தஞ்சையில்_தோழர்கள்_அருண்சோரி_மற்றும்_பிரபாகரன்_இன்று_கைது!
தஞ்சை ஐ.டீ.ஐ அடிப்படை தேவைகள் கோரி நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் காவல் நிலையத்தில் விசாரிக்க சென்ற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மைய குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் விசாரணை. 2 நாட்கள் முன்பு திலீபன் மற்றும் பகத்சிங் நினைவாக படம் திரையிடும்போதும் காவல் துறை கட்சி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து நிகழ்ச்சியை ரத்து செய்து 10 தோழர்களை கைது செய்து பிறகு விடுவித்தது. தஞ்சை மாவட்டத்தில் ஊக்கத்தோடு செயல்பட்டுவரும் தோழர்களை அடக்கி ஒடுக்க நினைக்கும் இந்த அடிமை எடப்பாடி அரசின் காவல் துறையை வன்மையாகக் கண்டிப்போம்!