முல்லை பெரியாறுக்குப் பதிலாகப் புதிய அணை கட்ட கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்!
” கேரள அரசு புதிய அணை கட்ட வேண்டுமென்றால் தமிழக அரசின் ஒப்புதல் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.”
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைப் புறக்கணித்து கேரள அரசு முயற்சிப்பதும், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதிப்பதும் கண்டிக்கத்தக்கது.
ஏற்கெனவே கேரள அரசின் புதிய அணைக்கான முயற்சிகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறுப்புத் தெரிவித்து தடுக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறை அனுமதிப்பது இரு மாநில மக்களுக்கு இடையில் மோதலை வளர்க்கும் செயலாகும். மாறி- மாறி ஆட்சிக்கு வரும் காங்கிரஸ், சி.பி.ஐ ( எம் ) கேரள ஆட்சியாளர்களின் முல்லை பெரியாறு அணைக்கு எதிரான செயலைக் கைவிடச் செய்ய தமிழக மக்கள் போராட வேண்டிய தேவை உள்ளது.
முல்லை பெரியாறு அணையைக்காக்க, அணை உள்ளிட்ட, நீர் தேங்கும் நிலம் தமிழகத்திற்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். இந்திய அரசின் மோதவிடும் போக்கிற்கு எதிராகக் களம் காண்போம்!
தென்மாவட்டங்களின் விவசாயம், குடிநீர்த் தேவைக்கான முல்லை பெரியாறு உரிமைக்காகப் போராடுவோம்!
தோழமையுடன்,
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 9443184051