தமிழ்த்தேசியத் திருவிழா பொங்கல் நாளன்று வங்கித் தேர்வு நடத்துவதைக் கைவிடு! – மீ.த.பாண்டியன்

14 Jan 2023

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு சனவரி 15 பொங்கல் தினத்தன்று நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஒருபுறம் தேசிய இனங்களின் அனைத்து விழாக்களுக்கும் இந்திய அடையாளங்களைத் திணிக்கும் செயலை ஒருபுறம் செய்து கொண்டே, மறுபுறம் தேசிய இனங்களின் உணர்வுகளை, உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இந்திய இந்துத்துவ தேசிய வெறியாகும். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மற்றும் தோழர்கள் நடத்தும் உள்ளிருப்புப் போராட்டத்தை வாழ்த்துகிறோம். தீபாவளி நாளன்று இது போல் அனைத்திந்தியத் தேர்வை அறிவிக்குமா இந்திய அதிகாரத்திமிர்.

தமிழ்த்தேசியத்தின் திருவிழா பொங்கல் தமிழ்த்தேசம் முழுவதும் வாழும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுவதாகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும்” எனும் பண்பாட்டுப் பார்வையையும், ” தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் புதிய நம்பிக்கையையும் தமிழ்நாடு வாழ் அனைத்துத் தமிழர்களுக்கும் வழங்கும் நாளே தை முதல் நாள்!

இந்திய அரசு வங்கி (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நாளன்று அறிவித்துள்ள தேர்வைத் தள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

தமிழ்த்தேச மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு & பொங்கல் வாழ்த்துகள்!
போராட்ட உணர்வைப் புதுப்பித்துக் கொள்வோம்!
இந்திய இந்துத்துவ அரசியலுக்கு எதிராகப் போராடச் சபதமேற்போம்!

தோழமையுடன்
மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி
பேச: 94431 84051

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW