விருதுநகர் மாவட்ட ஆட்சியரே ! 48 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஊழியர்களை பழிவாங்காதே!

15 Nov 2018

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் அவர்களின் வாய்மொழி உத்தரவில் 48 பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடிச் சமூகப் பணியாளர்கள் பணி செய்ய அனுமதி மறுப்பு!

விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் மாணவர் விடுதிச் சமையலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் 11 பெண்கள் உட்பட      48 ஊழியர்களை வேலை செய்ய அனுமதிமறுப்பு –  வாய்மொழி உத்தரவாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

பட்டியல் சாதிகளான தேவேந்திரர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்தியர்கள் மற்றும்

குறவர் பழங்குடிகள் 48 பேரும் கடந்த திங்கள் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அதிகாரிகளின் பொய் வாக்குறுதிகளுக்கு மயங்காமல், தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். குழந்தைகளையும் போராட்டக்களத்தில் தங்களோடு பங்கெடுக்க வைத்திருப்பதால் குழந்தைகளைச் சித்ரவதை செய்வதாக வழக்குப் போடுவோம் என குழந்தைகள் நலத்துறையைத் தூண்டும் மாவட்ட ஆட்சியரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் போராடி வருகின்றனர்.

தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் போராடும் பணியாளர்களைச் சந்தித்து, வாழ்த்திப் பேசி ஆதரவைத் தெரிவித்தார். உடன் மாவட்ட அமைப்புக் குழுத் தோழர் இராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கெடுத்தனர்.

போராட்டத்தை வழிநடத்தும் ‘தமிழ்நாடு ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்கத்’ தோழர்களும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர், மாவட்டச் செயலாளர் தோழர் கண்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

தலித் விடுதலை இயக்கத் தோழர் செ.பீமாராவ் சாக்யா போராடுபவர்களுக்கு ஆதரவாகத் துணை நிற்கிறார்.

 

#விருதுநகர்_மாவட்ட_ஆட்சியரே!

வேலை மறுக்கப்பட்டோருக்கு வேலை வழங்கு! அல்லது பணி நீக்கம் என எழுத்து மூலம் உத்தரவு ஆணை தனித்தனியாக வழங்கு!

 

இடதுசாரிகள், பட்டியல் சமூக அமைப்புகள்,

மாவட்ட ஆட்சியரின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனரின் அடாவடித்தனத்துக்கு எதிரான கண்டனத்தைத் தெரிவித்துப் போராடும் மக்களுக்குத் துணை நிற்க வலியுறுத்துகிறேன்.

 

இன்று இரவோடு இரவாக அனைவரும் கைது கைதுசெய்யப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

 

தோழமையுடன்,

மீ.த.பாண்டியன், தலைவர்,

தமிழ்த்தேச மக்கள் முன்னணி

பேச: 94431 84051

 

RELATED POST

Leave a reply

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW