‘திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கு – அப்பாவி இளைஞர்கள் மீது போடப்பட்ட UAPA வழக்கை திரும்பப்பெறக்கோரியும், உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கும்பகோணத்தில் அனைத்துக்கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் – 23.02.19

17 Feb 2019

அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் இன்று மாலை 6 மணிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் சி.பி.ஐ.(எம்) மாவட்ட செயலாளர் G.நீலமேகம், R.மனோகரன், சி.பி.ஐ மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் சி.சந்திரகுமார், தமிழ்த் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் அய்யனாவரம் சி.முருகேசன், காங்கிரஸ் மாநகர மாவட்ட செயலாளர் P.G.ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் தமிழருவி, சா. விவேகானந்தன், SDPI மாநகர செயலாளர்  முகமது இக்பால், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகி சதிஸ், விடுதலை தமிழ்புலிகள் கட்சி நிறுவனர் குடந்தை அரசன், தமிழ்ர்தேசிய பேரியக்க நிர்வாகி பழ. இராசேந்திரன், மனிதநேய  ஜனநாயக கட்சி நிர்வாகி அகம்மதுகபீர், தமிழ்த்தேச முன்னணி ஆலம்கான் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி நிர்வாகிகள் தில்லைவனம், துரைமதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இச்சம்பவத்தை தமிழக அரசு உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு அமைத்து நியாயமான விசாரணை அடிப்படையில் உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தஞ்சை மாவட்ட அனைத்து பகுதி மக்களும் மதவெறி சக்திகளின் சூழ்ச்சிக்கு இடம் கொடுக்காமல், ஒற்றுமையையும், மதநல்லிணக்கத்தையும் தொடந்து பேணிப் பாதுகாக்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளின் சார்பில் வேண்டுகோள்விடுக்கப்படுகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி வருகின்ற பிப்.-23 தேதி காலை 10 மணிக்கு கும்பகோணத்தில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் பெருந்திரள் ஆர்பாட்டம் நடந்த முடிவெடுக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களும் திரளாக பங்கேற்க வேண்டுமென தஞ்சையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

  • மக்கள் முன்னணி ஊடகம்
RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW