ஜூன் 20 – தோழர் அண்ணாதுரையின் இரண்டாவது ஆண்டு நினைவு நாள்! காலம் உன் பேர் சொல்லும்! தோழரே எனது செவ்வணக்கம்!
#மாதவரம்_சென்னை_20_06_2018
தோழரே! தலைவரே! அண்ணா! எமது செவ்வணக்கம்!
நாம் விரும்புவதெல்லாம் நடப்பதில்லை. அண்ணா உமது விருப்பம் மேலும் மேலும்
உதிரிகளாகப் பிரிந்து கிடக்கும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றுபட வேண்டும். வலுவான ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சிவப்பு அரசியலை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்பதே! ஆனால் உன்னால், நம்மால் சாதிக்கப்பட்ட ஒற்றுமையும் உனது மறைவுக்குப் பின்னால் பிளவாகிப் போனதே!
மீண்டும் மீண்டும் முயற்சிப்போம்! விழ விழ எழுவோம்!
வலுமிக்க வர்க்க அமைப்புகள் மாற்றத்திற்கான உந்து சக்திகள். கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் தூத்துக்குடியில் வெடித்துக் கிளம்பியதே! நில உரிமைக்கான போராட்டம் நிலப் பகிர்விற்கான போராட்டமாக விரிவடைய வேண்டுமே! நிச்சயமாக அதை நோக்கிப் பயணம் செய்வோம்!
வர்க்கப்போராட்டக் களத்தில் சாதி ஒழிப்புக் கடமையை முன்னெடுக்க நமது முயற்சியான சாதி ஒழிப்பு முன்னணியை வலுப்படுத்துவோம்!
தனித்தனியாக சிதறிக்கிடக்கும் போராடும் மக்கள் அமைப்புகளை ஒன்றுபடுத்தி மக்கள் முன்னணி கட்டுவது உமது விருப்பம். முன்னெடுத்திருக்கிறோம். தமிழ்த்தேச மக்கள் முன்னணியைக் கட்டமைத்துள்ளோம்! முயற்சிக்கிறோம்!
இரண்டாவது ஆண்டு நினைவு நாள்! காலம் உன் பேர் சொல்லும்! தோழரே எனது செவ்வணக்கம்!
மீ.த.பாண்டியன், தலைவர்
தமிழ்த்தேச மக்கள் முன்னணி