காவேரிப்படுகையை அழிக்க வரும் வேதாந்த நிறுவனத்துக்கு எதிராக கிராமசபை தீர்மானம் நிறைவேற்ற செம்பனார்கோவில் BDO மறுப்பு.
இன்று காலை நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பிரசலூர் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் கிராம மக்கள் சார்பாக தமிழக நிலம் – நீர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளரும், தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் நாகை மாவட்ட செயலாளருமான தோழர் இரணியன் தலைமையில் வேதாந்தா நிறுவனத்தை எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம் என்கிற தீர்மானத்தை நிறைவேற்ற கூறி மனு அளிக்கப்பட்டது, இந்த கோரிக்கையை கிராமசபை தீர்மானத்தில் சேர்க்க BDO மறுத்ததால் கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினார்.