அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – சென்னை ஆலோசனை கூட்ட முடிவுகள்
சென்னை 28-06-2018 அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தூத்துக்குடி, சேலம் – சென்னை பசுமை வழிச் சாலை தொடரும் கைது நடவடிக்கைகளை உடனே நிறுத்து!
மக்களுக்காக இயங்கும் இயக்கங்களின் தோழர்களை கைது செய்வதை நிறுத்து!
என்.எஸ்.ஏ. உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ளவர்களை விடுதலை செய்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர், மாவட்ட ஆட்சியாளரைக் கைது செய்!
போராடும் சனநாயக உரிமையைப் பறிக்காதே!
பங்கேற்ற அமைப்புகள்:
தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மக்கள் அதிகாரம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழ்த்தேச மக்கள் கட்சி, இளந்தமிழகம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ ,சுயாட்சி இந்தியா, தமிழக இளைஞர் முன்னேற்றக் கழகம், தமிழ்த்தேசிய மலைநாடு மக்கள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகம், தமிழ்நாடு பாரத மக்ககள் இயக்கம், சமூக ஆய்வு மன்றம் மற்றும் சிலர்.
கூட்ட முடிவுகள்:
- தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குப் பிந்தைய கைதுகள், வழக்குகள், சென்னை – சேலம் எட்டு வழிப் பசுமைச்சாலைக் கைதுகள் என அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது என்பதனை வெளியீடாகக் கொண்டு வந்து பல்வேறு வடிவங்களில் பரப்புரை செய்வது.
- தயாரிப்புப் பொறுப்பு: தோழர்கள் பேரா அ.மார்க்ஸ், செந்தில்.
- தோழர்கள் மீ.த.பாண்டியன், கே.எம்.சரீப், எஸ்.எம்.பாக்கர், பெரியார் சரவணன், தபசிகுமரன், தமிழ்நேயன் உள்ளிட்டோர் போராட்டம் நோக்கி அமைப்புகளின் தலைவர்களைச் சந்திப்பதற்கான குழுவாக முடிவானது.
அடக்குமுறை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
பேச: 9443184051, 8838751701, 9444025408