தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்
#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது.
சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார்.
தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன்,
சமநீதி வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் கனகவேல்,
ம.க.இ.க. தோழர் கதிரவன்,
ஆரியபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டி,
மக்கள் அதிகாரம் தலைவர் தோழர் இராஜூ, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் செல்லக்கண்ணு, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் தோழர் தென்னரசு,
சிபிஐ தோழர் செயக்குமார் ஆகியோர் வீரவணக்க உரையாற்றினர்.
விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் குருசாமி தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.