ஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு!- மீ.த.பாண்டியன்

12 Nov 2018

ராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், இவிச்சந்திரன்,  நளினி, சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தொடர் இயக்கங்கள் நடந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி காஞ்சி மக்கள் மன்றத் தோழர் செங்கொடி தீயிட்டுத் தற்கொடை செய்த ஈக வரலாறும் இங்குண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எழுவர் விடுதலைக்காகத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியதும் நாமறிந்ததே!

எழுவரின் விடுதலை குறித்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு 2016ஆம் ஆண்டு கடிதம் எழுதியிருந்தது. கடந்த சனவரி யில் உச்சநீதிமன்றம் மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் பதிலளிக்க உத்திரவிட்டது. குடியரசுத்தலைவர் ஏழுதமிழர் விடுதலைக் கோரிக்கையை கடந்த ஏப்ரல் 18 அன்று நிராகரித்துவிட்டதாக இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. இதற்கெதிராகவும் தமிழ்நாடு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது.

குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு சிறையிலிருக்கும் பேரறிவாளன் தரப்பிலிருந்து தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நிராகரிப்புக்கான காரணம் கேட்கப்பட்டது.அரசிடமிருந்து தங்களுக்கு பரிந்துரைக் கடிதம் வரவில்லை என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதே கேள்விக்கு உள்துறை அமைச்சகம் தனது பதிலில் ” கடந்த 02-03-2016 தமிழக அரசின் கடிதம் குடியரசுத் தலைவர் பார்வைக்கு அனுப்பப்படவில்லை, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 435இன் படி உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமே முடிவெடுத்து நிராகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 பேர் மரண தண்டனை 4 பேர் மரணதண்டனையாகக் குறைந்து, 3 பேர் மரண தண்டனையும் மாண்டொழிந்து செங்கொடி உயிர் தந்து எழுவர் விடுதலைக்கு சட்டமன்ற, அமைச்சர்களின் தீர்மானமாக எல்லையைத் தொட்டிருக்கிறது. இந்திய அரசின் அதிகாரத்தில் நேற்றைய காங்கிரஸ், இன்றைய பா.ச.க என சிறை மதில்களுக்குள்ளேயே இருத்தி வைக்கச் சதி செய்கின்றனர். சகல அதிகாரத்தையும் கடந்து நிற்கும் மோடி அரசு சனாதிபதியின் அதிகாரத்தையும் களவாடும் கயவாளித்தனம் அரங்கேறியுள்ளது. சனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டிய பிரச்சனைகளைத் தாங்களே கையாளும் சதி அரசியல் அம்பலப்பட்டுள்ளது. இறுதியாக தமிழக அரசின் தீர்மானமாக விடுதலைக்கோரிக்கை தமிழக ஆளுனர் கையெழுத்துக்காகக் காத்து நிற்கிறது.

இந்திய அரசின் கையாளான ஆளுனர் இதனை பரிசீலிக்க அல்லது தவிர்க்க அதிகாரமில்லை. ஆளுனர் கையெழுத்திட வைக்க வேண்டிய சவால் தமிழ்நாட்டு அரசியல் சக்திகளின் கையில் உள்ளது.

டெல்லி அதிகாரச் சதிகளை முறியடிப்போம்! எழுவர் விடுதலையை வென்றெடுப்போம்!

 

தோழமையுடன்,

மீ.த.பாண்டியன்,

தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பேச: 9443184051

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW