருடன் வீடுகளை இடித்தது கஜா புயலில் சிக்குண்டது போல் என்ன செய்வது என்று தெரியாமல் கையறு நிலையில் மக்கள். வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை அச்சுறுத்தி பனியவைத்தது காவல் துறை. கிடைக்கிறதும் கிடைக்காம போயிடும்னு எழூந்த ஒரு சில குரல்களூம் அடங்கியது. இப்பத்தான் எப்பாடு பட்டாலும் பசங்களை படிக்கவெச்சு ஒரு ஆளாக்கி பாக்கணும்னு நினைச்ச மக்களுக்கு கல்வி ஒரு கேடானு துரத்துது இந்த பாழாபோன அரசு. அறை அடி எருனா ஒரு முழம் சருக்குதுனு சொல்லுவாங்க ஆனா எழை மக்கள் எறும் போதே 10 முழம் சருக்குது.

காலம் காலமா வசித்த இடத்தை விட்டு நகரத்துக்கு வெளியே அதுவும் எற்கனவே குடியேறிய மக்களுக்கே எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கல இதுல நமக்கும் எதும் செய்யாது இந்த அரசுனு மக்களுக்கு தெரியும் இருந்தும் மக்களுக்கு வேற வழி இல்லை அதனால் தங்கள் ரத்தம் சிந்தி சிறிது சிறிதாக சேமித்து வைத்த பொருக்களுடன் கிளம்பாறாங்க மக்கள். புதிய தாராளவாத கொள்கை மக்களை நிம்மதியா சாககூட விடாது போல. ஒடாத மாணும் போராடாத மனிதனும் வாழ்ந்ததாக வரலாறு இல்லை. நம் உரிமைகளை மிட்டு எடுக்க போராடுவோம்.

ராஜா & காயத்ரி
தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW