சேலம் தளவாய்பட்டி ராஜலட்சுமி படுகொலை நேரடி விசாரணை

29 Oct 2018

கொலையாளி தினேஷ், மனைவி குடும்பத்தின் கூட்டு முயற்சியில் ராஜலட்சுமி திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளார். குற்றவாளி தினேஷ் சைக்கோ அல்ல, திசை திருப்பல்.
மனைவி சாரதாவை கைது செய்ய வேண்டும்!
……………………………………………..
28.10.18 காலை,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி,
சாதி ஒழிப்பு முன்னணி
தமிழ்நாடு பெண்கள் இயக்கம்
தமிழ்நாடு இளைஞர் இயக்கம்
சேலம் மாவட்ட அமைப்புகளின் தோழர்கள் தளவாய்ப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்த போது,……….

தளவாய்ப்பட்டியில் ராஜலட்சுமி குடும்பம் பெரிய குடும்பம் தலித் மக்கள் 200 குடும்பம் மட்டுமே இருந்தாலும் வலுவாக உள்ள பகுதி என்பதால் மற்ற சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஆதிக்கத்தை காட்டுவதில்லை. தலித் மக்கள் திருப்பி அடிக்கும் தன்மையோடு இருக்கிறார்கள்.தலித் மக்களோடு பகைத்துக்கொள்ள விரும்புவதில்லை என்கிற சூழல். பெரும்பான்மையாக, படையாச்சி, வெள்ளாள கவுண்டர், பிள்ளைமார், முதலியார், படையாச்சி உள்ளிட்ட சமூகம் அங்கு அருகருகே வசிக்கிறார்கள். ”
…………

அடுத்து, ராஜலட்சுமி குடும்பத்துடன் கொலைகாரக் குடும்பம் நெருக்கமாக இருந்துள்ளனர். ராஜலட்சுமி தினமும் சென்று சாரதாவின் பிள்ளைக்கு சோறூட்டி வந்துள்ளாள். தன் பிள்ளையோடு விளையாடுவதற்காக சாரதாவே அழைத்து குழந்தையை விட்டுவிட்டு செல்வாராம்.

“என் பிள்ளை பள்ளிக்கு போகும்போது பூ அறுக்க தினேஷ் வீட்டிற்கு போவது வழக்கம். பொருள் கொடுக்கல், வாங்கல் இருந்திருக்கிறது சுமூகமாக இருந்தோம். சண்டை வந்ததில்லை. தினேஷ் பெரியப்பா குடும்பம் எங்களோடு இப்பவும் சுமுகமாக இருக்கிறார்கள். ” எனக் கூறினார் ராஜலஷ்மி அப்பா.
…………….

தினேஷ் காலை நேரம் பாலியல் சில்மிஷத்தை செய்திருக்கிறான். சிறுமி அழுது வீட்டுக்குள்ளே இருந்திருக்கிறாள். சேதி வெளியே தெரியவே, இரவு 7மணி அளவில் வீட்டுக்குள் நுழைந்து சாதி ரீதியாக திட்டி வெட்டிய கொடூரம் நடந்திருக்கிறது.

#சந்தேகம்

அடுத்த நாள் சிறுமியை வரச் சொல்லி சாரதா அழைத்திருக்கிறார் என்பதிலும் சந்தேகம் எழுகிறது.
ராஜலட்சுமி வீட்டை நோக்கி கத்தியோடு வெட்ட வரும் போது அவர் மனைவி, தம்பி இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். தலையை வெட்டி வீட்டிற்கு எடுத்து வந்தவனை நோக்கி,
5 நிமிடத்தில் வண்டி வந்து bike நிற்கிறது. மனைவி “தலையை அங்கேயே போட்டுவிட்டு வரவேண்டியது தான” எனச் சொல்ல, மீண்டும் தலையை ரோட்டில் போட்டுள்ளான். உடனே வண்டியில் ஏறு ” என எந்தப் பதற்றமும், ஆதங்கமும் இல்லாமல் கூட்டம் கூடுவதற்குள் உடனடியாக அழைத்துச் சென்றுள்ளார். தினேஷ் அம்மா “வெட்டிட்டோம் இனி என்ன செய்வீங்க” ஏதும் உங்களால் பண்ண முடியாது, நாங்க ஸ்டேஷன்ல பேசிட்டோம்” எனக் கர்வமாகச் சொல்லிருக்கிறார்.

காவல் நிலையத்திற்குச் சென்றவுடன்
“கணவர் சைக்கோ, மனநிலை பாதிக்கப்பட்டவர்” என சாரதா புகார் கொடுத்துள்ளார். காவல்துறை இன்ஸ்பெக்டர் கேசவன் அதற்கு உடந்தையாக, ” ஆமாம் அவன் சைக்கோதான்” எனக்கூறி மனைவி, தம்பியை கைது செய்யாமல் விட்டுவிட்டார். நேற்று இரவு சாரதா, வீட்டைக் காலி செய்திட பொருட்களை காவல்துறையினர் பாதுகாப்போடு வண்டியில் ஏற்றியுள்ளார். அப்பொழுது பாதிக்கப்பட்ட குடும்பம் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். “என் கணவன் சைக்கோ, மருந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார் ” என நேற்று வரை பிரச்சாரம் செய்து வருகிறார் சாரதா.

ஆனால், தினேஷ், சாரதா மற்றும் அவரின் தம்பி சேர்ந்து திட்டமிட்டு ஏன் 13 வயது சிறுமியை கொடூரமாகக் கொலை செய்ய வேண்டும் என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது. இன்னொன்று சாரதா தினேஷை கொலை செய்ய ஏவிவிட்டதற்கு உறவு ரீதியான வேறு காரணம் இருப்பதாக சொல்கிறார்கள்.
………………..

கொலைகாரன் தினேஷ் பெரியம்மாவை சந்தித்தோம்,

 

எனக்கு தெரியாதுமா என ஒதுங்காம, கடகடனு பேச ஆரம்பிச்சாங்க.
” நல்லா பழகிவந்தோம். அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு எங்க வீட்டுக்கு தினம் வருவா, டீ தூள் சர்க்கரை குடுங்கனு கேட்டுவாங்கிட்டு போவா அவளால எந்த தப்பும் இல்ல. அவங்க குடும்பத்துல இருக்கிற தம்பிங்க சாரதா வீட்டுக்கு போய் பேசுவாங்க, வருவாங்க. தப்பா பழகிக்கமாட்டாங்க, நல்ல குடும்பம் என்ன சிக்கல்னு தெரியல. ”

கொலைகாரன் மென்டல், சைக்கோனு சொல்றாங்களே ?

“அந்த பாவி செஞ்சத யாரு ஏத்துக்குவாங்க, நாங்க பார்த்த வரை நல்லா பேசிக்கிட்டு வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தான். எனக்கு தெரியல, அவங்க குடும்பத்தோட நாங்க அதிகம் வச்சுக்குறதில்லை.” என்றார்.

பொண்டாட்டியே சரண்டர் பண்ணி வாக்குமூலம் குடுத்திருக்கே?

“எந்த பொண்டாட்டியும் புருஷனை காட்டி கொடுக்க மாட்டாங்க மா” னு சொல்லினார். முதலியார் பாட்டியிடம் விடை பெற்றோம்.

சாதி ஆதிக்கம், பாலியல் வக்கிரம், அதிகாரம் ராஜலட்சுமியை கொன்றிருக்கிறது. கொலையாளி ஒத்த வீட்ட கூட அடிச்சு நொறுக்காம ” வேண்டாம் என அமைதியாக இருந்துவிட்டோம் என்று சொன்னதை கேட்டு ஆதங்கம்தான் வந்தது. எங்கு போர்க்குணம் வேண்டுமோ அங்கு அது இல்லாமல் போவது நம்மை சிந்திக்க வைக்கிறது.

நமது கோரிக்கையை வலுவாக்குவோம். இறுதிவரை அக்குடும்பத்தோடு நிற்போம்.

>தாழ்த்தப்பட்டோர் ஆணையம், மனித உரிமை ஆணையம், பெண்கள் ஆணையம் உடனடியாக தலையிட வலியுறுத்துவோம்.

தமிழக அரசே

– முக்கிய குற்றவாளி சாரதாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். முழுமையான விசாரணை நடத்தி தினேஷ் உள்ளிட்ட உண்மைக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்.

– பாலியல் வன்கொடுமை வழக்கை பதிவுசெய்ய வேண்டும்!

– எஸ்.சி எஸ்.டி சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க வேண்டும்!

– குற்றவாளிகளுக்குத் துணை போகும் காவல் துறை அதிகாரி (இன்ஸ்பெக்டர்) கேசவன் மீது நடவடிக்கை எடுத்திடு!
————————————————————————–

சாதி ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் இரமணி தலைமையில்
அருண்சோரி – மாநில அமைப்பாளர், தமிழ்நாடு இளைஞர் இயக்கம்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி சேலம் மாவட்டத் தலைவர் கோ.சீனிவாசன்,                                                                                    தமிழ்த்தேச மக்கள் முன்னணி சேலம் மாவட்டச் செயலாளர் மாரியப்பன்,
தமிழ்நாடு பெண்கள் இயக்க மாவட்ட அமைப்பாளர் இராஜேஸ்வரி
சா.ஒ.முன்னணி மாவட்ட அமைப்பாளர் செல்வம் ஆகியோரைக் கொண்ட குழு தளவாய்ப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்தனர்.

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW