கஜா புயல் – பேரிடரில் காவரி டெல்டா ! இடர் மீட்பு பணியில் ஈடுபடுவோம் வாரீர்!

16 Nov 2018

 16/11/2018 இன்று அதிகாலை கீழைத்தஞ்சை நாகபட்டினத்திற்க்கும் வேதாரணியத்திற்க்கும் இடையில் கரையை கடந்த கஜா புயல், காவிரி டெல்டா மாவட்டங்களை பேரிடர்க்கு தள்ளி இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக காவிரி நீரின்றி வறட்சியால் பாதிக்கபட்ட இம் மாவட்டங்கள், இந்தாண்டு காவிரி நீர் வரத்தால் பெரும்பாலான நிலங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ளன. மகிழ்ச்சியாக விவசாயத்தை தொடங்கிய மக்களுக்கு கஜா புயல் பேரிடியாக அமைந்துள்ளது.

  • ஏறக்குறைய 12 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
  • 12,000 மின்கம்பங்கள் விழுந்து முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளன.
  • தஞ்சை, திருவாரூர், நாகை மூன்று மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்கள் விழுந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளன.
  • சுற்றியுள்ள பிற மாவட்ட பகுதிகளான புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, அறந்தாங்கி, திருச்சி சாலை வரை பாதிப்புகள் நீண்டிருக்கின்றன.
  • நாகப்பட்டினம் தொடங்கி அதிராமபட்டினம், மல்லிப்பட்டினம் வரை  கடற்கரையோர கிராமங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளகியுள்ளன, புயல் கரையை கடந்த வேதாரணியம் முற்றிலும் துண்டிக்கபட்ட நிலையில் உள்ளது,

நகரங்களை கடந்த உள் கிராமங்களில் விவாசய பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, தென்னை மரங்கள் பல ஆயிரக்கணக்கில் வீழ்ந்துள்ளன, வாழை தோட்டங்கள் ஆயிரக்கணக்கில் அழிந்துள்ளன, ஓட்டு வீடுகள், குடிசை வீடுகள் நூற்றுக்கணக்கில் சேதமடைந்துள்ளன, சேதுபாவா சத்திரம் மல்லிப்பட்டினம் இன்னும் பிற பகுதிகளில் நிறுத்தபட்டிருந்த சிறு மீன்பிடி படகுகள் மீட்கமுடியாத அளவிற்கு கடுமையான சேதாரங்களை அடைந்துள்ளன.

இவைகள் முதல் கட்டமாக கிடைத்துள்ள சேத நிலவரங்கள், முழுமையான சேத நிலவரங்கள் படிப்படியாக தான் தெரிய வரும், அரசின் மீட்புபணியை பொருத்தவரை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முகாம்கள் அமைக்கபட்டிருந்தன, சுனாமி, தானே புயல், என பல்வேறு அனுபங்கள் இருப்பதால் மீட்பு நடவடிக்கை ஒருங்கினைந்ததாக மாறியிருக்கின்றன ஆனால் மதியம் வரை புயலின் மையப்பகுதியான வேதாரண்யம் தொடர்பற்ற நிலையிலும், பல்வேறு கிராமங்கள் மீட்பு நடவடிக்கைகள் சென்றடையாத நிலையில் தான் உள்ளன.

இன்று அதிகாலை முதல்  தஞ்சையின் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் அருண்சோரி தலைமையில் மீட்பு பணிகளில்  ஈடுபட தொடங்கியுள்ளனர். பின்னர் இன்று மாலையில் இருந்து கடுமையாக பாதிக்கபட்ட பகுதிகளான வேதாரண்யம், அதிராமபட்டினம், பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் பணியாற்ற செல்லவிருக்கின்றனர், வாய்ப்பு உள்ளோர் பணியாற்றவும், தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

அருண்சோரி – 7299999168, 7010084440

மாவட்ட செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW