முத்துநகர் போராட்டமும் அரச பயங்கரவாதமும் – தோழர் அருண் நெடுஞ்செழியன்

23 May 2018

போராடுவார்கள் கைகளில் பதாகைகள்,போராட்டத்தை தணிப்பவர்கள் கைகளில் மொத்தமாக துப்பாக்கிகள்.பழைய காலத்து எண்ணாயிரம் சமணக் கழுவேற்றம் போல நேற்றைய முத்துநகர மனித நரவேட்டை நடத்தி முடிக்கப்பட்டது. பழைய காலத்தவர்கள் ,நாகரிகம் என்றோ,சட்ட ஒழுங்கு என்றோ கூக்குரலிடவில்லை.அவர்கள் கைகளில் பல் குழல் துப்பாக்கிகள் இல்லை,இவைதான் வேறுபாடு.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நேற்றைய முத்துநகர் போராட்டத்தில்.இதுவரை பதினோரு போராளிகள் போலீஸ் நரவேட்டையில் களப் பலி ஆயியுள்ளார்கள்.பெண் ஒருவர் வாயில் சுடப்பட்டதும்,போலீஸ் ஒருவர் வாகனத்தின் மேலறி குறிபார்த்து வேட்டை விலங்கை வேட்டையாடுவது போன்ற சுடுவதும் நாகரிக அரசின் பெயரால் வர்க்க ஆட்சியை நடுத்துபவர்களின் காட்டுமிராண்டித்தனத்தை உள்ளது உள்ளபடியே வெளிக்காட்டியுள்ளது.
இந்த பயங்கர படுகொலைக்கு பிறகு முதலாளித்துவத்தின் மறுபக்கத்தை,அதன் சொந்த கொடூரத்தை அதன் சொந்தப் பத்திரிகை அருவருப்பான வகையில் வர்ணிகின்றன.இரத்த வெறி பிடித்த வேட்டைநாய்களின் பேய்க் கூடாரமாக முத்துநகர் ஏன் மாற்றப்பட்டது?
நாகரிகத்தில் பின்னால் இந்த அரசு மறைத்து வைத்திருந்த பேய் உணர்சிகள் நேற்று கோரமாக உள்ளது உள்ளபடி வெளிப்பட்டதாலேயே அவ்வாறாக மாற்றப்பட்டது.தனது வர்க்க நலனுக்கு எதிராக போராடுகிற மக்கள் கிலிருந்து எழும் போதெல்லாம்,நாகரிக அரசு தனது புனித பாசாங்குகளை மறைப்பதற்கு இடமில்லாமல்,தனது வர்க்க சார்பை வெளிப்படுத்துகிறது.

வேதாந்தாவின் தொடரும் அராஜகம் …

லண்டனை தலைமையிடமாக கொண்ட வேதாந்தா நிறுவனம் உலகளவில் சுற்றுச்சூழல் விதி மீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் பெயர் போனது . ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள ஜாம்பியா(Zambia)முதல் ஒடிசா நியாம்கிரி சேலம் மால்கோ தொழிற்சாலை வரை அனைத்து இடங்களிலும் இது நீள்கிறது.தூத்துக்குடியிலும் ஆலை தொடங்கிய நாள் முதல் தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

நச்சுக் கழிவுகளை போதிய சுத்திகரிப்பு செய்யாமல் வெளியிடுவதால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீரில் நச்சு தன்மையுடைய வேதிப் பொருட்கள் கலந்து குடிக்க லாயக்கற்றதாகி விட்டது. இதனால் பொது மக்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

தூத்துக்குடியில் மட்டுமல்ல. சேலம், நியாமகிரி,சுகிந்தா ( ஓடிஸா), ஜாம்பியா (Zambia) என உலகெங்கிலும் வேதாந்தா நிறுவனம் காலடி எடுத்து வைத்த எல்லா இடங்களிலும் மனித உரிமை மீறல்களை எடுபிடி அரசுகளின் உதவியுடன் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

ஓடிசா நியாமகிரியில் வேதாந்தா ஆலையை எதிர்த்து போராடிய பழங்குடியின தலைவர்களை இன்றும் காவல் துறை, துணை இராணுவத்தினர் துணைக் கொண்டு தொடர் சித்தரவதை செய்து கொலை / தற்கொலைக்கு தூண்டி வருகிறது.

96 ல் தூத்துக்குடியில் சாதிக் கலவரத்தை தூண்டிவிட்டு அதன் பின்னணியில் ஆலையை திறந்த ஸ்டெர்லைட் வேதாந்தா இன்று ஒற்றுமையாய் போராடும் மக்களை அச்சுறுத்தி துப்பாக்கி குண்டுகளின் உதவியுடன் தனது ஆலையை விரிவாக்க முயல்கிறது.

இதில்,சமுதாயாத்திற்கு மேலானதாக தன்னை நிலை நிறுத்திக் கொள்கிற அரசு,மக்களின் வரிப்பணத்தை கொண்டு கஜானாவை நிருப்பியபடி ,1 விழுக்காட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்கு மீதுமுள்ள 99 விழுக்காட்டு மக்களான விவசாயிகள்,மீனவர்கள்,ஆலைத் தொழிலாளிகள்,வர்த்தக வியாபாரிகள் என உலகெங்கிலும் உள்ள உழைக்கும் மக்களே இக்கேடுகளால் பெரும் துயரத்தை எதிர்கொண்டுவருகின்றனர்.
99 விழுக்காட்டு இம்மக்களின் வரிப்பணத்தில்தான ஆயுதம் தரிக்கிறது,சிறை கட்டுகிறது,பொது அதிகாராம் எனும் பெயரில் மக்களை ஒடுக்குகிறது.முதலாளிகளுக்கு சலுகைகளையும் நமக்கு கடமைகளையும் வழங்குறது.முதலாளிகளுக்கு வாழ்வையும் போராடுகிற மக்களுக்கு  சாவையும்வழங்குகிறது.

 

நேற்றைய போராட்டத்தில்,ஏவல் போலீஸ் படையானது ,போராட்டத்தை தணிக்கிற நடைமுறைகளை பின்பற்றாமல் காட்டு விலங்கை வேட்டையாடுவது போல எஸ் எல் ஆர் துப்பாக்கியால் மக்களை சுட்டுக்கொன்றது.இந்த காட்டுமிராண்டித்தன ஒடுக்குமுறையின் வழியே சுரண்டலுக்கு எதிராக போராடுகிற தமிழக மக்கள் எழுச்சிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைகிறது.முத்துநகர மக்கள் போராட்டம் ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டாலும்,இப்போராட்டம்புரட்சிகர சேமிப்பு சக்திகளாக மக்களின் மனங்களிலே வாழும்.உயிர் நீத்த போராளிகளுக்கு வீர வணக்கம்.போராளிகளின் இலட்சியத்தை முன்னெடுத்து செல்வோம்.

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW