துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான எஸ்.பி. செல்வ நாகரத்தினம் , மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் மீது கொலை வழக்குப் பதியவேண்டும்!
- காலையில் கலெக்டர் ஆபிஸ் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியது காவல் துறை . அதில் மட்டும் 11 பேர் கொல்லப்பட்டதாக செய்தி வந்தது! 17 வயது மாணவி, தமிழரசன், சண்முகம் உள்ளிட்டோர் வீரச்சாவை அடைந்தனர்.
- 74 வயதுடைய அருட்தந்தை டைசின் ஜெயசீலன் வயிற்றில் குண்டடிப் பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்.
- தமிழக முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவை சந்திப்பு முடிந்து மாவட்ட் ஆட்சியரிடம் அறிக்கை கேட்பதாக சொல்லிக் கொண்டே இன்னொருபுறம் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது எடுபிடி அரசு.
- 4 மணி அளவில்), கலெக்டர் ஆபிஸில் இருந்து 14 கி.மீ. தொலைவில் திரேஸ்புரத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு! கடற்கரை கிராமங்களை மிரட்டும் நோக்கில் திரேஸ்புரத்திற்கு போன எஸ்.பி.யிடம் மக்கள் துப்பாக்கிச்ச் சூடு நடத்தி எங்களைக் கொன்றுவிட்டு எதற்காக இங்கே வருகிறீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்கு துப்பாக்கியின் மூலமே பதிலளித்துனர். மீண்டும் துப்பாக்கிச் சூடு..நான்கு பேர் கொல்லப்பட்டுவிட்டனர்! அதில் மூவர் பெண்கள்.
- துப்பாக்கிக் குண்டுகள் காலில் பாயவில்லை. அவை குறி வைத்து இடுப்புக்கு மேல் தான் சுடப்பட்டுள்ளன. அதுவும் போராட்ட முன்னணிகள் குறிவைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தமிழரசன் பலியானவர்களின் ஒருவர்.
100 நாட்களைக் கடந்து நீடித்து வரும் அமைதிவழிப் போராட்டத்தின் மீது வன்முறையை ஏவி மக்களை அச்சுறுத்திப் போராட்டத்தைப் பிசுபிசுக்க செய்வதற்காக வேதாந்தா நிறுவனமும் எடப்பாடி அரசின் காவல்துறை திட்டமிட்டு நடத்திவரும் கொலைவெறியாட்டம் அரங்கேறி வருகிறது. இதன் மூலம் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லும் நோக்கத்தோடு செயல்படுகிறது தமிழக அரசு.
வேதாந்தா குழுமத்தின் நிறுவனமான ஸ்டெர்லைட்டுக்காக தூத்துக்குடி நகரத்தைக் கொலைக்களம் ஆக்கியுள்ளது எடப்பாடி அரசு!
கார்பரேட்களின் காலை நக்கிப் பிழைக்கும் இந்த எடுபிடி அரசுக்கு பாடம் புகட்டுவோம்!