மே-1 சர்வதேச உழைப்பாளர் தின அறைகூவல்
மானுட சமூகத்தின் ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே ! இன்று நிலவுகின் நவீன வளர்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது மனித சமூகத்தின் அரசியல்-பொருளாதாரம்- சமூக கலை -பண்பாட்டு வளர்ச்சிகள் அத்தனையும் மனித உழைப்பாள் உ ருவானது தான். ஆன்டாண்டு காலமாய் மாற்றங்களுக்கான, உரிமைகளுக்கான நீண்ட நெடிய போராட்டத்தில் உழைத்த “நமது முன்னோடிகளுக்கு மே நாள் அஞ்சலியை செலுத்துவோம். கொடூர சுரண்டலுக்கும் கொலைக் களமாக இயங்கிய முதலாளிய . ஆலைகளின் ஈவு இரக்கமற்ற உழைப்பு கொள்ளைக்கும் எதிராக அணிதிரட்டப்பட்ட போராட்டம் தாள் 133 ஆண்டு களுக்கு முன்பு வெடித்தப் போராட்டம்.
8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர பொழுதுபோக்கு மட்டுமல்லாது உணவு, உடை, இருப்பிட உத்தரவாதம் கோரி ஆயிரக்கணக்கான தொழிலாளகள் அமெரிக்காவின் தொழில் நகரமான சிக்காகோவில் வெள்ளைக்கொடியேந்தி போராடினர். ஆனால் முதலாளிகளும் அமெரிக்க அரசும் அம்மக்களை அடித்து, துப்பாக்கியால் சுட்டு நரவேட்டையை நடத்தியது. வெள்ளைக்கொடி தொழிலாளர்களின் ரத்தத்தால் தோய்ந்து
சிவப்பானது . இன்றைக்கு தொழிலாளர்கள் பெற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் இப்படிப்பட்ட ப் போராட்டத்தின் மூலம் பெற்றது தான். முதலாளிகளும் அரசும் தானாக முன் வந்து கொடுத்தது இல்லை.
சிவப்பானது . இன்றைக்கு தொழிலாளர்கள் பெற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் இப்படிப்பட்ட ப் போராட்டத்தின் மூலம் பெற்றது தான். முதலாளிகளும் அரசும் தானாக முன் வந்து கொடுத்தது இல்லை.
தமிழகத்தில் சிங்காரவேலர் தான் முதல் மே தின தொழிலாளர் பேரணியை நடத்திக் காட்டியவர். கூலி உயர்வு சங்கம் வைக்கும் உரிமை, கேண்டீன் பணி பாதுகாப்பு, பேரு கால விடுப்பு, ஓய்வூதியம், சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு என ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற வாழ்வுரிமைகள் சட்டப்படியான தொழிலாளர் சட்டங்களால் நடைமுறையில் இருந்து வருகிறது. உலகமய- தாராளமய- தனியார்மயமாக்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகள் லாபத்திற்கு நாம் போராடிப் பெற்ற அனைத்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. குலத்தொழில், வெட்டி உமைப்பு சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக பிற்போக்கு நிலவுடமை சுரண்டல் முறையை தகர்க்த கிராமப்புற கூலி ஏழை விவசாய மக்களின் நீண்ட கால போராட்டத்தின் மூலம் தான் குறைந்த பட்சகூலி சட்டம் கொண்டு வரப்பட்டது. செங்கொடியின் அணிவகுப்பில் பெறப்பட்ட நமது உரிமைகளை காவி- கார்ப்பரேட் மோடி கும்பல் குழி தோண்டி புதைத்து வருகிறது.
உற்பத்தித்துறை, சேவைத் துறை, வேளாண்மை என அனைத்தும் கருப்பு பண ஒழிப்பு, ஜி.எஸ்.டி ஒன்ற பெயரில் நாசமாக்கப்பட்டு விட்டது. ஆட்குறைப்பு, ஆலை மூடல், சம்பள பாக்கி, வேலைவாய்ப்பின்மை என்பது நம் சமூகத்தில் நிரந்தர நோயாதிவிட்டது. இதற்கு எதிராக போராடுவதும், பறிக்கப்படும் நமது உரிமை மீட்டெடுப்பதும் மே நாள் சபதமாகவும் உழைக்கும் மக்களுக்காள அறைகூவலாகவும் சோசலிச தொழிலnளர் மையம் விடுக்கின்றது.
விநாயகம்
தலைவர்
சோசலிச தொழிலாளர் மையம் (SWC)
தலைவர்
சோசலிச தொழிலாளர் மையம் (SWC)