தி_வேல்முருகன் மற்றும் கே_எம்_சரீப்_கைது_சிறை! வன்மையாகக் கண்டிக்கிறேன்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட் குடும்பங்களை பார்க்க தூத்துக்குடி சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தோழர் வேல்முருகன் தூத்துக்குடி விமானநிலையத்தில் டோல்கேட் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழலில் சிறை வைக்கப்பட்டார். நேற்று அவர்மீது இராசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி அரசின் இச்செயல் நெருப்பை பொட்டலத்தில் கட்டுவது போன்றது. வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தூத்துக்குடிக்கு 30 அன்று சென்று மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து உதவி செய்த நடிகர் இரஜினிகாந்த் தனது ஊடகச் சந்திப்பில் வன்முறை துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் சமூக விரோதிகள்தான் என்றார். தொழில் வளர்ச்சி இல்லையென்றால் வேலை வாய்ப்பு இருக்காது, எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என அரசின் குரலாக ஒலித்துச் சென்றார். பல்வேறு இயக்கத் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் வேல்முருகனை தூத்துக்குடி வரவிடாமல் கைது செய்வதும், நடிகர் இரஜினியை சட்டம் ஒழுங்கு நெருக்கடிக்குள்ளாகுமளவிற்கு அனுமதிப்பதும் நேர்மாறான செயலாகும். தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் தோழர் கே.எம்.சரீப் தலைமையில் சென்னை போயஸ்கார்டன் இரஜினி வீட்டை முற்றுகையிட்ட 30 தோழர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளது சென்னை காவல்துறை.
ஒருபுறம் துப்பாக்கிச் சூடு வரை அத்துமீறும் தமிழக அரசின் காவல்துறை, மறுபுறம் தட்டிக்கேட்கும் தலைவர்களைக் கைது செய்து சிறைப்படுத்துவது சனநாயக உரிமையைப் பறிக்கும் செயலாகும். தமிழக அரசின் இந்த அணுகுமுறை எதிர்ப்பைத் தெரிவிக்கும் சட்டப்பூர்வ உரிமையைப் பறிக்கிறது. வழக்குககளைத் திரும்பப்பெறுவதோடு தலைவர்களை மற்றும் தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மீ.த.பாண்டியன், தலைவர்m தமிழ்த்தேச மக்கள் முன்னணி Thamiznation’s people’s Front
பேச: 9443184051